பயத்தோடு வாழப் பழகிக் கொள்

தேவியர் இல்லம் என்ற வலைப்பதிவை வேர்ட்பிரஸ் தளத்தில் 2009 ஜூலை மாதம் தொடங்கினேன். கடந்த நான்கு ஆண்டுகளாக, ப்ளாக்கரில் தேவியர் இல்லம் என்ற வலைப்பதிவையும் எழுதி வருகிறேன்.

அனுபவங்கள், செய்திகள், , , பயணக் கட்டுரைகள், ஆன்மீகம், நெடுங்கதை, நாட்டு , இந்திய அரசியல், சர்வதேச அரசியல், ஈழம் சார்ந்த , தமிழர் வரலாறு, குழந்தைகள் குறித்த நினைவலைகள் என அனைத்துத் தரப்பு விஷயங்களையும் எனக்குத் தெரிந்த மொழியில் எழுதி வந்துள்ளேன்.

2013 ஆம் ஆண்டு என் முதல் புத்தகம் வெளியானது. நான்கு தமிழ் ஊடகங்கள் வெளியிட்டன. அந்தப் புத்தகத்தின் பெயர் “டாலர் நகரம்”. திருப்பூர் வாழ்வியல் குறித்து அலசும் அனுபவத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தப் புத்தகம், தமிழின் முக்கிய இதழான ஆனந்த விகடன் வருடந்தோறும் வெளியிடும் இயர்புக்கில் 2013 ஆம் ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அடுத்து, குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு புத்தக வடிவில் வெளிவரக் காத்திருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் வலைத்தமிழ் இணையப் பத்திரிகையில், “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடர், வாரந்தோறும் (2014) வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் தொழிலாளர்களைப் பற்றி அலசும் வாழ்வியல் தொடராகக் கடந்த 19 வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவும் புத்தகமாக மாற வாய்ப்புண்டு.

கடந்த 2014 நவம்பர் வரை நான் எழுதிய தலைப்புகளின் எண்ணிக்கை 682. வந்த விமர்சனங்களின் எண்ணிக்கை 11,500. தேவியர் இல்லம் வலைப்பதிவைப் பார்வையிட்டவர்கள் படித்த பக்கங்களின் எண்ணிக்கை 10 லட்சம்.

கடந்த இருபது வருடங்களாகத் திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதித் துறையில் பணியாற்றி, கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராக (General Manager) உற்பத்தித் துறையில் பணியாற்றி வருகிறேன்.

மனைவி பெயர் மாதவி. இளங்கலை வணிகவியல் பட்டதாரி. எனக்குத் தோழியாக, என் எழுத்துக்கு வாசகியாக, குடும்பத்தின் இல்லத்தரசியாக இருக்கிறார். எங்கள் இரட்டைக் குழந்தைகளின் பெயர்கள் தர்ஷிணி, துர்காதேவி. கடைக்குட்டியின் பெயர் சங்கரி தேவி. முறையே ஆறாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் மூவருக்கும் என் எழுத்து, இணையத்தில் செயல்படுவது, நான் எதைக்குறித்து எழுதுகிறேன் போன்ற அனைத்து விவரங்களும் மிக நன்றாகவே தெரியும்.

மூவரும் என்னை எழுத்தாளன் என்று ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், அவர்கள் பயன்படுத்தும் நேரத்தைக் கடன் கேட்பதே அவர்களுக்குள்ள பிரச்சினை. மூவரில் இருவருடன் சமூகத்தைப் பற்றி, இங்குள்ள அரசியல் அவலங்களைப் பற்றி அலசி ஆராய்வதே என் பொழுதுபோக்குகளில் ஒன்று. அந்த அளவுக்கு அவர்களைச் சக நண்பர்களாக மாற்றுவதில் வெற்றி அடைந்துள்ளேன். எப்போதும் போல என் மனைவி, அவள் சின்ன வட்டத்தை விட்டு வெளியே வராமல் இன்னமும் அடம் பிடித்துக் கொண்டிருக்க, குழந்தைகள் மூவருடனும் சேர்ந்து அவரைக் கலாய்ப்பதே எங்கள் முக்கிய பொழுதுபோக்காக உள்ளது.

நான் வாழ்ந்து வந்த வாழ்க்கை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, இதன் வழியே நான் பார்த்த சமூகம், இதன் மூலம் பெற்ற பாடங்கள், நான் பெற்ற தாக்கம் மற்றும் நான் உணர்ந்து கொண்டவற்றை இங்கே “பயத்தோடு வாழப் பழகிக் கொள்” என்ற பெயரில் கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளேன். ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே நான் எழுதிய தேதியைக் குறிப்பிட்டுள்ளேன். அதன் மூலம் அந்தச் சம்பவம் நடந்த காலத்தை நீங்கள் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.

இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்களும் வாழ்ந்திருக்கக் கூடும். சமூகம் சார்ந்த கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியப் பிரச்சினைகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையோடு மட்டுமல்ல, உங்கள் தலைமுறையின் வாழ்க்கையையும் பாதிக்கக் கூடிய அம்சங்களாகும்.

நடுத்தர வர்க்கத்தின் அங்கத்தினர்களான நாம், ஏதோ ஒன்றுக்காகப் பயந்து தினந்தோறும் நம் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் போராடிக் கொண்டே இருக்கிறோம். எத்தனை சமூகம் சார்ந்த பிரச்சினைகள் நம்மைச் சுற்றி நடந்தாலும், நமக்கு அது நடக்கும் வரையில் நாம் அனைத்தையும் செய்திகளாகவே பார்த்துப் பழகிவிட்டோம். இதுதான் நம் வாழ்க்கையின் எதார்த்தம்.

உணர்ந்து படியுங்கள். உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை மறக்காமல் எனக்குத் தெரிவிக்கவும்.

நட்புடன்,

ஜோதிஜி, திருப்பூர்.

09.12.2014

JOTHI GANESAN

E-mail – texlords@gmail.com

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் epub” live-with-fear.epub – Downloaded 14816 times – 6.41 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் mobi” live-with-fear.mobi – Downloaded 7960 times – 14.37 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் A4 PDF” live-with-fear-A4.pdf – Downloaded 13377 times – 4.70 MB

செல்பேசிகளில் படிக்க

Download “பயத்தோடு வாழப் பழகிக் கொள் 6 inch PDF” live-with-fear-6-inch.pdf – Downloaded 4206 times – 28.84 MB
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

வெளியீடு:https://freetamilebooks.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னூலாக்கம்: சிவமுருகன் பெருமாள்

மின்னூல் வெளியீடு: த.ஸ்ரீனிவாசன்

உரிமை –Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

இணையத்தில் படிக்க – http://livelifewithfearness.pressbooks.com

புத்தக எண் – 120

டிசம்பர் 9 2014

மேலும் சில நூல்கள்

  • பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது – பாகம்-1
  • தமிழியல் ஆய்வுகள் தமிழ்நேயத்தின் பார்வை – கட்டுரைகள் – இர.ஜோதிமீனா
  • உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை – கட்டுரைகள் – ச. சாம்பசிவனார்
  • வனம் – பயணக் கட்டுரை

Comments

2 responses to “பயத்தோடு வாழப் பழகிக் கொள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.