வாழு வாழவிடு – சிறுகதைகள் – பொன் குலேந்திரன்

வாழு வாழவிடு

(16 உருவகக் கதைகளின் தொகுப்பு)

பொன் குலேந்திரன்
(கனடா)

மின்னூல் வெளியீடு :
FreeTamilEbooks.com

படைத்தவர் :
பொன் குலேந்திரன்
மிசிசாகா – கனடா
[email protected]

அட்டைப்படம்,மின்னூலாக்கம்  :
பிரசன்னா,  

உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.

உருவாக்கியவன் பேனாவில் இருந்து:

உருவகத்தை வரலாறு காலமாகக் கதையிலும் இலக்கியத்திலும் சிக்கலான பிரச்சினைகளை எளிதில் புரியும் வகையில் சுவாரசியமாக எடுத்துச் சொல்லித் தீர்வுகாணப்  பயன்படுத்தி உள்ளார்கள்.

எழுத்தாளர்களும் தத்துவஞானிகளும, பேச்சாளர்களும் உருவகக் கதைகளை ஒரு இலக்கிய சாதனமாகப் பாவித்து  தார்மீகம், ஆன்மீகம், அரசியல் அர்த்தங்களை உணர்த்துவதற்கு பாவிக்கிறார்கள். அதில் பிளேட்டோ என்ற தத்துவஞானி காலத்தில் எழுதப்பட்டு  பிரபலமான இரு உருவகக் கதைகள் ‘குகை’யும் ‘குடியரசு’மாகும்.  குகை என்ற கதையில்> தங்கள் வாழ்நாள் முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, குகையில் வாழ்ந்த மக்கள் குழுவை விவரிக்கிறது. அம் மக்கள் அவர்களுக்குப் பின்னால் எரியும் தீ முன்னே நடப்பதன்  மூலம், குகையின் சுவரில் தம் நிழல்களைப் பார்த்து, நிழல்களோடு உரையாடி, உலகத்தை அறிந்து கொள்கிறார்கள்.

நாம் சிறுவயதில் காகமும் நரியும், முயலும் ஆமையும், முயலும் சிங்கமும் போன்ற பல கதைகளைப் பாட்டி சொல்லக் கேள்விப்பட்டோம.  இது போன்ற ஏசோப்பின் நீதிக்கதைகள் பல.  ஜாதகக் கதைகளில இருந்து உருவான உருவகக் கதைகள் பல. அக்கதைகளில் ஜீவராசிகளின் குணங்களை அடிப்படையாக  வைத்து கதைகள் உருவாக்கப்பட்டன.  ஒரு மனிதன் எப்படி உலகில் அறநெறியோடு வாழ வேண்டும் என்பற்கு எடுத்துக்காட்டாக  அமைகிறது. புத்திசாலியான நரி,  காகத்தை எப்படி ஏமாற்றுகிறது என்பது கதையின் ஒரு கோணம். காகம் வடையை காலுக்குக் கீழ்  வைத்தபடி காகா என்று பாட்டுப்பாடி நரியை ஏமாற்றுகிறது என்பது கதையின் மாறுபட்ட கோணம். இதே போல் சிங்கமும் சுண்டெலியும் என்ற கதை பிரதி உபகாரத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான ஓட்டப்பந்தயக் கதை  ஆணவம் கூடாது என்பதைச் சொல்லுகிறது. பெரிய ஜாடியின் அடியில் உள்ள தண்ணிரைக் குடிப்பதற்கு வழி தெரியாது சிறுகற்களை ஜாடிக்குள் போடடுத் தண்ணீரை மேலே வரச்செயது  கொக்கு தன் தாகத்தை தீர்த்ததாக ஓரு கதை உண்டு. இப்படிப் பல உருவகக் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

உருவகம் கதையில் மட்டுமல்ல, சித்திரத்திலும் சிற்பத்திலும் அமைந்திருக்கிறது. பிகாசோவின சித்திரங்களை பல தடவை பல கோணங்களில் பார்த்தால் எதைச் சொல்ல வருகிறார் என்பது புரியும். பிரபல காலம் சென்ற எழுத்தாளர் சுந்தர இராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை பல விருதுகள் பெற்ற உருவக நாவல். ஒரு தடவை வாசித்தால் புரியாது. பல தடவை வாசித்தால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியும்..

இந்த ‘வாழு வாழ விடு’ என்ற உருவகக் கதைத்தொகுப்பில் உள்ள கதைகள் பகிர்ந்து வாசித்து என்னாலும் முடியும் என்ற நோக்கோடு வாழத்  தூண்டும். இக்கதைகள் காதலோ. குடும்பப் பிரச்சனைகளோ  மர்மமோ அல்லது அறிவியலோ சார்ந்த கதைகள் அல்ல. சிந்திக்க வைக்கும் கதைகள். வாசியுங்கள, பல தடவை வாசியுங்கள். கதையில் உள்ள கருத்தைப் புரிந்து கொள்வீர்கள்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “வாழு வாழவிடு epub” vazhu-vazhavidu-short-stories.epub – Downloaded 2557 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “வாழு வாழவிடு A4 PDF” vazhu-vazhavidu-short-stories-A4.pdf – Downloaded 2839 times –

செல்பேசிகளில் படிக்க

Download “வாழு வாழவிடு 6 inch PDF” vazhu-vazhavidu-short-stories-6-inch.pdf – Downloaded 1647 times –

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 297

ஜூன் 6 2017

மேலும் சில சிறுகதைகள்

  • பிரான்செஸ் தொலைந்த மர்மம்
  • இரு அறிவியல் நண்பர்கள் – சிறுகதைகள் – பொன் குலேந்திரன்
  • ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் – சிறுகதைகள் – சு.சமுத்திரம்
  • மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள் – சிறுகதைகள் – முல்லை முத்தையா

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.