
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயனம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோலத் தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.
கம்பராமாயணத்தை தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் உரைநடையில் எழுதிக் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிட்டுள்ளார். அதை மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “உரைநடையில் கம்பராமாயணம் – epub” Kambaramayanam-text.epub – Downloaded 34172 times – 1.94 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “உரைநடையில் கம்பராமாயணம் – A4 PDF” kambaramayanam-A4.pdf – Downloaded 63811 times – 3.43 MBசெல்பேசியில் படிக்க
Download “உரைநடையில் கம்பராமாயணம் – 6 Inch” kambaramayanam-6-inch.pdf – Downloaded 21897 times – 10.38 MBநூல் : கம்பராமாயணம்
ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : CC-BY-SA. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மேம்படுத்தலாம். விற்கலாம்.
Leave a Reply