சாந்திக்கு மார்க்கம் – வ.உ. சிதம்பரம் பிள்ளை

சாந்திக்கு மார்க்கம்
ஜேம்ஸ் ஆலன் – வ.உ.சி

மின்னூலாக்கம் – அருண் –
அட்டைப்படம் – மனோஜ் குமார் – [email protected]
FreeTamilEbooks.com

சாந்திக்கு மார்க்கம்
(ஜேம்ஸ் ஆலனின் நூல், தமிழில் மொழிபெயர்ப்பு)
வ.உ. சிதம்பரம் பிள்ளை

உரிமை : Public Domain
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை

முகவுரை

“சாந்திக்கு மார்க்கம்” என்னும் இந்நூல் இங்கிலாந்து தேசம், இல்பிராக் கோம்பி நகர் ஜேம்ஸ் ஆலன் என்னும் பெரியாருடைய, (From Poverty to Power) “எளிமையிலிருந்து வலிமைக்கு” என்னும் ஆங்கில நூலின் இரண்டாம் பாகமாகிய, “The Way of Peace” என்பதன் மொழிபெயர்ப்பு.

முதல் நூலின் ஆசிரியர், நமது நாட்டு நூல்களின், ஆங்கில மொழி பெயர்ப்புக்களைக் கற்று, அவற்றின் பொருள்களைக் கடைப்பிடித்தொழுகி, மெய்ஞ்ஞானியாய் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில், அவர், தாம் கண்ட உண்மைகளை ஏனையோர்களும் கண்டு ஒழுக்க மேம்பாடு அடைந்து, மெய்ஞ்ஞானிகளாய்ப் பேரின்பம் பெற்று வாழவேண்டுமென்ற அவாவுடையவராய், ஆங்கில மொழியில் பல நூல்கள் இயற்றி, அச்சிட்டு வெளிப்படுத்தினார். அவற்றில் பலவற்றைப் படிக்கும் பாக்கியம் எனக்கு 1905-ம் வருஷம் கிடைத்தது. அவற்றின் அருமை பெருமைகளைக் கண்டு யான் ஆச்சரியம் அடைந்து, அவற்றையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்துத் தமிழ் மக்கள் படிக்கும்படி செய்யவேண்டுமென்று கருதினேன். உடனே அந்நூல்களில் சிறிய அளவினவாகிய இரண்டு நூல்களை ”மனம் போல வாழ்வு”, ”அகமே புறம்” என்னும் பெயர்களோடு மொழிபெயர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அவற்றை தமிழ் மக்கள் மிக விருப்போடு வாங்கிப் படித்ததைக் கண்டு, யான் ஆலனுடைய ஏனைய நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி, இதன் முதல் நூலின் முதற்பாகமாகிய ”The Path of Prosperity” என்பதை ”வலிமைக்கு மார்க்கம்” எனவும், இரண்டாம் பாகத்தைச் ”சாந்திக்கு மார்க்கம்” எனவும், வேறு இரண்டு நூல்களைப் “பேரின்ப மார்க்கம்”, “ஊழை வெல்வதற்கு உபாயம்” எனவும் அரைகுறையாக மொழிபெயர்த்து வைத்தேன். பின்னர் “வலிமைக்கு மார்க்க”த்தைப் பூரணமாக்கி அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அதனையும் தமிழுலகம் விருப்பத்துடன் ஏற்றது.

கலாசாலைகளுக்குப் பாடப்புத்தகங்கள் விதிக்கும் (Text Book Committee) பாடப் புத்தக சபையார் யான் அச்சிட்டு வெளிப்படுத்திய மேற்கூறிய, மூன்று நூல்களையும் பாடப் புத்தகங்களாக ஏற்றுக்கொண்டனர். உடனே இந்நூலைப் பூரணமாக்கி இப்போது அச்சிட்டு வெளியிடுகிறேன்.
இந்நூல் முதல்நூலின் சரியான மொழி பெயர்ப்பு. முதல் நூலிலுள்ள பாக்களைத் தமிழ்ப் பாக்களாக்கி இந்நூலில் ஆங்காங்குச் சேர்ந்துள்ளேன். இந்நூலும், முதல் நூலாசிரியரின் ஏனைய நூல்களைப் போன்று, மிகமிக உயர்ந்த இகலோக பரலோகப் பதவிகளை அளிக்கவல்ல மான்பு வாய்ந்தது. தமிழுலகம் இதனையும் உவகையுடன் வரவேற்குமென்று நம்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் துணை.
– வ.உ. சிதம்பரம் பிள்ளை
தூத்துக்குடி
17-07-1934

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “சாந்திக்கு மார்க்கம் epub” santhikku-markam-voc.epub – Downloaded 1726 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சாந்திக்கு மார்க்கம் mobi” santhikku-markam-voc.mobi – Downloaded 1027 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “சாந்திக்கு மார்க்கம் A4 PDF” santhikku-markam-a4.pdf – Downloaded 2169 times –

செல்பேசிகளில் படிக்க

Download “சாந்திக்கு மார்க்கம் 6 inch PDF” santhikku-markam-6-inch.pdf – Downloaded 1250 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/santhikku-markam

புத்தக எண் – 324

நவம்பர் 4  2017

நலம் சார்ந்த மேலும் சில நூல்கள்

  • புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!!
  • உன்னை நீ அறிவாய்! – உளவியல் கட்டுரைகள் – நிர்மலா ராகவன்
  • செல்வக் களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு அனுபவத் தொடர் – ரஞ்சனி நாராயணன்
  • யோகாசனம்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.