எரிக் ரேமண்ட் எழுதிய “பேராலயமும் சந்தையும்” என்ற இந்நூல், கணினி மென்பொருள் உருவாக்கத்தில் பின்பற்றப்படும் இரண்டு மாறுபட்ட பாணிகளைப் பற்றியது. பேராலயம் போன்ற மையக் கட்டுப்பாடு கொண்ட மென்பொருள் உருவாக்கம் ஒருபுறம் இருக்க, சந்தை போன்ற திறந்த மூல மென்பொருள் உருவாக்கம் எப்படிச் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை லினக்ஸ் மற்றும் திறந்த மூல மென்பொருள் வளர்ச்சி அனுபவங்களின் மூலம் ஆசிரியர் விளக்குகிறார்.
லினஸின் விதி என்று அழைக்கப்படும் “போதுமான கண்கள் இருந்தால், எல்லா பிழைகளும் எளிதில் தெரியும்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, திறந்த மூல மென்பொருளின் கூட்டு உழைப்பின் பலத்தையும், மென்பொருளின் தரத்தை மேம்படுத்துவதில் அது வகிக்கும் பங்கையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். மேலும், கொந்தர்கள் என்று அழைக்கப்படும் ஆர்வமுள்ள நிரலாளர்கள் மென்பொருள் வளர்ச்சியில் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறார்கள், ஃபெட்ச்மெயில் என்ற திறந்த மூலத் திட்டத்தை ஆய்வு செய்வதன் மூலம் திறந்த மூலத்தின் வெற்றி மற்றும் பயன்பாட்டை எவ்வாறு புரிந்துகொள்ளலாம் என்றும் ஆசிரியர் விளக்குகிறார்.
மென்பொருள் உருவாக்கத்தில் உள்ள ‘பேராலயம்’ மற்றும் ‘சந்தை’ ஆகிய இரு பாணிகளின் உள்ளார்ந்த வேறுபாடுகளை விளக்குவதோடு, திறந்த மூல முறையானது, மென்பொருள் உருவாக்குதலின் எதிர்காலத்தை எப்படி மாற்றியமைக்கும் என்பதையும் இந்நூல் ஆராய்கிறது.
தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “பேராலயமும் சந்தையும் epub” the_cathedral_and_the_bazaar.epub – Downloaded 11 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “பேராலயமும் சந்தையும் A4 PDF” the_cathedral_and_the_bazaar_a4.pdf – Downloaded 13 times –செல்பேசியில் படிக்க
Download “பேராலயமும் சந்தையும் 6 inch PDF” the_cathedral_and_the_bazaar_6_inch.pdf – Downloaded 2 times –நூல் : பேராலயமும் சந்தையும்
ஆசிரியர் : எரிக் ரேமண்ட்
புத்தகம் குறித்த கூடுதல் விவரங்கள்
அட்டைப்படம் : லெனின் குருசாமி
தமிழாக்கம் : இரா. அசோகன்
மின்னூலாக்கம் : ஐஸ்வர்யா லெனின்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : CC-BY-SA. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மேம்படுத்தலாம். விற்கலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 862
Leave a Reply