நூல் : அங்கும் இங்கும்
ஆசிரியர் : நெ. து. சுந்தரவடிவேலு, எம்.ஏ., எல்.டி.
மின்னூலாக்கம் : த . தனசேகர்
மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
நூல் மூலம – https://ta.wikisource.org/s/2v0q
நன்றி – விக்கி மூலம குழு – https://ta.wikisource.org
உரிமை:
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication
முன்னுரை
வெளிநாட்டுப் பயணம், அரிய நல்வாய்ப்பு. அது எனக்குக் கிட்டிற்று. சோவியத் ஒன்றியத்துக்கு இரு முறையும். பிரிட்டனுக்கு இரு முறையும், அமெரிக்காவிற்கு ஒரு முறையும் சென்று வரும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்நாடுகளில் என்னைக் கவர்ந்தவை பல.
நான் கண்ட, கேட்டவற்றில் சிலவற்தையாவது எழுதி வைக்க, ‘சத்திய கங்கை’யின் ஆசிரியரும் என் நண்பருமான திரு பகிரதன் அவர்களின் அன்பு அழைப்புத் தூண்டிற்று. ‘அங்கும் இங்கும்’ என்ற தலைப்பில் அவற்றை அவர் ‘சத்திய கங்கை’யில் வெளியிட்டார். ஆகவே அவருக்கு என் முதல் நன்றி.
இக்கட்டுரைத் தொகுப்பை நூல் வடிவில் வெளியிட முன்வந்த நியூ செஞ்சுசி நூலகத்தாருக்கு என் உளமார்ந்த நன்றி.
இந்நூலை வெளியிட அனுமதி தந்த இந்திய ஆட்சிக்கும் நன்றியுடையேன். இதில் வரும் கருத்துக்கள் என்னுடையவை. அரசினருடையவை அல்ல. அவற்றிற்கு நானே பொறுப்பு. அவை எவ்விதத்திலும் இந்திய ஆட்சியைச் சாரா. சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்லூரிக் கல்வி நிலையில் தமிழுக்கு முதன் முதலாக இடம் தேடித் தந்தவரும், சென்னை நகரில் எல்லா சமயத்தாரும் சேர்ந்து கொண்டாடும் தமிழ்த் திருநாளாகப் பொங்கல் விழாவை நடத்திக் காட்டியவரும், எனக்கு நல்லாசிரியராயிருந்து தமிழ்ப் பற்றை ஊட்டியவருமான கா.நமசிவாய முதலியார் அவர்களின் நினைவுக்கு இதை என் நன்றியின் அறிகுறியாகக் காணிக்கையாக்குகிறேன்.
புது தில்லி, நெ. து. சுந்தரவடிவேலு
19-3-1968
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “அங்கும் இங்கும் epub” angum_ingum.epub – Downloaded 757 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “அங்கும் இங்கும் mobi” angum_ingum.mobi – Downloaded 270 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “அங்கும் இங்கும் A4 PDF” angum_ingumA4.pdf – Downloaded 790 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “அங்கும் இங்கும் 6 inch PDF” angum_ingum6inch.pdf – Downloaded 372 times –
பிப்ரவரி 28 2018