ஏற்காடு இளங்கோ
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
ஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
அட்டைப்படம் – மனோஜ் குமார்
தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் எனத் தற்போது பிரகடனம் செய்யப்படுகிறது. பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல் என்பதே இன்றைக்கு சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்காகவே பெற்றோர்களும் தன்னம்பிக்கை புத்தகங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். வெற்றி பெறுவதற்கான உபதேசங்கள் கொடுக்கப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெறுதல் என்பது எதிர்காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக உள்ளது. விடா முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் உதாரணமாகச் சொல்லப்படுபவர்களில் ஹெலன் கெல்லரும் ஒருவர்.
விடா முயற்சியும், தன்னம்பிக்கையின் காரணமாக உலகமே அவரை திரும்பிப் பார்த்தது. கடின உழைப்பு, சமூக சேவை, கல்வி, சம உரிமை ஆகியவற்றிற்கான அவர் ஆற்றிய பெரும் பணியால் அவரை உலகம் போற்றியது. பார்வையற்ற, காது கேளாத ஒரு பெண், தடைகளைக் கடந்து மக்கள் சேவை புரிந்ததால் அவரை அதிசயப் பெண் என புகழ்ந்தனர். மக்கள் நலத்தில் அக்கறை கொண்டவரால் தான் உலகளவில் பிரபலம் அடைய முடியும் என்பதற்குஹெலன் கெல்லர் ஓர் உதாரணம். காது கேளாத, பார்வையற்ற பெண்ணின் வியப்படையச் செய்யும் சாதனை வாழ்க்கையை விவரிக்கும் புத்தகம். இதனைப் படிக்கும் போது சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்படும்.
இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு. S. நவசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. M. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. இப்புத்தகத்தை வெளியிட்டுள்ள freetamilebooks.com மிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்
– ஏற்காடு இளங்கோ
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் epub” helen-keller.epub – Downloaded 6601 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் A4 PDF” helen-keller-A4.pdf – Downloaded 5756 times –செல்பேசிகளில் படிக்க
Download “பார்வையற்ற முதல் பட்டதாரி பெண் ஹெலன் கெல்லர் 6 inch PDF” helen-keller-6-inch.pdf – Downloaded 2322 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 252
மார்ச் 28 2016
Leave a Reply