ராஜாவும் பிறரும்

தமிழ்த் திரை இசையை அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகள், இரண்டாயிரம்கள், இரண்டாயிரத்துப்பத்துகள் என்று decadeவாரியாகப் பிரித்துப் பேசுகிற மரபு இருக்கிறது. ஒவ்வொரு Decadeக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர்கள் முந்தைய decadeஐச் சற்றே அலட்சியமாகப் பார்ப்பதும் (நாங்க அங்கிருந்து வளர்ந்துட்டோம்ல!), அடுத்த decadeஐ மிக அலட்சியமாகப் பார்ப்பதும் (அங்கே தரம் குறைஞ்சுபோச்சுல்ல!) உப மரபு.

அவ்வகையில், நான் எண்பதுகளின் ரசிகன். குறிப்பாகச் சொல்வதென்றால், எண்பதுகளின் இளையராஜாவுக்கு ரசிகன்.

எண்பதுகளுக்கு முன்பும் பின்பும் ராஜாவும் பிறரும் நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார் என்றாலும், ஏனோ இவை எனக்கு மிக உவப்பானவை. என் ஃபோனில் இவற்றையே மிகுதியாக நிரப்பி வைத்துத் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்கிறேன். மற்ற பாடல்கள் அவ்வப்போது கேட்பதுண்டு. ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குப் பின் சலித்துப்போய், மனம் மீண்டும் இவற்றையே நாடும், ‘வீட்டு ரசம்’, ‘அம்மா கையால் சோறு’, ‘புருஷன் கையால் ஒரு மொழம் மல்லிகப்பூ’ போன்ற க்ளிஷேக்களை இங்கே நிரப்பிக்கொள்ளவும்.

அவ்விதத்தில், எண்பதுகளின் தமிழ்த் திரையிசைபற்றி நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை Freetamilebooks.com இணையத் தளத்தினர் தொகுத்து மின்னூலாகக் கொண்டுவருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

இந்நூல் முற்றிலும் இலவசம், வணிக நோக்கின்றி யாரும் எவ்வண்ணமும் பயன்படுத்தலாம். இதனை வாசிப்போர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம், தடை ஏதும் இல்லை. வாசித்து உங்கள் கருத்துகளை [email protected]க்கு எழுதினால் மகிழ்வேன். நன்றி!

என்றும் அன்புடன்
என். சொக்கன்
பெங்களூரு.

Download ebooks Android, iOS, Kindle மூலம் படிக்க

Download “ராஜாவும் பிறரும் epub” rajavum-pirarum.epub – Downloaded 15143 times – 532.19 KB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “ராஜாவும் பிறரும் A4 PDF” rajavum-pirarum-A4.pdf – Downloaded 20571 times – 1.01 MB

செல்பேசிகளில் படிக்க

Download “ராஜாவும் பிறரும் 6 Inch PDF” rajavum-pirarum-6-inch.pdf – Downloaded 6122 times – 1.07 MB

ராஜாவும் பிறரும்

எண்பதுகளின் திரையிசை பற்றிய அனுபவப் பகிர்வுகள்

என்.சொக்கன்

புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

Creative Commons Attribution-Non Commercial-No Derives 4.0 Un ported License.

வெளியீடு: FreeTamilEbooks.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

அட்டைப் பட மூல ஓவியம் – தமிழ்ப் பறவை

அட்டைப் படமாக்கம் – ஜெகதீஸ்வரன் நடராஜன்

புத்தக எண் – 48

சென்னை

ஏப்ரல் 1, 2014


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

5 responses to “ராஜாவும் பிறரும்”

  1. senthil kumar Avatar

    i always music fan how to show raja sir music is how is kural =thiruvalluvar
    like tha music means raja sir

  2. rajinirams Avatar
    rajinirams

    சூப்பர்,வண்ணத்துப்பூச்சி என்பதற்கு பதில் வன்னத்துப்பூச்சி,துலி, மஞ்சள் நிறத்தவளை என நுட்பமான விஷயங்களை கூர்ந்து கவனித்து அருமையான நூலை (பதிவை) தந்திருக்கிறீர்கள்.மிகவும் ரசித்தேன்,நன்றி கலந்த பாராட்டுக்கள்.

  3. prasanna Avatar

    Innum padikavillai.. Aanal mikka aavaludan thodangapogiraen. Nadri indha padaipirku!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.