இந்த புத்தகம் எழுத ஆரம்பிச்ச நாள்களில் முதலில் எதை எழுத எப்படி எழுத என்று நினைத்தேன். பிறகு தினமும் கணினியை தொட்டவுடன் எந்தச் சொல்லில் இருந்து தொடங்குவது என்று தெரியாமல் ஆரம்பித்து, என்னுடைய எல்லா கதைகளையும் யாருக்காக ஆரம்பிக்கிறது? அது எங்கே செல்கிறது? யாருக்கான பொருள் அதில் நிரம்பிக் கிடக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாமல் முடிகிறது . என் விரல் செல்லும் பாதைகளில் இந்த கதைகள் பயணித்து வந்துள்ளது. இது மூலமா நான் யாரையும் குற்றம் சொல்ல வர வில்லை, இதை அனைத்தையும் கதைகளாக மட்டும் பார்க்கவும். காமம், காதல், வலி, தோல்வி, வெற்றி, உணர்வுகள், உறவுகள், நட்பு ஆகியவற்றை தொடுவானம் தொட முயற்சி செய்தும், முழுவதும் தொடாமல் விலகி செல்வதும் வானம் போலவும் பயணித்துள்ளது. ஒவ்வொரு கதைகளையும் பார்வையற்ற ஒருவன் ஓவியம் வரைவது போல தான் நானும் எழுதியுள்ளேன். எனது தூரிகையிலிருந்து சிதறி எந்த வித உத்தேசமும் இல்லாத வர்ணங்களாய்த்தான் இந்த தொடுவானம் வந்துள்ளது. உங்களின் ஆதரவு மற்றும் கருத்துக்களை கண்டிப்பாக எனக்கு மின்அஞ்சல் செய்யவும். sjayaganesh@gmail.com இந்த தொடுவானம் உங்கள் மனதை தொடும் என்ற நம்பிக்கையில். ஜெயகணேஷ்
உரிமை Creative Commons Attribution ShareAlike 4.0 International License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
நூல் ஆசிரியர்கள் – ஜெயகணேஷ் & sjayaganesh@gmail.com
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: socrates1857@gmail.com
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader),
ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “தொடுவானம் சிறு கதைகள் epub”
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “தொடுவானம் சிறு கதைகள் mobi”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “தொடுவானம் சிறு கதைகள் A4”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “தொடுவானம் சிறு கதைகள் 6 inch”
புத்தக எண் – 163
மே 05 2015