ஏற்காடு இளங்கோ
தாவரவியல் அறிஞர், எழுத்தாளர், புகைப்படக் கலைஞர், விக்கிப்பீடியா பங்களிப்பாளர், கிரியேட்டிவ் காமன்சு உரிமை பரப்புரையாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர் போன்ற பல்வேறு முகங்களைக் கொண்ட திரு. ஏற்காடு இளங்கோ அவர்களின் பேட்டி இங்கே.
87 நூல்களை எழுதியுள்ள ஏற்காடு இளங்கோ அவர்கள், தமது நூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் நமக்கு அளித்து வருகிறார். அவரது மின்னூல்கள் இங்கே பதிவிறக்கம் செய்யலாம் –
https://freetamilebooks.com/authors/yercaud-elango/
விக்கிப்பீடியாவிற்கு அவர் கொடையளித்த தாவரவியல் புகைப்படங்களை இங்கே காணலாம் – https://commons.wikimedia.org/wiki/Category:Files_by_User:Yercaud-elango
இது வரை 12,000 தாவரங்களின் புகைப்படங்களை அவற்றின் அறிவியல் விவரங்களோடு சேர்த்துள்ளார்.
தொடர்ந்து கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் தனது மின்னூல்களையும் புகைப்படங்களையும் அளித்து வரும் ஏற்காடு இளங்கோ அவர்களுக்கு எமது நன்றிகள். அவரது பேருழைப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் அவரது துணைவியார் திருமதி. தில்லைக்கரசி அவர்களுக்கும் நன்றிகள். அவரது இனிய பேட்டியை வெளியிட்ட விடியல் தொலைக்காட்சியினருக்கும் நன்றிகள்.
Comments
2 responses to “ஏற்காடு இளங்கோ – காணொளி பேட்டி”
Elango sir is a good author. All his books are excellent. I appreciate him