
நீங்கள் படித்து மகிழ இந்த ‘சொதப்பல்களை’ மின்னூல் வடிவத்தில் தந்துள்ளேன். இதைப் படிக்கும் போது கண்டிப்பாக உங்கள் வாழ்வில் நீங்கள் சொதப்பிய அனுபவங்கள் உங்கள் நினைவில் வந்து மோதுவதை உணர்வீர்கள். ஏறத்தாழ உங்களின் சொந்த சொதப்பல் அனுபவங்கள் போலவே இருக்கும். நீங்கள் சொதப்பியிருக்கிறீர்கள் என்று சொல்ல வரவைல்லை . உதாரணத்திற்கு சொல்கிறேனே….., தயிர் சில நாட்களில் நம் வீட்டில் உறையாமல் இருந்திருக்கும். தயிர் உறையாததால் நீங்கள் சந்தித்த சில சங்கடங்கள் இப்பொழுது நினைத்தால் உங்களுக்கு சிரிக்கத் தோன்றுகிறது அல்லவா? அந்த மாதிரி சம்பவங்களின் தொகுப்பே ”சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் “. படித்துப் பாருங்கள்.
ஒவ்வொரு அனுபவத்தையும் படித்து முடித்தபின் உங்க முகத்தில் தவழும் சிரிப்பையோ, புன்னகையையோ என்னால் பார்க்கத் தான் முடியாதே தவிர உணர முடியும். உங்களின் ஒவ்வொரு புன்னகையும் எனக்கு மிகப்பெரிய விருது. என் எழுத்துக்குக் கிடைக்கும் மிகப் பெரிய கவுரவம்.
இந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,Free Tamil Ebooks teamஇல் இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
மின்னூலைத் தரவிறக்கம் செய்து படிக்கும் உங்களைப் போன்ற வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..
படித்து, சிரித்த அனுபவங்களை பின்னூட்டங்கள் வாயிலாக என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
நானும் மகிழ்வேன்.
நன்றி,
ஆசிரியர் – ராஜலட்சுமி பரமசிவம்
என்னுடைய ” சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் ” கட்டுரைத் தொகுப்பை மின்னூல் வடிவில் வெளியிட்ட freetamilebooks.com குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
மின்மடல் வழியாக நான் தொடர்பு கொள்ளும் திரு. சீனிவாசன் அவர்களுக்கும், அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்த திரு. ப்ரியமுடன்வசந்த அவர்களுக்கும்,
கட்டுரைத் தொகுப்பை மின்னூல் வடிவமாகிய திருமதி.ப்ரியா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
super sodappalgal
அட்டைப்படம் மிகவும் அருமையாக உள்ளது வசந்த். எப்படிதான் இப்படி கிரியேட்டவ்வாக யோசிக்கின்றீர்கள் என்று தெரியவில்லை வாழ்த்துகள். 🙂
அம்மா நலமா?
உங்களுடைய மின் புத்தகம் இப்போது தான் படித்து முடித்தேன். மிகவும் ரசிக்கும் படியாக எழுதி இருக்கிறீர்கள்… என்னைமீறி சில இடங்களில் சிரிப்பு வந்து விட்டது! குறிப்பாக இடியாப்பம் கதை… புலி கதையை முதலில் நம்பிவிட்டேன்… நன்றாக கற்பனையை, அப்படி உணரமுடியாதபடி எழுதி இருக்கிறீர்கள்… இதுபோல பல புத்தகங்கள் எழுதிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
உங்களிடம் நல்ல நகைசுவை உணர்வு இருக்கிறது!!!
great effort…thank you so much admin…
௨ங்கள் நூல் படித்தில் என் வாழ்க்கையின் சில சொதபகபல்கள் என்னை மகிழ்ச்சி படுத்தியது அருமையான நூல் நன்றி