திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க!
மூலம் : opensource.com
தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்
மின்னஞ்சல் : ashokramach@gmail.com
அட்டை படம் மூலம் : opensource.com
மின்னூலாக்கம் : த . தனசேகர்
மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை :
creativecommons.org/licenses/by-sa/3.0/ பக்கத்தில் உள்ள கிரியேடிவ் காமன்ஸ் நெறிகளையொத்து வழங்கப்படுகின்றன.
இதன்படி,
கணியத்தில் வெளிவரும் கட்டுரைகளை கணியத்திற்கும் படைத்த எழுத்தாளருக்கும் உரிய சான்றளித்து, நகலெடுக்க, விநியோகிக்க, பறைசாற்ற, ஏற்றபடி அமைத்துக் கொள்ள, தொழில் நோக்கில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
முன்னுரை
இந்தக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து தொகுத்த திரு இரா. அசோகன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் இளநிலைப் பட்டமும் மற்றும் தொழில்துறை மேலாண்மையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். திறந்த மூல மென்பொருட்களிலும், தகவல் தொழில்நுட்பத்தைப்பற்றி தமிழில் எழுதுவதிலும் நீண்ட காலமாக ஆர்வம் கொண்டவர். 2011 ஆம் ஆண்டில் இவர் எழுதிய குனுகாஷ் (Gnucash) 2.4 சிறு வணிகக் கணக்குப்பதிவு: துவக்க நிலைக் கையேடு புத்தகத்தை பாக்ட் (Packt) பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து அதே ஆண்டில் திறந்த மூல மென்பொருள் குனுகாஷின் பயனர் இடைமுகத்தை தமிழாக்கம் செய்தார். பின்னர் இவர் லிபர்ஆஃபிஸ் (LibreOffice) பயனர் இடைமுகத்தின் தமிழாக்கத்துக்கும் பங்களித்தார். 2015 இல், கணியம் இணைய இதழில் தகவெளிமை (Agile) மற்றும் மொய்திரள் (Scrum) பற்றி ஒரு கட்டுரைத் தொடரை எழுதினார். இவை பின்னர் திரு டி. சீனிவாசன் அவர்களால் “எளிய தமிழில் Agile / Scrum – மென்பொருள் திட்ட மேலாண்மை” என்ற பெயரில் ஒரு மின்னூலாக வெளியிடப்பட்டது. இவர் தமிழில் இயல்மொழி ஆய்வுக்கான (Natural Language Processing) நிரல்கள், கருவிகள் மற்றும் தரவுகள் GitHub களஞ்சியத்தைப் பராமரிக்கிறார்.
எந்த ஒரு ஆய்வுப் பயணத்திலும் முதல் அடி எடுத்து வைக்கும் பொழுது மனதில் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும். புதிய இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரலாம், முன்னால் கண்டறியாத நிலவெளிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கலாம் மற்றும் சேருமிடம் எப்படியிருக்கும் என்பது மர்மமாகவே இருக்கும். எனினும் இதே காரணங்கள்தான் நாம் துணிந்து முற்பட உற்சாகமளிக்கும், நம் முயற்சியைப் பயனுடையதாக்கும்.
இத்தொடரில் உள்ள கட்டுரைகள் யாவையும் திறந்த மூல மென்பொருள் வழியில் செல்வது பற்றியவை. நீங்கள் மூடிய மூலம் அல்லது தனியுரிம மென்பொருளை (Proprietary Software) விட்டு விலகிச் செல்ல வழி தேடும் தனி நபராக இருந்தாலும் சரி அல்லது தொழிலில் வெற்றி பெற உதவும் செயலிகளுக்கு மாற்றாக கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் (Free Open Source Software FOSS) தேடும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு திறந்த மூல உலகத்தில் கால் ஊன்றுவது எப்படி என்று காட்டும். இவற்றில் பல கட்டுரைகள் எப்படி வல்லுநர்கள் திறந்த மூல மென்பொருட்கள் பற்றி துவக்கத்தில் கண்டறிந்தார்கள் மற்றும் அதன் பின்னர் தம் வேலைவாழ்க்கையில் செழிப்பாக உள்ளனர் என்பது பற்றி. மற்றவை ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தகுந்த திறந்த மூல மென்பொருள் தேர்வு செய்வது பற்றியும், ஒரு திறந்த மூலச்செயலியை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றியும் மற்றும் உங்களுடைய வட்டாரத்துக்கோ அல்லது ஊருக்கோ திறந்த மூல மென்பொருளின் திறனை அறிமுகப்படுத்தவும் தேவையான கையேடுகள்.
எதையும் புதிதாகத் தொடங்குவது எளிதல்ல என்பது ஞாபகம் இருக்கட்டும். ஆனால் ஒரு புத்த மதப் பழமொழியில் கூறியது போல, “போய்ச் சேர்வதை விட நன்றாகப் பயணம் செய்வதே முக்கியம்”. நீங்கள் நன்றாகத் திறந்த மூல வழியில் பயணிக்கவும், மற்றும் வரும் பல ஆண்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யவும் இந்தக் கட்டுரைகள் உதவும் என்று நாம் நம்புகிறோம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/thirandah_moola_menporulil_mudhal_adi_eduthu_vaikalam_vanga_201802
புத்தக எண் – 351
பிப்ரவரி 26 2018