தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்
ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
மின்னூலாக்கம் : த.தனசேகர்
மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
நூல் மூலம் – https://ta.wikisource.org/s/6hgr
நன்றி – விக்கி மூலம் குழு
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
முன்னுரை
இன்று நல்ல நாள்!
உங்கள் எண்ணத்திலே புதிய எழுச்சி, புரட்சி! அதன் விளைவாக எழுந்த முயற்சி ……….. மகிழ்ச்சி!
என்றோ ஒரு நாள் தொடங்கி, தொடர்ந்து, வளர்ந்து, சுமையாக மாறிவிட்ட இந்தத் தொந்தியை எப்படியாவது தொலைத்துத் தலை முழுகி விடவேண்டும் என்ற வேகத்தின் வெள்ளத்திற்குக் கரை கட்டி விட்ட கடமை நிறைந்த நாள் இந்நாள்.
ஆமாம், புதிய முயற்சி வெள்ளம் பொங்கிப் புரண்டு, நுங்கும் நுரையுமாக செல்வதை, கரைகட்டி விட்டது போல, உங்கள் கையிலே இந்த நூல் தவழ்கிறது.
நல்ல வழி காட்டவே இந்த நூல் பிறப்பெடுத்திருக்கிறது. புறப்பட்டிருக்கிறது.
மெருகேறிய உடல் நமது உடல், அழகான அங்க அமைப்பு நிறைந்த உடல், பல்லாண்டு காலமாக பரிணாம வளர்ச்சியின் விளைவாக, பரிபூரணப் பொலிவுடன் விளங்கும். நம் உடலிலே புகுந்து விட்ட இந்த வேண்டாத தொந்தியை, விரட்ட வேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவு இருக்கிறதே, அதைத்தான் ஆரம்பத்தில் புரட்சி என்றேன். எழுச்சி என்றேன்.
“வாழ்வைத்தான் வளர்க்க வேண்டும். வயிற்றை அல்ல” என்பதை இன்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.
“உங்கள் விசாலமான மனமும், குறுகுகிற இடுப்பும் இடம் மாறுகிற பொழுது, உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்” என்று ஒரு மேல் நாட்டறிஞர் கூறுகின்றார்.
இடுப்பு பெரிதாகி, மனம் குறுகிவிட்டது. முதிர்ந்து போன வயதானதினால் என்பது அல்ல, உடலின் நயம், லயம், மயம் கெட்டு விட்டது என்பதே பொருத்தமாகும்.
நல்ல உடலில்தான் நல்ல மனம், நல்ல குணம் விளங்கும். நல்ல நினைவுகள், நல்ல செயல்கள் என்றும் துலங்கும். நல்ல செயல்கள் நல்ல வாழ்வு முறைகளை அமைத்துத் தரும்.
எனவே, இடுப்புப் பகுதியின் அளவை விரிவுபடுத்தாமல் இருக்க வேண்டுமானால், என்ன செய்வது? என்ற உங்கள் கேள்விக்குப் பதலளித்துப் பாதை காட்டுகிறது இந்நூல்
உடல் உள்ளவரை கடல் கொள்ளாத கவலை வரும் என்பது பழமொழி!
அலை ஒய்வது எப்பொழுது? தலை முழுகுவது எப்பொழுது என்பது போல கவலையெல்லாம் தீர்ந்த பிறகு வயிற்றுப்பிரச்சனை முடிந்த பிறகு, இந்தப்பிரச்சனையைத் தீர்க்க முயலலாம் என்று நினைப்பவர்களே அதிகம்.
நூலில்லாமல் மாலை கோர்க்கப் பார்க்கும் நூதன புத்திசாலிகள் போல, உடலைக் காக்காமலேயே உலக வாழ்ககையை அனுபவிக்க முயல்பவர்கள்தான் அதிகம் இருக்கின்றாள்கள்.
“இரவல் சேலையை நம்பி இடுப்புச் சேலையைக் களைந்து எறிந்தவள்” கதைபோல, நாளை வரும் நிறைய இன்பம் என்றும் மனப்பால் குடித்து, இன்றைய வாழ்ககையை இன்னலோடு கழித்து, உடலைக் கெடுக்கும் மக்களும் தான் இருக்கத்தான் இருக்கிறாள்கள்.
என்ன செய்வது? அன்றாடம் அல்லாடி, தள்ளாடி இறுதியிலே ஆடி ஓய்ந்த பம்பரம் போல, அலுத்துக் களைத்துப் அவதியைத் தான் அவர்கள் அடைகின்றனர்.
