fbpx

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

bayam-cover

ஜோதிஜி திருப்பூர்

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

சென்னை

பயத்தோடு வாழப் பழகிக் கொள்

உருவாக்கம்: ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் – powerjothig@yahoo.com

 

வெளியீடு: http://FreeTamilEbooks.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: socrates1857@gmail.com

 

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

மின்னூல் வெளியீடு: த.ஸ்ரீனிவாசன்

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என்னுரை

தேவியர் இல்லம் திருப்பூர் http://texlords.wordpress.com/என்ற பெயரில் வேர்ட்ப்ரஸ் ல் 2009 ஜுலை மாதம் எழுதத் தொடங்கினேன . கடந்த நான்கு ஆண்டுகளாக ப்ளாக்கரில் தேவியர் இல்லம் http://deviyar-illam.blogspot.com/ என்ற பெயரில் எழுதி வருகின்றேன் .

அனுபவம் , செய்திகள் , கட்டுரை , சமூகம் , பயணக்கட்டுரை , ஆன்மீகம் , நெடுங்கதை , தமிழ்நாட்டு அரசியல் , இந்திய அரசியல் , சர்வதேச அரசியல் , ஈழம் சார ்ந்த வரலாறு , தமிழர் வரலாறு , குழந்தைகள் குறித்த தொடர் நினைவலைகள் என்று அனைத்து தரப்பு விசயங்களையும் எனக்குத் தெரிந்த மொழியில் எழுதி வந்துள்ளேன் .

2013 ஆம் ஆண்டு என் முதல் புத்தகம் வெளியானது . 4 தமிழ் மீடியா வெளியிட்டார்கள் . அந்தப் புத்தகத்தின் பெயர் டாலர் நக ரம் . திருப்பூர் வாழ்வியல் குறித்து அலசும் அனுபவத் தொடர் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு . இந்தப் புத்தகம் தமிழின் முக்கிய இதழான ஆனந்த விகடன் வருடந்தோறும் அவர்கள் வெளியிடும் இயர்புக்கில் 2013 ஆம் ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக தேர்ந்து எடுத்தார்கள் . அடுத்து கல்வி குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு புத்தக வடிவில் வர காத்துக் கொண்டிருக்கின்றது .

அமெரிக்காவில் இருந்து வெளி வந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணைய பத்திரிக்கையில் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடர் வாரந்தோறும் (2014) வெள ்ளிக்கிழமை அன்று திருப்பூர் தொழிலாளர்களைப் பற்றி அலசும் வாழ்வியல் தொடராக கடந்த 19 வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றது . இதுவும் புத்தமாக மாற வாய்ப்புண்டு .

கடந்த 2014 நவம்பர் வரைக்கும் நான் எழுதிய தலைப்புகளின் எண்ணிக்கை 682, வந்த விமர்சனங்களின் எண்ணிக்கை 11,500. தேவியர் இல்லம் வலைபதிவை பார்வையிட்ட பார்வையாளர்கள் படித்த பக்கங்களின் எண்ணிக்கை 10 லட்சம் .

கடந்த இருபது வருடங்களாக திருப்பூரில் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறையில் பணியாற்றி கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராக (GENERAL MANAGER) உற்பத்தித் துறை யில் பணியாற்றிவருகின்றேன் .

மனைவி பெயர் மாதவி . இளங்கலை வணிகவியல் பட்டதாரி . எனக்கு தோழியாக , என் எழுத்துக்கு வாசகியாக குடும்பத்தின் இல்லத்தரசியாக இருக்கின்றார் . எங்கள் இரட்டைக்குழந்தைகளின் பெயர் தர்ஷிணி , துர்க்கா தேவி , கடைக்குட்டியின் பெயர் சங்கரி தேவி . முறைய ஆறாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார்கள் . குழந்தைகள் மூவருக்கும் என் எழுத்து , இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பது , நான் எதைக்குறித்து எழுதுகின்றேன் போன்ற அனைத்து விபரங்களும் மிக நன்றாகவே தெரியும் .

மூவரும் என்னை எழுத்தாளன் என்று என ்னை ஒப்புக்கொள்ளவில்லை . காரணம் அவர்கள் கணினி பயன்படுத்தும் நேரத்தை நான் கடன் கேட்பதே அவர்களுக்குண்டான பிரச்சனை . மூவரில் இருவருடன் சமூகத்தைப் பற்றி இங்குள்ள அரசியல் அவலத்தைப் பற்றி அலசி ஆராய்வதே என் பொழுது போக்குகளில் ஒன்று . அந்த அளவுக்கு அவர்களை சக நண்பர்க ளாக மாற்றுவதில் வெற்றி அடைந்துள்ளேன் . எப்போது போல என் மனைவி அவள் சின்னவட்டத்தை வெளியே வராமல் இன்னமும் அடம் பிடித்துக் கொண்டிருக்க குழந்தைகள் மூவருடனும் சேர்ந்து அவரை கலாய்ப்பதே எங்களின் முக்கிய பொழுது போக்காக உள்ளது .

நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை , நான் வாழ்ந ்து கொண்டிருக்கும் வாழ்க்கை , இதன் வழியே நான் பார்த்த சமூகம் இதன் மூலமாக பெற்ற பாடங்கள் , நான் பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவைகளை இங்கே கட்டுரைகளாக “பயத்தோடு வாழப் பழகிக் கொள்” என்ற பெயரில் உங்களுக்கு தொகுத்து கொடுத்துள்ளேன் . ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதிய தேதியை குறிப்பிட்டு உள்ளேன் . அதன் மூலம் அந்த சம்பவம் நடந்த காலத்தை உங்களால் ஒப்பிட்டுக் கொள்ள முடியும் .

இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்து இருக்கக்கூடும் . சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய அம்சமாகும் .

நடுத்தரவர்க்கத்தின் அங்கத்தினரான நாம் ஏதோ ஒன்றுக்காக பயந்து தினந்தோறும் நம் இருப்பை காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கின்றோம் . எத்தனை சமூகம சார்ந்த பிரச்சனைகள் நம்மைச் சுற்றி நடந்தாலும் நமக்கு அது நடக்கும் வரையிலும் நாம் அனைத்தையும் செய்திகளாகவே பார்த்து பழகி விட்டோம் . இது தான் நம் வாழ்க்கையின் எதார்த்தம் .

உணர்ந்து படியுங்கள் . உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை மறக்காமல் எனக்குத் தெரியப்ப டுத்துங்கள் .

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர் .

09.12.2014

JOTHI GANESAN

E Mail – texlords@gmail.com

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் epub”

live-with-fear.epub – Downloaded 13944 times – 6.41 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் mobi”

live-with-fear.mobi – Downloaded 7261 times – 14.37 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் A4 PDF”

live-with-fear-A4.pdf – Downloaded 12152 times – 4.70 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் 6 inch PDF”

live-with-fear-6-inch.pdf – Downloaded 3410 times – 28.84 MB

 

இணையத்தில் படிக்க – http://livelifewithfearness.pressbooks.com

 

புத்தக எண் – 120

டிசம்பர்  9 2014

Please follow and like us:
Pin Share

2 Comments

  1. […] பயத்தோடு வாழப் பழகிக் கொள் […]

  2. Live With Fear – Tamil Tee
    Live With Fear – Tamil Tee February 20, 2016 at 12:47 pm .

    […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/live-with-fear/ […]

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...