வெங்கட் நாகராஜ்
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
வெங்கட் நாகராஜ்….. என் பெயரில் பாதியும் அப்பா பெயரில் முக்காலும் சேர்த்து வலைப்பூவுக்காக வைத்துக் கொண்ட பெயர். அதுவே இப்போது பழகி விட்டது! நெய்வேலி நகரத்தில் பிறந்து வளர்ந்து கல்லூரி முடித்த வருடத்திலேயே இந்தியத் தலைநகர் தில்லிக்கு வந்துவிட்டவன்! கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தில்லி வாசி. பயணம் செய்வது மிகவும் பிடித்த விஷயம். கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து www.venkatnagaraj.blogspot.com எனும் வலைப்பூவில் எழுதி வருகிறேன். சென்று வந்த பயணங்கள், அதில் கிடைத்த அனுபவங்களை வலைப்பூவில் எழுதி வருகிறேன்.
ஆசிரியர் – வெங்கட் நாகராஜ் – [email protected]
மின்னூலாக்கம் – வெங்கட் நாகராஜ்
அட்டைப்படம் – மனோஜ் குமார் – [email protected]
creative commons attribution Non Commercial 4.0 international license
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
பயணங்கள் நமக்கு பலப் பல அனுபவங்களைப் பெற்றுத் தருகிறது. ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாகத் தான் அமைகிறது. பயணங்களின் போது பார்க்கும் விதம் விதமான மனிதர்கள், சந்திக்கும் சவால்கள், தெரிந்து கொள்ளும் புதிய விஷயங்கள் என ஒவ்வொன்றும் நமக்கு ஒரு பாடம் தான். தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பது எனக்கு பிடித்தமான ஒரு விஷயம். அப்படி மத்திய பிரதேச மாநிலத்தின் சில இடங்களுக்கு நான்கு நாட்கள் செய்த பயணத்தில் நான் பார்த்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், கிடைத்த அனுபவங்கள் ஏராளம்.
பயணத்தின் ஒரு பகுதியாக மனவளர்ச்சி குறைந்தவர்கள், Autism, Cerebral Palcy போன்ற குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் ROSHNI என்கிற மையத்திற்குச் சென்றிருந்தோம். வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு அங்கே இருந்தவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது. வித்தியாசமான ஒரு அனுபவம் அது.
ஓர்ச்சா எனும் நகரம் ஒன்றில் தங்கியிருந்தபோது மாலை வேளைகளில் விளக்குகள் இருந்தாலும் அணைத்து விடுகிறார்கள். எங்கும் இருட்டு. எதற்கு என்று புரியாது நாங்கள் ஒரு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிப் பார்த்துக் கொண்டிருக்க, வெளியே வந்தபோது எங்கள் மீது ஒரு படையெடுப்பு நடந்தது – ஊரே இருளில் மூழ்கி இருக்கக் காரணம் அந்த படையெடுப்பு தான். அதுவும் தினம் தினம் நடக்கும் படையெடுப்பு! என்னவொரு அனுபவம்….
பழமை, புதுமை, அரண்மனைகள், வழிபாட்டுத் தலங்கள், இயற்கை எழில், வனங்கள் என இங்கே பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஏராளம். “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்பது போல, எனக்குக் கிடைத்த அனுபவங்களை எனது வலைப்பூவில் [சந்தித்ததும் சிந்தித்ததும்] எழுதினேன். இப்போது அவற்றைத் தொகுத்து மின்புத்தகமாகவும் வெளியிடுவதில் மகிழ்ச்சி. உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
மத்தியப் பிரதேசம் அழைக்கிறது….. வாருங்கள் பயணிப்போம்!
என்றென்றும் அன்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது epub”
mathiya-pradesam-azhaikkirathu.epub – Downloaded 4536 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது mobi”
mathiya-pradesam-azhaikkirathu.mobi – Downloaded 1584 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது A4 PDF”
mathiya-pradesam-azhaikkirathu-A4.pdf – Downloaded 4302 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது 6 inch PDF”
mathiya-pradesam-azhaikkirathu-6-inch.pdf – Downloaded 1820 times –இணையத்தில் படிக்க – http://mptour.pressbooks.com
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/mathiya-pradesam-azhaikkirathu
புத்தக எண் – 237
ஜனவரி 10 2015
[…] மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – வெங்க… […]