தண்ணிரிலே பிறந்த உப்பு, இறுதியிலே தண்ணிரில் தான் கரையும் எண் பார் களே, அதுபோல, உடலால தான் உலகவாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்து, முடிவில் உடலைக் காக்க உழைப்பும், உடற்பயிற்சியுமே தேவை என்று உணர்கின்ற உன்னத நிலைக்கு இன்று எல்லோரும் வந்து விட்டனர்.
வந்துவிட்ட தொந்தியை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று பஞ்சுதொந்தி, இன்னொன்று இரும்புத்தொந்தி.
பஞ்சுத்தொந்தி என்பது பசுமையானது. தொளவென்று தளதளத்துத் தோன்றும். இது ஆரம்பகாலத்தில் அழகு முகம் காட்டி, ஆனந்த சும் காட்டி, சொகுசு காட்டும் தன்மையது.
மிகக் குறைந்த முயற்சியினாலும் பயிற்சியினாலும் விரட்டி விடலாம். முளையிலே கிள்ளி எறிகின்ற முள்செடியைப் போல இந்த முயற்சி.
இரும்புத்தொந்தி என்பதோ வேர் விட்டுப் பாய்ந்து, கிளைவிட்டு உயர்ந்து, நன்றாக ஊன்றி உறுதி பெற்று வைரம் எறிய மரம் போன்றது.
இரும்புத் தொந்தி என்பதோ வேள்விட்டுப் பாய்ந்து, கிளைவிட்டு உயர்ந்து, நன்றாக ஊன்றி உறுதிபெற்று வைரம் எறிய மரம் போன்றது.
இரும்புத் தொந்தியை அகற்ற வேண்டுமானால் அவசரப்படுவது தவறு. அதற்கென்று முறைகளை அன்றாடம் கடமையென உணர்ந்து, உண்மையாக செய்து வரவேண்டும்.
நித்தம் பெற்றால் முத்தம் சலித்துப் போகும் என்பார்கள். உடற்பயிற்சிக்கு இது பொருந்தாது. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். இதுவும் பயிற்சிக்கு ஏற்புடைதக்கது.
பட்டை தீட்டத் தீட்ட வைரம் ஒளிவிடுதல் போல, பயிற்சி செய்யச் செய்ய உடல் பளபளக்கும். உறுப்புக்கள் செழிக்கும், வலிமை கொழிக்கும். வாழ்வு சிறக்கும்.
உண்ணுதல், உறங்குதல், உடை உடுத்தல், அலுவலகம் செல்லுதல், போன்ற பழக்க வழக்கங்களை எவ்வாறு அன்றாடம் மேற் கொள்ளுகின்றிர்களோ, அவைகளைப் போலவே பயிற்சியையும் பழக்ககப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதனால் தொந்தியும் குறையும். தோன்றிவரும் நோய்களும் மறையும். தளாந்து போயிருக்கின்ற உடலும் நிமிரும் உறுதி பெறும்.
வாழ்வைச் சுவைத்து மகிழ நல்ல வாய்ப்பினை அளிக்கும் வழியானது இன்று பிறந்து விட்டது.
நூல் உங்கள் கையில், செயலும் உங்களுடையதே!
இந்நூலினை அழகாக அச்சிட்டுத் தந்திருக்கும் அச்சகத்தாருக்கும், இந்நூல் சிறப்புற வெளிவர பணியாற்றிய அரிமா திரு. ஆர். ஆடம் சாக்ரட்டீஸ் அவர்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி.
என் இனிய முயற்சிகளுக்குத் துணை தரும் எல்லா அன்பர்களுக்கும், என் இதயங் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்நூலையும் ஏற்று ஆதரிக்க வேண்டுகிறேன்.
வணக்கம்.
டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா
“லில்லி பவனம்”
சென்னை – 600 017.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் epub”
thondhiyai-kuraika-sulabamana-vazhigal.epub – Downloaded 2723 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் mobi”
thondhiyai-kuraika-sulabamana-vazhigal.mobi – Downloaded 976 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் A4 PDF”
thondhiyai-kuraika-sulabamana-vazhigal-a4.pdf – Downloaded 3801 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள் 6 inch PDF”
thondhiyai-kuraika-sulabamana-vazhigal-6inch.pdf – Downloaded 1425 times –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/thondhiyai-kuraika-sulabamana-vazhigal
புத்தக எண் – 340
பிப்ரவரி 7 2018