திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க!

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க!

இந்தக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து தொகுத்த திரு இரா. அசோகன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் இளநிலைப் பட்டமும் மற்றும் தொழில்துறை மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். திறந்த மூல மென்பொருட்களிலும், தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றித் தமிழில் எழுதுவதிலும் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டவர். 2011 ஆம் ஆண்டில் இவர் எழுதிய குனுகாஷ் (Gnucash) 2.4 சிறு வணிகக் கணக்குப்பதிவு: துவக்க நிலைக் கையேடு புத்தகத்தைப் பாக்ட் (Packt) பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து அதே ஆண்டில் திறந்த மூல மென்பொருள் குனுகாஷின் பயனர் இடைமுகத்தைத் தமிழாக்கம் செய்தார். பின்னர் இவர் லிபர்ஆஃபிஸ் (LibreOffice) பயனர் இடைமுகத்தின் தமிழாக்கத்துக்கும் பங்களித்தார். 2015 இல், கணியம் இணைய இதழில் தகவெளிமை (Agile) மற்றும் மொய்திரள் (Scrum) பற்றி ஒரு கட்டுரைத் தொடரை எழுதினார். இவை பின்னர் திரு டி. சீனிவாசன் அவர்களால் “எளிய தமிழில் Agile / Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை” என்ற பெயரில் ஒரு மின்னூலாக வெளியிடப்பட்டது. இவர் தமிழில் இயல்மொழி ஆய்வுக்கான (Natural Language Processing) நிரல்கள், கருவிகள் மற்றும் தரவுகள் GitHub களஞ்சியத்தைப் பராமரிக்கிறார்.

இத்தொடரில் உள்ள கட்டுரைகள் யாவையும் திறந்த மூல மென்பொருள் வழியில் செல்வது பற்றியவை. நீங்கள் மூடிய மூலம் அல்லது தனியுரிம மென்பொருளை (Proprietary Software) விட்டு விலகிச் செல்ல வழி தேடும் தனி நபராக இருந்தாலும் சரி அல்லது தொழிலில் வெற்றி பெற உதவும் செயலிகளுக்கு மாற்றாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் (Free Open Source Software FOSS) தேடும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தக் கட்டுரைகள் உங்களுக்குத் திறந்த மூல உலகத்தில் கால் ஊன்றுவது எப்படி என்று காட்டும். இவற்றில் பல கட்டுரைகள் எப்படி வல்லுநர்கள் திறந்த மூல மென்பொருட்கள்பற்றித் துவக்கத்தில் கண்டறிந்தார்கள் மற்றும் அதன் பின்னர் தம் வேலைவாழ்க்கையில் செழிப்பாக உள்ளனர் என்பது பற்றி. மற்றவை ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தகுந்த திறந்த மூல மென்பொருள் தேர்வு செய்வது பற்றியும், ஒரு திறந்த மூலச்செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றியும் மற்றும் உங்களுடைய வட்டாரத்துக்கோ அல்லது ஊருக்கோ திறந்த மூல மென்பொருளின் திறனை அறிமுகப்படுத்தவும் தேவையான கையேடுகள்.

எதையும் புதிதாகத் தொடங்குவது எளிதல்ல என்பது ஞாபகம் இருக்கட்டும். ஆனால் ஒரு புத்த மதப் பழமொழியில் கூறியது போல, “போய்ச் சேர்வதை விட நன்றாகப் பயணம் செய்வதே முக்கியம்”. நீங்கள் நன்றாகத் திறந்த மூல வழியில் பயணிக்கவும், மற்றும் வரும் பல ஆண்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யவும் இந்தக் கட்டுரைகள் உதவும் என்று நாம் நம்புகிறோம்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! epub” thirandah_moola_menporulil_mudhal_adi_eduthu_vaikalam_vanga.epub – Downloaded 1212 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! A4 PDF” thirandah_moola_menporulil_mudhal_adi_eduthu_vaikalam_vangaA4.pdf – Downloaded 2660 times –

செல்பேசிகளில் படிக்க

Download “திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 6 inch PDF” thirandah_moola_menporulil_mudhal_adi_eduthu_vaikalam_vanga6inch.pdf – Downloaded 634 times –

மூலம் : opensource.com

தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

மின்னூலாக்கம் : த. தனசேகர்

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை : CC-BY-SA-3.0

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 351

பிப்ரவரி 26 2018

மேலும் சில கணினி நூல்கள்

  • எளிய தமிழில் JavaScript
  • திறந்த மூலத்திற்கு எவ்வாறு பங்களிப்பது?
  • எளிய தமிழில் PHP
  • திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க!

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.