அரவிந்த்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
ஆசிரியர் – அரவிந்த்
aravindsham@gmail.com
மின்னூல் வெளியீடு – FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-Noncommercial-No Derivative License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்
மின்னூலாக்கம் – அரவிந்த்
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
இந்தப் பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி எத்தனை, எத்தனையோ அதிசயங்கள் நடந்திருக்கின்றன. இன்னமும் நடந்து கொண்டு இருக்கின்றன. அது ஆன்மீகம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், உளவியல் துறை ஆகட்டும், ஏன் அறிவியல் துறையே கூட ஆகட்டும்; நம்ப முடியாத, எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத, நமது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன; உலகெங்கும் அப்படி நடந்த, நடக்கின்ற அதிசயச் செய்திகளை, சம்பவங்களைத் தான் “நம்ப முடியாத அதிசயங்கள்” என்ற இந்த நூலில் பார்க்கப் போகிறோம். இதில் ஆன்மீகம், சித்தர்களின் சித்தாற்றல்கள், ஆவிகள், அமானுஷ்யங்கள், ஜோதிடம், ஈ.எஸ்.பி, டெலிபதி, தேவதைகள், முற்பிறவி, மறுபிறவிகள், ஆவியுடல் பயணங்கள், மரணத்தின் பின் நடப்பது என்ன என பல்வேறு துறைகள் பற்றிய அதிசயச் செய்திகளைப் பார்க்க இருக்கிறோம். ஏன், எதற்கு, எப்படி என்று படிப்பவர்களது சிந்தனையைத் தூண்டுவதுதான் இந்த இந்த நூலின் முக்கிய நோக்கம்.
நாம் கற்றது கைமண் அளவுதான். இன்றைக்கு அறிய இயலாத, அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்றாக நாம் நினைப்பது நாளையே நிரூபிக்கப்பட்டு அறிவியல் எல்லைக்குள் வரலாம். இன்றைக்கு பல விஷயங்கள் அப்படி நிரூபிக்கப்பட்டவைதான். அதுபோன்ற ஒரு சிந்தனையை இதில் உள்ள கட்டுரைகள் தூண்டும் என்று நம்புகிறேன்
https://ramanans.wordpress.com/ என்ற எனது வலைப்பூவில் வெளியான சில கட்டுரைகளே தற்போது மின்னூல் வடிவம் பெறுகின்றன. படித்து விட்டு உங்கள் கருத்தை aravindsham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தயங்காமல் எழுதவும்.
நன்றி
அன்புடன்
அரவிந்த்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “நம்ப முடியாத அதிசயங்கள் epub” namba-mudiyatha-athisayangal.epub – Downloaded 47393 times – 853.86 KBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “நம்ப முடியாத அதிசயங்கள் A4 PDF” namba-mudiyatha-athisayangal-A4.pdf – Downloaded 94824 times – 4.04 MB
செல்பேசிகளில் படிக்க
Download “நம்ப முடியாத அதிசயங்கள் 6 inch PDF” namba-mudiyatha-athisayangal-6-inch.pdf – Downloaded 24300 times – 4.20 MBஇணையத்தில் படிக்க – http://aravindsham.pressbooks.com
புத்தக எண் – 182
ஜூன் 20 2015
Leave a Reply