நூல் பெயர்: கனவுப்பறவை (குறுங்கவிதைகள்)
ஆசிரியர்: ப.மதியழகன்
மின்னஞ்சல்: mathi2134@gmail.com
பதிப்பு: பிப்ரவரி 2018
வெளியீடு: freetamilebooks.com
மின்னூலாக்கம்: ப.மதியழகன்
அட்டைப்படம்: ப.மதியழகன்
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License
You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work
என்னுரை
புழுதி எழும்பும் வீதி மணல்களில் அவள் காலடியைத் தேடுகிறேன். வானவீதியில் மேக ரதங்களில் நாம் ஊர்வலம் போவோம் வா. அந்தி சூரியன் போல் பிரகாசிக்கிறது உன் சிவப்புக்கல் மூக்குத்தி. என் உள்ளக்கடலில் உன்னைப் பற்றிய எண்ணங்கள் அலையலையாய் எழும்புகிறது. பரிசுத்தமானதெதுவும் இந்தப் பூமிக்கு அப்பாற்பட்டது என உன்னைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன். உனது பார்வையால் எனது பாவங்கள் கழுவப்படுகின்றன. வானமெங்கும் உன் பிம்பத்தைத் தான் பார்க்கிறேன். கனவுச்சிறையிலிருந்து விடுதலையளிக்க நீ வருவாயா? உன் நினைவு சிலுவையென கனக்கிறது. சிலைகளை உயிர்ப்பிக்கும் உனதழகு என்னைத் தூங்கவிடாமல் செய்கிறது. துயரம் நிறைந்த இந்தப்பூமிப் பந்தைவிட்டு நாம் வானமண்டலத்தில் பறந்துவிடுவோம் கனவுப்பறவையாக…
தேதி: 02.02.2018
ப்ரியமுடன்
ப.மதியழகன்
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்
தமிழ்நாடு
மின்னஞ்சல்: mathi2134@gmail.com
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “கனவுப்பறவை (குறுங்கவிதைகள்) epub” kanavuparavai-short-poms.epub – Downloaded 1235 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “கனவுப்பறவை (குறுங்கவிதைகள்) A4 pdf” kanavuparavai-short-poems-A4.pdf – Downloaded 1434 times –செல்பேசிகளில் படிக்க
Download “கனவுப்பறவை (குறுங்கவிதைகள்) 6 inch PDF” kanavuparavai-short-poems-6-inch.pdf – Downloaded 1342 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 341
பிப்ரவரி 9 2018





Leave a Reply