நூற்பெயர் : குறும்படத் திரைக்கதைகள்
ஆசிரியர் : முனைவர் த. டான்ஸ்டோனி
பதிப்பு : முதற்பதிப்பு ஏப்ரல் 2014
மின் அஞ்சல் : prof.donstony@gmail.com
மின்னூலாக்கம் : த . தனசேகர்
மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அணிந்துரை
முனைவர் ஞா. பெஸ்கி
இணைப் பேராசிரியர்
தூய வளனார் கல்லூரி
திருச்சிராப்பள்ளி – 02
தமிழக நாட்டுப்புற கருத்துக்களைக் காட்சியின் வாயிலாக உணர்த்திய நாட்டுப்புறக்கலைகளுள் தெருக்கூத்து குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. கூத்தில் தொடங்கிய தமிழ் நாடகப் போக்கு இன்று நவீன நாடகங்களாக வளர்ந்து வருகின்றது. அறிவியல் தொழில் நுட்பச் சாதனங்களின் வளர்ச்சியால் காட்சிப்பிம்பங்களின் வாயிலாகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் திரைப்படங்கள் இமாலய வளர்ச்சி பெற்றுள்ளன.
வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தன் தடங்களைப் பதிக்க விரும்பும் ஒரு கலைஞன் குறும்படங்களைத் தனக்கானப் பயிற்சிப் பட்டறையாக அமைத்துக்கொள்கிறான். இருமணி நேரத்திற்கு மேலாகக் காண்பிக்கப்படும் திரைப்படங்களைவிட இன்று பத்துநிமிடக் குறும்படங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கின்றன. இத்தகைய குறும்படங்கள் இயக்குகின்ற கலைஞராக இயக்கப் பயிற்றுவிக்கின்ற இயக்குநராகத் திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் த. டான்ஸ்டோனி விளங்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் உருவான ஐந்து குறும்படங்களைத் திரைக்கதைகளாக வெளிப்படுத்தும் முயற்சியாக ‘குறும்படத் திரைக்கதைகள்’ என்னும் இந்நூல் அமைகின்றது.
சமூகச் சிக்கல்களை அங்கதச்சுவையோடு வெளிப்படுத்தும் இவரின் குறும்படங்களில் தமிழ்ப்புதினங்களின் மீட்டுருவாக்கப் போக்கையும் உணரமுடிகிறது. குறும்படங்களை உருவாக்கத் துடிக்கும் ஒரு கலைஞன் காட்சிகளை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் என்னும் வரைச்சட்டமாக இந்நூலின் இரண்டாம் பாகமாக அமைகின்ற ‘காட்சிப்பிரிப்புகள்’ என்னும் பகுதி அமைகிறது. தமிழ் நாடகங்களைத் திரைப்படங்களாக நகர்த்தத் துடிக்கும் இளம் படைப்பாளர்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் என்றால் மிகையில்லை.
திரைக்கலையையும் தமிழலக்கியத்தையும் இணைத்துச் சாதனைகள் படைக்கத் துடிக்கும் நூலாசிரியர் முனைவர் த. டான்ஸ்டோனி அவர்களைப் பாராட்டுகிறேன். இந்நூலை வாசிக்கின்ற இளம் படைப்பாளர்கள் இந்நூலை அடியொற்றிப் பல குறும்படங்கள் படைத்து மனித சமூகத்திற்கு வளம் சேர்க்கவேண்டும் என்று விழைகிறேன். வாழ்த்துகிறேன்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “குறும்படத் திரைக்கதைகள் epub”
kurumpada_thiraikadhaigal.epub – Downloaded 1213 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “குறும்படத் திரைக்கதைகள் mobi”
kurumpada_thiraikadhaigal.mobi – Downloaded 417 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “குறும்படத் திரைக்கதைகள் A4 PDF”
kurumpada_thiraikadhaigal-A4.pdf – Downloaded 1650 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “குறும்படத் திரைக்கதைகள் 6 inch pdf”
kurumpada_thiraikadhaigal-6inch.pdf – Downloaded 596 times –
பிப்ரவரி 25 2018