துப்பறியலாம் வாங்க!!! – அமெரிக்காவின் மிக சிக்கலான கொலை வழக்குகள்
ராம்குமார் – ramg75@gmail.com
மின்னூல் வெளியீடு : freetamilebooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மின்னூலாக்கம் & அட்டைபடம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com
துப்பறியலாம் வாங்க – ஒரு அறிமுகம்.
மனிதனுக்கு சஸ்பென்ஸ் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் தான் ஜோதிடம் பக்கம் இழுத்துச் செல்கிறது.
2000-வது வருடம் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மெடிக்கல் டிடக்டிவ்ஸ்” தொடர், மிகவும் பயனுள்ள, ஆர்வத்தை தூண்டக்கூடிய நிகழ்ச்சி.
ஆசிரியர் பற்றி
ராம்குமார், ஒரு கணிப்பொறி பட்டதாரி. வேலை செய்வது ஆய்வாளராக.
தொடர் பற்றி
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு குற்றம் (கொலை, கொள்ளை, நோய்) பற்றி முதல் 10 நிமிடங்களுக்கு, ஒரு நாடக பாணியில் நடிகர்கள் நடிப்பதின் மூலம் காண்பிப்பார்கள். அடுத்த 10 நிமிடங்களுக்கு, அந்த குற்றத்தை போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் எப்படி துப்பறிந்து, குற்றவாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பதை பற்றி விவரிப்பார்கள். கடைசி 5 நிமிடங்கள், அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரின் உண்மையான தோற்றத்தை போட்டோவில் காண்பிப்பார்கள்.
இத்தொடர், மிகவும் பயங்கரமான, சிக்கலான குற்றங்களை நிகழ்த்தியவர்கள் எப்படிப்பட்ட தடயங்களை விட்டுச் சென்றார்கள்?, அதை மருத்துவ பூர்வமாக எப்படி கண்டுபிடித்து, கோர்ட்டில் நிரூபித்து, தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள் என்பதை மிகவும் அருமையாக விளக்கியது.
இந்த மாதிரி வழக்குகளை நிரூபிக்க அமெரிக்க சட்டங்கள் சில கடுமையான விதிமுறைகளை பின்பற்றி வருகிறது (இந்திய சட்டங்களும் இப்படித்தான் என நினைக்கிறேன்). அந்த சட்டங்கள் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதை முக்கியமாக கருதுகிறது. எடுத்துக்காட்டாக, போலீசார் பின்வருபவற்றை சந்தேகத்துகிடமில்லா வகையில் கோர்ட்டில் எடுத்துரைக்க வேண்டும்.
கொலை வழக்குகளில், கொலை செய்யப்பட்டவரின் உடல் மற்றும் கொலைக்கு உதவிய ஆயுதம்
கொலை நடந்த நேரம் மற்றும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இடத்தில் இருந்தார் அல்லது அவர்தான் அந்த கொலையை செய்ய சொன்னார் என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரம்.
மேல் கூறியவற்றில் எதையாவது ஒன்றை நிரூபிக்க தவறினால், குற்றவாளி தப்பித்துவிடுவான். இந்த விஷயங்களை தெரிந்து, அதில் மாட்டிக் கொள்ளாமல் குற்றம் செய்தவர்கள் பலர், ஆனால், அனைவரும் மாட்டிக் கொண்டது வேறு கதை. சில குற்றங்கள் 20 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டனை அடைந்ததும் உண்டு. மரணமடைந்தவர்களை எரிக்காமல், புதைக்கும் பழக்கம் பெரும்பாலும் அங்கு பின்பற்ற படுவது போலீசாருக்கு, போஸ்ட்மார்டம் செய்து, குற்றத்தை நிரூபிக்க உதவியாக இருக்கிறது.
இத்தொடரில் ஒளிபரப்பான சில சிக்கலான வழக்குகளைப் பற்றி, எழுதலாம் என நினைக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பு பார்த்ததால், எனக்கு பெயர்கள் மறந்துவிட்டது. அதனால் எனக்கு நியாபகம் இருக்கும் அனைத்து தகவல்களையும், வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.
துப்பறியலாம். வாங்க!!!
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “துப்பறியலாம் வாங்க! epub”
thuppariyalam_vaanga.epub – Downloaded 4760 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “துப்பறியலாம் வாங்க! mobi”
thuppariyalam_vaanga.mobi – Downloaded 1079 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “துப்பறியலாம் வாங்க! A4 PDF”
thuppariyalam_vaanga_a4.pdf – Downloaded 4716 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “துப்பறியலாம் வாங்க! 6 inch PDF”
thuppariyalam_vaanga_6in.pdf – Downloaded 2715 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/detective_201708
புத்தக எண் – 305
ஆகஸ்ட் 3 2017