சிவபெருமான் மீது நூறு பாக்கள்
என். சொக்கன்
([email protected])
அட்டைப்படப் புகைப்படம் & வடிவமைப்பு:
சிவ. கணேசன்
([email protected])
மின்னூலாக்கம் – த.சீனிவாசன் [email protected]
மின்னூல் வெளியீடு – FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – Creative Commons Zero – CC0
பதிப்புரிமை அற்றது
நூலாசிரியர் உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தம் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளார்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை
முன்னுரை
இந்தப் பிரதோஷ நன்னாளில் ‘மாதேவன் மலர்த்தொகை’ என்ற என்னுடைய மின்னூல் வெளியாகிறது. சிவபெருமானைப்பற்றிய நூறு மரபுப்பாக்களின் தொகுப்பு இது. கீழே உள்ள இணைப்பில் இதனை இலவசமாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.
இப்பாக்களை ஃபேஸ்புக்கில் எழுதிவந்தபோது மிகச்சில நண்பர்களே வாசித்தார்கள், அது எதிர்பார்க்கக்கூடியதுதான், இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதினாலும் தமிழின் சொல்வளத்தை நாம் தலைமுறைக்குத் தலைமுறை இழந்துகொண்டிருக்கிறோம், எனவே ஒவ்வொரு பாடலிலும் சில சொற்களேனும் புரியாதவையாக இருந்துவிடும், ஆகவே, பாடலை முழுக்க அனுபவிக்க இயலாது.
ஆகவே, சில நண்பர்கள் கோரியபடி அருஞ்சொற்பொருளையும் பாடலுடன் தந்தேன், ஆனால் பல நாட்களில் (குறிப்பாக, வெளியூரிலிருந்து செல்பேசிமூலம் பாடல்களைப் பதிவு செய்யும்போது) அது சாத்தியமில்லாமல் போனது.
இந்நிலையில், இப்பாடல்களைத் தொகுக்கும் எண்ணம் வந்தபோது, உரையையும் சேர்த்துத் தரலாம் என்று யோசித்தேன், இதனால் இன்னும் சிலர் (முன்பு தயங்கி விலகியவர்கள்) வாசிப்பார்கள் என்ற ஆசைதான்.
ஆசைபற்றி அறையலுற்றவர்களெல்லாம் கம்பனாகிவிடமுடியாது, எனினும், ஆசைவிடக் கற்றுத்தருபவரைப்பற்றிப் பாட ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னாலியன்ற சிறு முயற்சி இது. சரியோ, பிழையோ, இனி இது என்னதில்லை.
என். சொக்கன்
நவம்பர் 15, 2017
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மாதேவன் மலர்த்தொகை epub”
Maathevan%20Malarththogai.epub – Downloaded 1660 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மாதேவன் மலர்த்தொகை mobi”
Maathevan%20Malarththogai.mobi – Downloaded 944 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “மாதேவன் மலர்த்தொகை A4 PDF”
Maathevan%20Malarththogai.pdf – Downloaded 2083 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “மாதேவன் மலர்த்தொகை 6 inch DF”
Maathevan%20Malarththogai-6-inch.pdf – Downloaded 1153 times –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/MaathevanMalarththogai
புத்தக எண் – 330
நவம்பர் 24 2017
[…] freetamilebooks.com/ebooks/maathevan-malarththogai/ […]