நூல் : காதலும் கண்ணீரும்
ஆசிரியர் : கொல்லால் எச். ஜோஸ்
மின்னஞ்சல் : joseharichandran@gmail.com
அட்டைப்படம் : லெனின் குருசாமி
மின்னூலாக்கம் : லெனின் குருசாமி
மின்னஞ்சல் : guruleninn@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “காதலும் கண்ணீரும் epub”
Kadhalum_Kanneerum.epub – Downloaded 2576 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “காதலும் கண்ணீரும் mobi”
Kadhalum_Kanneerum.mobi – Downloaded 733 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “காதலும் கண்ணீரும் A4 PDF”
Kadhalum_Kanneerum.pdf – Downloaded 1663 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “காதலும் கண்ணீரும் 6 inch PDF”
Kadhalum_Kanneerum_6_inch.pdf – Downloaded 930 times –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Kadhalum_Kanneerum-2019-01-21-23-37-38
புத்தக எண் – 500
ஜோஸ் வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்க.
நிச்சயமா சார் பேரன்பும் பிரியங்களும் ❤
காதலும் கண்ணீரும்
வித்தியாசமான அறிமுகத்துடன் துவங்குகிறது இப்புத்தகத்தின் முகவுரை. பதின்ம வயதில் வரும் இனம்புரியா இச்சைக்கு காதல் எனும் பெயரிட்டு அவசரமாய் முடிவு எடுக்கும் அபலைகளுக்கு வைகா வின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு எனும் பழமொழிக்கிணங்க அவளின் அரைவேக்காட்டுத்தனமான ஆசைக்கு அவள் வைத்தப் பெயர் காதல். ஒருவேளை சற்று நிதானமாய் அவள் சிந்தித்து முடிவு எடுத்திருந்தால் கதை வேறு மாதிரி இருந்திருக்கும்.
உண்மையாகவே இக்கதையின் கருவும் இன்றையக் காலக் கட்டத்தில் வாழும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் படிப்பினையை கொடுப்பதாகவே இருக்கிறது. கற்பனை கதையாக இருந்தாலும் இதுபோன்ற உண்மை சம்பவங்கள் செய்தியாக வருவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு அளவில்லா செல்லமாக பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோரும் ஒரு காரணம் எனவும் தோன்றுகிறது.
மது போதை எனும் அரக்கனால் அழிக்கப்பட்ட பலரது வாழ்க்கையை கண்டும் கேட்டும் வந்த நமக்கு ராகவின் வாழ்க்கையும் அதைப்போல் ஒன்று என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் மதுவிற்கு அடிமையாக வாழுகிற இன்றைய சமூகத்தில் மது நிச்சயமாய் வீட்டுக்கும், உயிருக்கும் (நாட்டுக்கும் கேடு என்று முழுமனதோடு சொல்ல முடியவில்லை) கேடு என்று இக்காதல் கதையின் மூலம் உணர்த்தியுள்ளார் ஆசிரியர்.
இவ்வுலகத்தில் காதலித்தவர்களெல்லாருடைய வாழ்க்கையும் இப்படித்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும் மதுவிற்கு அடிமையான பலரின் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கும் என்று கண்டுணர முடிகிறது. இனியும் ஒரு பெரியார் தோன்றி மீண்டும் ஒரு மது ஒழிப்புப் போராட்டம் நடைப்பெற்றால்
தான் இதற்கு விடிவு உண்டோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
ராகவ் எப்போது இனி மது அருந்துவதில்லை என்று முடிவு எடுத்தேனோ அப்போதே அவனுடைய வாழ்க்கையில் ஒரு புது வாழ்வு துளிர் விட தொடங்கியதை உணர முடிகிறது. இனி அவர்கள் வாழ்வு இனிமையான வாழ்வாக வளம்பெறும் என்பதில் ஐயமில்லை.