சிந்தித்தால் சிரிப்புவரும் (அல்லது) அலுவலர்களின் அட்டகாசம்
ஊக்கம், உதவி மற்றும் மேற்பார்வை
எஸ்.சந்திரா பசுபதிலிங்கம்
அ.ரகமத்துல்லா்
மின்னூல் வெளியீடு : freetamilebooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மின்னூலாக்கம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com
நூல் அறிமுக உரை
வணக்கம்.
நான் 1969-லேயே அரசுப் பணிக்கு வந்திருந்தாலும் நிலையான பணிக்கு 1973-ல் வருவாய்த் துறைக்கு வந்தேன். அது முதல் 2009 ல் ஓய்வு பெறும்வரையும் முக்கியப் பொறுப்பு வாய்ந்த பணியிடங்களில் தான் அமர்த்தப்பட்டிருந்தேன். இயற்கையாகவே என்னிடம் குடிகொண்டிருந்த ரசனை, எதனையும் மனப் பூர்வமாக செய்யும் குணங்களின் காரணமாக எந்தப் பணியிடத்திலும் மிகவும் கஷ்ட்டப்பட்டுக்கொண்டோ அல்லது வெறுப்புடனோ பனி புரிந்ததில்லை. அதன் காரணமாக நான் பெற்ற அனுபவங்கள் அதிகம். பலப்பல நிகழ்வுகள் என் மனதில் பதிந்து விட்டன. பணிநிறைவு செய்து எழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஓய்வாக அமர்ந்திருக்கும் வேளைகளில் நீங்காக நினைவுகள் மனதில் நிழலாடும்போது வித்தியாசமான உணர்வு ஏற்படும்.
அந்த உணர்வுகளை விளையாட்டாக எனது கணிப்பொறியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக. தட்டச்சு செய்துவைத்தேன்.. அதனை எனது ஆப்த நண்பன் ரஹமத்துல்லாவிடம் மட்டும் பகிர்ந்து கொண்டேன். அதனைப் படித்தவன், அதனைப் புத்தகமாக வெளியிடும்படி ஆலோசனை கூறியபோதும். அதில் எனக்கு அவ்வளவு அக்கறை ஏற்ப்படவில்லை.
சில காலம் முன்னதாக free tamil books இணைய தளத்தை எதேச்சையாக அறிந்தேன். (தனது மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைத்த வேளை) இயல்பாகவே எதாவது புத்தகம் வாசிக்கும் நான், பொட்டலம் கட்டிவரும் துண்டுக் காகிதத்தில் இருக்கும் சிறுசெய்தியைக்கூட படிப்பேன். அப்படிப்பட்ட நான் இந்த தளத்தில் வந்த புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன்.
அந்த சந்தர்ப்பத்தில்தான் நமது அனுபவங்களையும். இந்த தளத்தில் வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. ஆனாலும். அப்பணியினை முடிப்பதில் இவ்வளவு சிரமம் ஏற்ப்படும் என்று நான் கருதவில்லை. நான் அலுவலகத்தில் தட்டச்சு செய்த font எனது புதிய கணினியில் வேலை செய்யவில்லை. பலப்பல தேடல்களின் பின்னர். Unicode converter கண்டுபிடித்து மாற்றம் செய்தேன். அந்தோ பல எழுத்துக்கள் விதவிதமாக மாற்றம் கண்டு கண்ணாமூச்சி ஆடியது. கடைசியில் அனைத்தையும் திரும்பத் திரும்ப சரிசெய்ய வேண்டியதாகிவிட்டது. ஒவ்வொரு முறை திறக்கும்போதும் / நகலெடுத்து ஒட்டும்போதும் இந்த மாற்றம் என்னை வெறுப்பேற்றியது. இருந்தாலும் நீயா நானாவென்று ஒரு கை பார்த்துவிடுவது என்ற அடிப்படையில் ஒருவகையாக முடித்துவிட்டேன்.
இந்த புத்தகம் ஒன்றும் என் அனுபவத்தின் அடிப்படையில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நூல் அல்ல. மாறாக படிக்கும் நேரத்தில், இப்படிக்கூட நடக்கிறதா என நகைச்சுவையுடன் நினைக்கத் தூண்டும்.
அதைவிட, படிக்கும் நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தில் நிகழ்ந்தவற்றை நினைக்க வைக்கும் என்பதில் ‘துமி’ (துளியினும் மிக நுண்ணியது) அளவேனும் சந்தேகமில்லை.
நான் அரசுப் பணியில் மட்டுமே என் முழு அர்ப்பணிப்புடன் இருந்துவிட்டதால் அனைத்து நிகழ்வுகளும் அந்த சூழ்நிலையைச் சுற்றியே வலம் வருவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
படிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை மட்டும் தரும் என்றும் சிறு நெருடலைக்கூட ஏற்படுத்தாது என்றும் நம்புகிறேன்.
பழைய நினைவுகளைச் சுமந்து வருபவைகள் என்பதால் புத்தகத்திற்கு பழைய மாதிரியே இரட்டைப் பெயராக சற்று பழைமையாக வைத்திருக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “சிந்தித்தால் சிரிப்புவரும் (அல்லது) அலுவலர்களின் அட்டகாசம் epub”
sindhithal-sirippu-varum.epub – Downloaded 12652 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “சிந்தித்தால் சிரிப்புவரும் (அல்லது) அலுவலர்களின் அட்டகாசம் mobi”
sindhithal-sirippu-varum.mobi – Downloaded 2352 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “சிந்தித்தால் சிரிப்புவரும் (அல்லது) அலுவலர்களின் அட்டகாசம் A4 PDF”
sindhithal-sirippu-varum.pdf – Downloaded 9001 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “சிந்தித்தால் சிரிப்புவரும் (அல்லது) அலுவலர்களின் அட்டகாசம் 6 inch PDF”
sindhithal-sirippu-varum-6-inch.pdf – Downloaded 3036 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/sindhithal-sirippu-varum
புத்தக எண் – 256
ஜூன் 2 2016