தந்தை பெரியார்
அமரர் கே. பி. நீலமணி
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை – உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது. இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
***
நீங்கள் படிக்கப் போகிற இந்தப் புத்தகம். தரம் தாழ்ந்து நின்ற தமிழினத்திற்காக, சமூகநீதி வேண்டி, வாழ்நாளெல்லாம் பகுத்தறிவுப் பாதையில் போராடி வெற்றி கண்ட தந்தை பெரியார் என்னும் ஒப்பற்ற மாமனிதரைப் பற்றிய புரட்சிக் கதை இது.
சமூகத்தில் நிலவியிருந்த பழைய மூடப்பழக்க வழக்கங்களையும்; சாதி சம்பிரதாயங்களையும்; சமூக ஏற்றத்தாழ்வுகளையும், எதிர்த்து நின்று; அறிவுப்பூர்வமாகப் போராடிய தந்தை பெரியார் ஓர் பகுத்தறிவுப் பூங்காவாகவே திகழ்ந்தார்.
அவரது ஒப்பற்ற அறிவுப் பூங்காவில் பூத்த புரட்சிப் பூக்களின் இதழ்கள் ஒவ்வொன்றிலும், முட்களின் இரக்கமற்ற கீறலைக் காணலாம்.
தாழ்த்தப் பட்டவர்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாளெல்லாம் போராடி, வீரத்தழும்புகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரது வருகை, திராவிட மக்களது இருண்ட வாழ்வில் தோன்றிய கறுப்புச் சூரியன், அவர்களுக்குச் சுயமரியாதை உணர்வூட்டி புதுவழி காட்டிய பகுத்தறிவு சோதி!
நொந்து போயிருந்த திராவிடர் உள்ளங்களில் வீசிய பொன் வசந்தம் தந்தை பெரியார்.
இப்படித்தான் அபூர்வமாகச் சிலர் பிறக்கிறார்கள். அடிமை இந்தியாவின் விடுதலைக்கு அகிம்சா முறையில் வழிகாட்ட காந்திமகான் வந்தது போல –
நிறவெறி கொண்ட ஆங்கிலேயரிடமிருந்து, தனது கருப்பர் இனத்தை மீட்டு, அவர்களது அடிமை விலங்கறுக்க வந்த ஒரு மார்ட்டின் லூதர் கிங், போராடி வென்றதைப் போல – தமிழ் மக்களிடையே விஷம் போல் பரவி வந்த சாதி வெறியையும்; மூடநம்பிக்கைகளையும்; ஆதிக்க வெறியையும் அடியோடு அகற்றிட வேண்டித் தன் வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார்.
இந்த மின்னூலைப் பற்றி
இம்மின்னூல், இணைய நூலகமான விக்கிமூலத்தில் இருந்து வருகிறது[1].
இந்த பன்மொழி இணைய நூலகம் தன்னார்வலர்கள் மூலம் சாத்தியமாகிறது. விக்கிமூலம் எப்பொழுதும் புதிய தன்னார்வலர்களை தேடிக்கொண்டு இருக்கிறது. ஆதலால் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல புத்தகங்களை அனைவரும் படிக்குமாறு செய்வீர்.
மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இப்புத்தகத்தின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம்.
https://ta.wikisource.org/s/7tn4
இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பின்வரும் நபர்கள் பங்களித்துள்ளனர்.
தேமொழி
Balajijagadesh
Info-farmer
கி.மூர்த்தி
Rocket000
Be..anyone
Xato
Patricknoddy~commonswiki
Fleshgrinder
HoboJones
Mecredis
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தந்தை பெரியார் epub” periyar.epub – Downloaded 6584 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “தந்தை பெரியார் mobi” periyar.mobi – Downloaded 2449 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தந்தை பெரியார் A4 PDF” periyar-a4.pdf – Downloaded 6745 times –செல்பேசிகளில் படிக்க
Download “தந்தை பெரியார் 6 inch PDF” periyar-6-inch.pdf – Downloaded 3400 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/thanthai-periyar
புத்தக எண் – 265
செப்டம்பர் 6 2016
Leave a Reply