fbpx

கணியம் அறக்கட்டளை

rect224

 

தொலை நோக்கு – Vision

தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்

பணி இலக்கு – Mission

அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.

 

தற்போதைய செயல்கள்

  • கணியம் மின்னிதழ் – kaniyam.com
  • கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இலவச தமிழ் மின்னூல்கள் – FreeTamilEbooks.com

 

கட்டற்ற மென்பொருட்கள்

 

அடுத்த திட்டங்கள்/மென்பொருட்கள்

 

  • விக்கி மூலத்தில் உள்ள மின்னூல்களை பகுதிநேர/முழு நேரப் பணியாளர்கள் மூலம் விரைந்து பிழை திருத்துதல்
  • முழு நேர நிரலரை பணியமர்த்தி பல்வேறு கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குதல்
  • தமிழ் NLP க்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்
  • கணியம் வாசகர் வட்டம் உருவாக்குதல்
  • கட்டற்ற மென்பொருட்கள், கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வளங்களை உருவாக்குபவர்களைக் கண்டறிந்து ஊக்குவித்தல்
  • கணியம் இதழில் அதிக பங்களிப்பாளர்களை உருவாக்குதல், பயிற்சி அளித்தல்

 

  • மின்னூலாக்கத்துக்கு ஒரு இணையதள செயலி
  • எழுத்துணரிக்கு ஒரு இணையதள செயலி
  • தமிழ் ஒலியோடைகள் உருவாக்கி வெளியிடுதல்
  • OpenStreetMap.org ல் உள்ள இடம், தெரு, ஊர் பெயர்களை தமிழாக்கம் செய்தல்
  • தமிழ்நாடு முழுவதையும் OpenStreetMap.org ல் வரைதல்
  • குழந்தைக் கதைகளை ஒலி வடிவில் வழங்குதல்
  • Ta.wiktionary.org ஐ ஒழுங்குபடுத்தி API க்கு தோதாக மாற்றுதல்
  • Ta.wiktionary.org க்காக ஒலிப்பதிவு செய்யும் செயலி உருவாக்குதல்
  • தமிழ் எழுத்துப் பிழைத்திருத்தி உருவாக்குதல்
  • தமிழ் வேர்ச்சொல் காணும் கருவி உருவாக்குதல்
  • எல்லா FreeTamilEbooks.com மின்னூல்களையும் Google Play Books, GoodReads.com ல் ஏற்றுதல்
  • தமிழ் தட்டச்சு கற்க இணைய செயலி உருவாக்குதல்
  • தமிழ் எழுதவும் படிக்கவும் கற்ற இணைய செயலி உருவாக்குதல் ( https://aamozish.com/Course_preface போல)

 

மேற்கண்ட திட்டங்கள், மென்பொருட்களை உருவாக்கி செயல்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை. உங்களால் எவ்வாறேனும் பங்களிக்க இயலும் எனில் உங்கள் விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

 

வெளிப்படைத்தன்மை

கணியம் அறக்கட்டளையின் செயல்கள், திட்டங்கள், மென்பொருட்கள் யாவும் அனைவருக்கும் பொதுவானதாகவும், 100% வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும். இந்த இணைப்பில் செயல்களையும், இந்த இணைப்பில் மாத அறிக்கை, வரவு செலவு விவரங்களுடனும் காணலாம்.

கணியம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் யாவும் கட்டற்ற மென்பொருட்களாக மூல நிரலுடன், GNU GPL, Apache, BSD, MIT, Mozilla ஆகிய உரிமைகளில் ஒன்றாக வெளியிடப்படும். உருவாக்கப்படும் பிற வளங்கள், புகைப்படங்கள், ஒலிக்கோப்புகள், காணொளிகள், மின்னூல்கள், கட்டுரைகள் யாவும் யாவரும் பகிரும், பயன்படுத்தும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் இருக்கும்.

நன்கொடை

உங்கள் நன்கொடைகள் தமிழுக்கான கட்டற்ற வளங்களை உருவாக்கும் செயல்களை சிறந்த வகையில் விரைந்து செய்ய ஊக்குவிக்கும்.

பின்வரும் வங்கிக் கணக்கில் உங்கள் நன்கொடைகளை அனுப்பி, உடனே விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

 

Kaniyam Foundation
Account Number : 606101010050279

606 1010 100 502 79

Union Bank Of India
West Tambaram, Chennai

IFSC – UBIN0560618

Please follow and like us:
Pin Share

5 Comments

  1. தமிழமுது
    தமிழமுது April 21, 2019 at 5:12 pm . Reply

    கிவாஜ . மறைமலை அடிகளார் ராபிசே.பரிதிமாற் கலைஞர் போன்றோரின் அரிய நூல்களை அள்ளித்தந்தமைக்கு நன்றி. சிறு அன்பளிப்பை அனுப்பி உள்ளேன். மேலும் அனைவரும் பயன்பெற தமிழ்கூறும் நல்லுலகம் தழைக்க பயணிப்போம்

  2. பி.தார்சியுஸ்
    பி.தார்சியுஸ் December 18, 2019 at 7:02 am . Reply

    திரு.வாரண்ட் பாலா அவர்களின் நீதியைத்தேடி நூல்கள் கிடைக்குமா?

  3. Meenakshi Sundaram
    Meenakshi Sundaram April 9, 2020 at 6:23 am . Reply

    do you have any speec to text software

  4. k.sivanandam
    k.sivanandam December 5, 2020 at 1:52 am . Reply

    pls send books about ,how to utilize softwares and basics of computer science

  5. NATARAJAN
    NATARAJAN July 26, 2021 at 9:50 am . Reply

    Not able to downaload Thirumoolars Ashtanga yoga book. Please send me a copy to my email id natarajankrg@gmail.com

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...