திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார். உதாரணத்திற்கு பிராணாயாமம் பற்றிய பாடல்களில், இதைச் செய்தால் மனம் லேசாகும், கள்ளில்லாமலேயே போதை உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும் என்று ஒரு உத்வேகத்தை கலந்தே தருகிறார்.
வேதியர்கள் சத்தமாக மந்திரம் சொல்லும் விதத்தை மெலிதாகக் கிண்டல் செய்து உரையாசிரியர்களுக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறார் திருமூலர். சிவபுராணத்தில் சொல்லப்படும் தக்கன் வேள்வியைப் பற்றி அவர் சொல்வது, இப்போது உள்ள நவீன குருமார்கள் கூடத் தொடத் தயங்கும் விஷயம். தக்கன் வேள்வியெனச் சொல்லப்படுவது ஆண், பெண் உறவு என்கிறார் திருமூலர். அந்த உறவு சிவனை நினைத்து இருக்க வேண்டும் என்கிறது அவரது உபதேசம். இதுபற்றிப் பேசுவதற்கு முன்னால் பிறர் மனையைப் பார்க்கக் கூடாது, பொது மகளிரிடம் செல்லக் கூடாது போன்ற இயமங்கள் உண்டு. தாம்பத்திய உறவு என்பது காமம் இல்லாமல் கடவுளை நினைத்து இருந்தால் அதுவும் ஒரு யோகமே என்பது திருமூலரின் உபதேசச் சுருக்கம்.
இந்த முதல் தொகுதியில் திருமந்திரத்தின் முதல் நூற்று ஐம்பது பாடல்கள், விளக்கவுரையுடன் உள்ளன. மிக உயர்ந்த விஷயங்களும், மறைபொருட்களும் கொண்ட ஒரு ஆகம நூலுக்கு உரை எழுதும் தகுதி எனக்கு இல்லை. திருமூலரின் பாடல்கள் தரும் வியப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மின்னூலின் நோக்கம், நண்பர்களிடையே திருமந்திரப் பாடல்களின் மேல் ஒரு ஆர்வத்தை தூண்டுவதே ஆகும். இதில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சின்ன வழிகாட்டி மட்டுமே. நண்பர்கள் பாடல் புரிந்த பிறகு, விளக்கவுரையை விட்டு விட்டுப் பாடலை மட்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வு அனுபவத்திற்கும், ஆன்மிக ஈடுபாட்டிற்கும் ஏற்பப் பல விஷயங்கள் புரிய வரும்.
Download books
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “திருமந்திரம் epub” thirumandiram.epub – Downloaded 62493 times – 280.49 KBகணிணிகளில் படிக்க, அச்சடிக்க
Download “திருமந்திரம் A4 PDF” thirumandiram-A4.pdf – Downloaded 80853 times – 472.30 KBசெல்பேசிகளில் படிக்க
Download “திருமந்திரம் 6 Inch PDF” thirumandiram-6-Inch.pdf – Downloaded 39313 times – 605.46 KBதிருமந்திரம் விளக்க உரையுடன் பாடல்கள் 1 – 150
ஆசிரியர் – ரய்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
முதல் மின்பதிப்பு ஏப்ரல் – 2014
அட்டைப்பட வடிவமைப்பு – ரய்
மின்னூல் ஆக்கம் – நரேன்
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Creative Commons Attribution 4.0 International License
வெளியீடு :FreeTamilEbooks.com
புத்தக எண் – 56
சென்னை
ஏப்ரல் 15 2014
Leave a Reply