
ஆழமான கற்றல் (Deep Learning) என்றழைக்கப்படும் இயந்திர கற்றலின் (Machine Learning) உயர்நிலைத் துறை, செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) அசுர வளர்ச்சிக்கு அடிகோலும் ஒரு முக்கிய அங்கமாகும்.
இந்நூல், ஆழமான கற்றலின் அடிப்படைக் கோட்பாடுகளையும், நியூரல் நெட்வொர்க்ஸ் (Neural Networks) போன்ற அதன் முக்கிய அங்கங்களையும் எளிய தமிழில் அறிமுகம் செய்கிறது. டென்சர்ஃப்ளோ (TensorFlow), பைடார்ச் (PyTorch) போன்ற கட்டமைப்புகளைப் பயன்படுத்தி, எளிய நியூரல் நெட்வொர்க் (Simple Neural Network) முதல் ஆழமான நியூரல் நெட்வொர்க் (Deep Neural Network), சுருள்வு நியூரல் நெட்வொர்க் (Convolutional Neural Network), மீள்நிகழ்வு நியூரல் நெட்வொர்க் (Recurrent Neural Network) வரையிலான பல்வேறு மாதிரிகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்நூல் விளக்குகிறது.
மேலும், ஆழமான கற்றலில் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள், சிறந்த நியூரல் நெட்வொர்க்குகளை உருவாக்குவதற்கான நுட்பங்கள், போல்ட்ஸ்மேன் மெஷின்ஸ் (Boltzmann Machines), ஆட்டோஎன்கோடர்கள் (Autoencoders), வலுவூட்டல் கற்றல் (Reinforcement Learning) போன்ற கற்றல் மாதிரிகள் குறித்தும் இந்நூல் விரிவாக அலசுகிறது. கணிதச் சமன்பாடுகள், நிரல் குறிப்புகள், வரைபடங்கள் ஆகியவற்றின் மூலம் ஆழமான கற்றல் கோட்பாடுகளைத் எளிமையாகப் புரிந்து கொள்ள இந்நூல் வழிகாட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் காலூன்ற விரும்பும் அனைவரும் அவசியம் கற்க வேண்டிய ஆழமான கற்றல் துறைபற்றிய இந்த எளிய அறிமுகத்தை இனிதே கற்றறிந்து பயனடையுங்கள்!
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் Deep Learning epub” learn_deep_learning_in_tamil.epub – Downloaded 2404 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “எளிய தமிழில் Deep Learning A4 PDF” learn_deep_learning_in_tamil_a4.pdf – Downloaded 4279 times –செல்பேசிகளில் படிக்க
Download “எளிய தமிழில் Deep Learning 6 inch PDF” learn_deep_learning_in_tamil_6_inch.pdf – Downloaded 1338 times –நூல் : எளிய தமிழில் Deep Learning
ஆசிரியர் : து. நித்யா
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
அட்டைப்படம் : லெனின் குருசாமி
மின்னூலாக்கம் : த.சீனிவாசன்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : CC-BY-SA
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 612
Leave a Reply