நூல் : சதுரங்கம் விளையாடுவது எப்படி?
ஆசிரியர் : டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI,
மின்னூலாக்கம் : த . தனசேகர்
மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை:
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication
நூல் மூலம – https://ta.wikisource.org/s/8w5b
நன்றி – விக்கி மூலம குழு – https://ta.wikisource.org
முன்னுரை
சதுரங்க ஆட்டத்தை எப்படி விளையாட வேண்டும் என்று உண்மையாகவே விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்காகவே இந்நூல் எழுதப்பட்டதாகும்.
இந்நூல் முழுக்க முழுக்க ஆரம்ப நிலையாளர்களுக்காகத் தானே தவிர, இதன் மூலம் ஆட்டத்தைவிருத்தி செய்து கொண்டு வெற்றி வீரராக வரவேண்டும் என்று முயல்பர்களுக்காக அல்ல.
சதுரங்க ஆட்டம் எவ்வாறெல்லாம் தோன்றியது உலக நாடுகளிடையே உலவி வந்த கதைகளும், வரலாற்றுக் குறிப்புகளும் இதில் நிறைய இருக்கின்றன.
ஆட்டக்காய்கள் எந்தெந்த வடிவத்தில் அமைக்கப்பட்டு ஆடப்பட்டு வந்தன, மாறி வந்தன என்ற காய்களின் மறுமலர்ச்சி பற்றிய காய்களின் இயக்கம் பற்றிய முறைகள் தெளிவாகத் தரப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு காயும் எந்தெந்தக் கட்டத்தின் வழியாக எவ்வாறு நகரவேண்டும், எப்படியெல்லாம் நகர்த்தப்ட வேண்டும் என்கிற அடிப்படை முறையினைத் தெரிந்து கொண்டுவிட்டால், அதற்குப் பிறகு, அவரவர் அறிவு நிலைக்கேற்ப ஆட்டத்தின் திறன் துணுக்கம் விரிவடைந்து கொள்ளும்.
ஆகவே, ஒவ்வொரு காயும் எவ்வாறு நகர்த்தப்பட வேண்டும் என்கிற வழிமுறைகள் படம் மூலமாக நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் காய் நகர்த்தும் விதத்தையும், வித்தையையும் நன்கு கற்றுக்கொண்டுவிட்டால், பிறகு ஆட்டத்தைத் தொடரும் ஆர்வத்தில் அற்புதமான மாற்றம் மலர்ந்து விடும்.
அதன்பின், அடிப்படை விதிமுறைகள் என்னும் பகுதியில், முக்கியமான விளையாட்டுக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இவ்வாறாக, சதுரங்க ஆட்டத்தின் வழிமுறைப்பற்றிய விளக்கங்களைக் காணுவதின் மூலம் சதுரங்க ஆட்டத்தினை விளையாட்டாகச் கற்றுக்கொள்பவர்களுக்கு வழித்துணையாக இருந்து உதவுவதற்காகவே இந்நூல் எழுதப் பெற்றிருக்கிறது.
முயற்சியின் தொடக்கம்தான் இந்நூல் என்பதைத் தவிர வேறெதுவுமே என்னால் கூற இயலவில்லை. ஆர்வம் உள்ளவர் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
விளையாட்டுத் துறையில் எல்லா விளையாட்டுகளைப் பற்றியும் தமிழில் நூல்கள் வெளிவரவேண்டும் என்ற எனது அளவில்லா ஆர்வத்திற்குச் சான்றாக இந்நூல் வெளிவருகிறது. எனது நூல்களையெல்லாம் ஆதரித்து வந்த அன்பர்கள் அனைவரும், இந்நூலையும் ஏற்று மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்.
இந்நூலை அழகுற அச்சிட்டு உதவிய பிரபு பிரிண்டிங் ஹவுஸ் நிறுவனத்தார் முகப்பு அட்டை வாந்தளித்த திரு கணேஷ் ஆக்க வேலைகளை அனைத்தும் செய்து தந்த திரு ஆர். சாக்ரட்டீஸ் அனைவருக்கும், என் அன்புகலந்த நன்றியும் வணக்கமும், இந்நூல் வெளிவருவதற்காக அன்புடன் உதவிய நண்பர் திரு நாகசங்கரராவ் எம்.ஏ. பி.எஸ்,சி, அவர்களுக்கும் என் இதய நன்றி
எஸ். நவராஜ் செல்லையா
ஞான மலர் இல்லம் சென்னை 17
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “சதுரங்கம் விளையாடுவது எப்படி? epub” How_to_play_chess.epub – Downloaded 2013 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “சதுரங்கம் விளையாடுவது எப்படி? mobi” How_to_play_chesschess.mobi – Downloaded 558 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “சதுரங்கம் விளையாடுவது எப்படி? A4 PDF” How_to_play_chessA4.pdf – Downloaded 2566 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
பிப்ரவரி 28 2018