திருமந்திரம் – விளக்க உரையுடன்
பாயிரமும் முதல் தந்திரமும்
336 பாடல்கள்
விளக்கவுரை : Rie
வெளியீடு – Freetamilebooks.com
அட்டைப்பட வடிவமைப்பு – ரய்
மின்னூல் ஆக்கம் – நரேன்
இந்த கையேடு Creative Commons License வழங்கப்பட்டதாகும். அதனடிப்படையில் எவரும் இதனை திருத்தம் செய்து மேம்படுத்திக் கொள்ளலாம்.
திருமந்திரம் பாடல்கள் பாயிரமும் முதல் தந்திரமும் is licensed under a Creative Commons Attribution 4.0 International License
About Rie
Basically a graphic designer and web programmer. Writing a blog blog.scribblers.in at free time.
email – [email protected]
அறிமுகம்
திருமந்திரம் என்னும் நூல், திருமூலரால் தமிழில் அருளப்பட்ட சிவஆகமம் ஆகும். சைவத் திருமுறைகளின் வரிசையில், திருமந்திரம் பத்தாவது திருமுறையாக வருகிறது. ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பட்ட இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல விஷயங்களைப் பற்றி பேசுகிறது. வேதம் என்பது கடவுள் துதிகளின் தொகுப்பாக இல்லாமல், உண்மையான ஞானம் பெற உதவும் விஷயங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழ் வேதம் என்றால் அது திருமந்திரம் தான். திருமந்திரம் உணர்வுகளைத் தூண்டுவதை விட அறிவைத் தூண்டி விடுவதிலேயே குறியாக இருக்கிறது.
இந்த நவீன யுகத்தின் விஞ்ஞானிகள் உலகின் மொத்த உயிரின வகைகள் (ஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, விலங்குகள், மனித இனம், தாவரங்கள் ஆகிய எல்லாம் சேர்த்து) 8.7 மில்லியன் (1.3 மில்லியன் கூடுதல் அல்லது குறைவு) என்று கண்டு அறிந்திருக்கிறார்கள். நமது திருமூலர் உலகின் உயிரின வகைகள் 8.4 மில்லியன் என்று அப்போதே எழுதி வைத்திருக்கிறார்.
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே – திருமந்திரம்.
இதை திருமூலர் தான் கண்டுபிடித்தார் என்று நான் சொல்லவில்லை. இது பற்றிய விஷயங்கள் அன்றைய கல்விமுறையில் இருந்திருக்கிறது என்பது நாம் யோசிக்க வேண்டிய விஷயமாகும்.
இந்தத் தொகுதியில் திருமந்திரத்தின் பாயிரமும், முதல் தந்திரப் பாடல்களும் விளக்கவுரையுடன் உள்ளன. மிக உயர்ந்த விஷயங்களும், மறைபொருட்களும் கொண்ட ஒரு ஆகம நூலுக்கு உரை எழுதும் தகுதி எனக்கு இல்லை. திருமூலரின் பாடல்கள் தரும் வியப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மின்னூலின் நோக்கம், நண்பர்களிடையே திருமந்திரப் பாடல்களின் மேல் ஒரு ஆர்வத்தை தூண்டுவதே ஆகும். இதில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களை புரிந்து கொள்வதற்கான ஒரு சிறிய வழிகாட்டி மட்டுமே. நண்பர்கள் பாடல் புரிந்த பிறகு, விளக்கவுரையை விட்டு விட்டு பாடலை மட்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வு அனுபவத்திற்கும், ஆன்மிக ஈடுபாட்டிற்கும் ஏற்ப பல விஷயங்கள் புரிய வரும்.
உதாரணத்திற்கு இந்தப் பாடலைப் பாருங்கள்.
யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன்
வேர் அறியாமை விளம்புகின்றேனே.
இந்தப் பாடலில் உள்ள அழகையும், சரளத்தையும், அது தரும் நேரடி உணர்வையும் உரையால் எழுத முடியாது. முடிந்தவரை பாடல்களை பாடலாகவே அனுபவியுங்கள்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “திருமந்திரம் - பாயிரமும் முதல் தந்திரமும் - விளக்க உரையுடன் - epub”
thirumanthiram-first-thanthiram.epub – Downloaded 11024 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “திருமந்திரம் - பாயிரமும் முதல் தந்திரமும் - விளக்க உரையுடன் - mobi”
thirumanthiram-first-thanthiram.mobi – Downloaded 3777 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “திருமந்திரம் - பாயிரமும் முதல் தந்திரமும் - விளக்க உரையுடன் - A4 PDF”
thirumanthiram-first-thanthiram.pdf – Downloaded 13838 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “திருமந்திரம் - பாயிரமும் முதல் தந்திரமும் - விளக்க உரையுடன் - 6 inch PDF”
thirumanthiram-first-thanthiram-6-inch.pdf – Downloaded 5361 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/thirumanthiram-first-thanthiram
புத்தக எண் – 266
செப்டம்பர் 6 2016
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி, வாழ்க வளமுடன்.
A Good Mission. thanks.
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி, வாழ்க வளமுடன்.
arpudham! god bless you! indha ‘yaar arivaar ‘ paadal eththanaavadhu paadal?
தங்கள் சேவைக்கு மிக்க நன்றி. மேன் மேலும் தொடர வாழ்த்துகள்
நன்று!
ஈசன் அடி போற்றி
எந்தையடி போற்றி
தேசன் அடி போற்றி
சிவன் சேவடி போற்றி—–
எல்லாம் சிவமயம்.
திருச்சிற்றம்பலம்!!!
தங்கள் சேவைக்கு நன்றி பல
இன்று தான் தங்கள் இணையத்தில் இணைந்தேன்..நல்ல முயற்சி… தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..
Ayya Vanakkam,
I am not able to download the PDF format. Could you please send me the 336 verse and its urai to [email protected]
இங்கே குறிப்பிட்டுள்ள 9 தந்திரங்கள்-பொருள் யாது.. ஏனெனில் தந்திரம் என்பதற்கு வேறு பொருள் அல்லவா.. ராஜதந்திரம், பஞ்சதந்திரம்,சாணக்கிய தந்திரம். இவ்வாறு கேள்வியுண்டு. எனவே இரண்டிற்கும் உள்ள வேற்றமைகளுக்கு விளக்கம் தேவை..மேலும் ஒருவர் தந்திரயோகம் என்று கூறியுள்ளார், அதன் மூலம் இறைவனை காணலாம் என்கிறார். அது சரியான வழியா.