
மாபெரும் ஆன்மிக சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன் எழுதிய ‘From Poverty to Power’ நூலின் முதல் பகுதியான ‘The Path of Prosperity’யை, ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற தலைப்பில் தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
மனித வாழ்வின் துன்பங்கள், துக்கங்கள், கவலைகள் என்பவை புற உலக நிகழ்வுகளால் ஏற்படுவதில்லை; அவை ஒருவரின் அக மனநிலையின் பிரதிபலிப்பே என்பதை இந்நூல் ஆழமாக விளக்குகிறது. துன்பத்தின் உண்மையான தன்மையை அறிந்து, அதை நீக்கும் வழிகளையும், மனம் மற்றும் எண்ணங்களின் மௌன வலிமையையும் நூல் படிகளாய்க் காட்டுகிறது.
சுயநலமற்ற அன்பு, தூய்மையான எண்ணங்கள், மனதை ஆளும் ஒழுக்கம், அசைக்க முடியாத நம்பிக்கை போன்ற உயரிய குணங்களை வளர்ப்பதன் மூலம், எந்தவொரு விரும்பாத நிலையிலிருந்தும் விடுபட்டு, நிலையான ஆரோக்கியம், அசைக்க முடியாத வெற்றி, வளமான இன்பம், நித்திய வலிமை ஆகியவற்றை அடைய முடியும் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
வள்ளுவரின் அறநெறிகளுக்கு இணையானது என்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களால் போற்றப்படும் இந்நூல், உங்கள் அகத்தின் வலிமையை உணர்ந்து, புற உலகை ஆள விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஆன்மிகப் பொக்கிஷம்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “வலிமைக்கு மார்க்கம் epub” valimaikku-markam.epub – Downloaded 2632 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “வலிமைக்கு மார்க்கம் A4 PDF” valimaikku-markam-a4.pdf – Downloaded 3714 times –செல்பேசிகளில் படிக்க
Download “வலிமைக்கு மார்க்கம் 6 inch PDF” valimaikku-markam-6-inch.pdf – Downloaded 2016 times –வலிமைக்கு மார்க்கம்
ஜேம்ஸ் ஆலன் – வ.உ.சி
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
உரிமை : Public Domain
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை
மின்னூலாக்கம் – அருண்
அட்டைப்படம் – மனோஜ் குமார்
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 322
நவம்பர் 2 2017




Leave a Reply