fbpx

வலையில் விழுந்த வண்ணங்கள் சில – I

varnangal
 ஶ்ரீதர் நாராயணன்

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரும்பாலும் கடந்த ஆறு வருடங்களாக இணையத்தில் நான் பதிந்து வந்தவை.  புத்தகங்கள் மற்றும் புனைவுகளுக்குள் திணித்துக்கொண்டு வாசிப்பதை மட்டும் முக்கிய பொழுதுபோக்காக கொண்டிருப்பவன்.  புனைவுகள் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது  போன்ற பொழுது போக்குகளை அதிதீவிரமாகச் செய்பவன் என்றாலும் அவ்வப்போது விடாமல் ஏதாவது எழுதி வைத்திருக்கிறேன்.  இணையத்தில் பலரும் செய்வது போலவே நேர விரயம், வம்பு பேச்சுகளில் ஆர்வம் காட்டினாலும் அதையும் தாண்டி கொஞ்சமாவது எனது வாசிப்பை கூர்மையாக்கி கொள்ள முடிந்திருப்பதில் இணையத்திற்கும் பங்கிருக்கிறது.

தினம் “ஒரு பக்கம்’ எழுதவேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கிய என்னுடைய இணையதளத்தில் அவ்வப்போது (சோம்பேறித்தனமாம்) பதிந்த சில பக்கங்களை தொகுத்துதான் இந்த ‘வலையில் விழுந்த வண்ணங்கள் சில’ உருவாகியிருக்கிறது.

பெரும்பாலும் இணையத்தில் எழுதுபவை அந்த தளத்தினோடேயே முடங்கிப் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஏதாவது புத்தகத்திருவிழா நடக்கும்போது ஏற்படும் ‘திடீர்’ peer pressureல் வாசகர்கள் வீறுகொண்டு எழுந்து போய் அச்சு புத்தகங்கள் வாங்கும் வைபவத்தால் சில எழுத்துகளுக்கு பதிப்பகங்கள் வாயிலாக விமோசனம் கிடைக்கலாம்.

இந்த சங்கிலிக்கு மாற்றாக, தமிழிணையத்தில் ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருக்கும் நண்பர்கள் குழுவிற்கு நன்றியுடன் இந்த தொகுப்பின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்

இணையம் அளிக்கும் சாதகங்களில் இம்மாதிரியான புதிய முயற்சிகளை ஊக்குவிப்பதும் முக்கியமாகிறது.

தொடர்ந்து தொய்வில்லாமல் பணியாற்றுங்கள்.

உங்களன்பன்

ஶ்ரீதர் நாராயணன்

மின்னஞ்சல்: [email protected]

அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – [email protected]
அட்டைப்பட மூலம் –  http://hdw.datawallpaper.com/abstract/color-twist-desktop-background-336073.jpg
மின்னூலாக்கம் – ப்ரியா – [email protected]

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “வலையில் விழுந்த வண்ணங்கள் சில - I epub”

valaiyil-vizhunda-ennangal.epub – Downloaded 3995 times – 2.28 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “வலையில் விழுந்த வண்ணங்கள் சில - I mobi”

valaiyil-vizhunda-ennangal.mobi – Downloaded 1345 times – 4.48 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “வலையில் விழுந்த வண்ணங்கள் சில - I A4 PDF”

valaiyil-vizhunda-ennangal-A4.pdf – Downloaded 5743 times – 12.12 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “வலையில் விழுந்த வண்ணங்கள் சில - I 6 inch PDF”

valaiyil-vizhunda-ennangal-6-inch.pdf – Downloaded 2007 times – 11.96 MB

 

 

புத்தக எண் – 99

ஜூலை  23  2014

 

 

 

Please follow and like us:
Pin Share

3 Comments

  1. […] வலையில் விழுந்த வண்ணங்கள் சில – I […]

  2. prabu
    prabu October 25, 2014 at 9:36 am . Reply

    After download PDF file still error will appear.

  3. […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/valaiyil-vilundha-vannangal-sila/ […]

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...