ரஞ்சனி நாராயணன்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை
குழந்தை வளர்ப்பு அனுபவத் தொடர்
ஆசிரியர் – ரஞ்சனி நாராயணன்
மின்னஞ்சல்: [email protected]
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னூலாக்கம் : சிவமுருகன்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முன்னுரை
எனது வலைப்பதிவில் மட்டுமே எழுதி வந்த நான் பிற வலைத்தளங்களுக்குச் சென்று கருத்துரை கொடுத்துவிட்டு வருவேன். அப்படி தொடர்ந்து நான் சென்ற தளம் நான்குபெண்கள்.காம். வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது. எந்தப் பதிவாக இருந்தாலும் அதைப் புதுமையாக செய்து வந்தார்கள். உங்கள் பாணி நன்றாக இருக்கிறது என்று ஒருமுறை கருத்துரை சொன்னபோது ‘உங்களைப் போன்றவர்கள் எங்களுடன் கைகோர்த்தால் இன்னும் பல விஷயங்கள் செய்யலாம்’ என்று நான்குபெண்களிடமிருந்து பதில் வந்தது. ‘சரி சொல்லுங்கள், என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டபோது, எங்களுக்காக குழந்தை வளர்ப்புத் தொடர் எழுதுங்கள்’ என்றார்கள். அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இந்தத் தொடர். குழந்தையை அப்படி வளர்க்க வேண்டும், இப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வெறும் ஏட்டுச்சுரக்காய் மாதிரி இல்லாமல், என்னுடைய, எனது தோழிகளின் எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொன்னது என்று எல்லாவற்றையும் கலந்து எழுதியது இந்தத் தொடரின் வெற்றிக்குக் காரணம் என்று சொல்லலாம்.
இந்த முதல் புத்தகத்தில் பெற்றோர்களுக்கும் பயன்படும்வகையில் பலவற்றைச் சொல்லியிருக்கிறேன். வேலைக்குப் போகும் பெண்கள், குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்கு, குழந்தையின் பேச்சுத் திறன், இளம் குழந்தைகளுக்கு ஏற்படும் காதுகேளாமை என்று பல விஷயங்களையும் பேசியிருக்கிறேன்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “செல்வக் களஞ்சியமே epub” selva-kalanjiyame.epub – Downloaded 4919 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “செல்வக் களஞ்சியமே A4 PDF” selva-kalanjiyame-A4.pdf – Downloaded 15951 times –செல்பேசிகளில் படிக்க
Download “செல்வக் களஞ்சியமே 6 inch PDF” selva-kalanjiyame-6-inch.pdf – Downloaded 1860 times –இணையத்தில் படிக்க – http://selvakalanchiyamae.pressbooks.com
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 234
டிசம்பர் 28 2015
Leave a Reply