fbpx

5 முதலாளிகளின் கதை – விமர்சனங்கள் – விமர்சனங்கள் – ஜோதிஜி

நூல் : 5 முதலாளிகளின் கதை – விமர்சனங்கள்

ஆசிரியர் : ஜோதிஜி


மின்னஞ்சல் :

அட்டைப்படம் : த.சீனிவாசன் 

[email protected]

மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
மின்னஞ்சல் : [email protected]

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை : CC-BY-SA

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “5 முதலாளிகளின் கதை - விமர்சனங்கள் epub”

FiveOwnerStoriesReviews.epub – Downloaded 1844 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “5 முதலாளிகளின் கதை - விமர்சனங்கள் mobi”

FiveOwnerStoriesReviews.mobi – Downloaded 1315 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “5 முதலாளிகளின் கதை - விமர்சனங்கள் A4 PDF”

FiveOwnerStoriesReviews_a4.pdf – Downloaded 2417 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “5 முதலாளிகளின் கதை - விமர்சனங்கள் 6 inch PDF”

FiveOwnerStoriesReviews_6_inch.pdf – Downloaded 1512 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/fiveownerstoriesreviews6inch

புத்தக எண் – 597

4 Comments

  1. Jothi Ganesan
    Jothi Ganesan December 6, 2019 at 5:25 am . Reply

    Amazon Pen To Publish Tamil 2019 நடத்தும் போட்டியில் நானும் கலந்துள்ளேன். டிசம்பர் 31 வரைக்கும் இந்த புத்தகத்தைப் படித்து அமேசான் தளத்தில் விமர்சனம் செய்ய முடியும். நீங்கள் படிக்க விரும்பினால் இந்த புத்தகத்திற்கு இதுவரையிலும் வந்த (இன்னமும் வந்து கொண்டிருக்கின்றது) விமர்சனங்களை முழுமையாகப் படித்து முடிவெடுக்க முடியும் என்பதற்காகவே இந்த மின்னூலை இங்கே வெளியிட்டுள்ளேன். உங்கள் ஆதரவு தேவை. அமேசான் தளத்தில் கிண்டில் கருவி வழியாகவோ, உங்கள் அலைப்பேசி கிண்டில் செயலி வழியாக தரவிறக்கம் செய்து படிக்கலாம். இதை விலை ரூபாய் 59. அமேசான் தளத்தில் ஒரு விலையை நாம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த விலையை வைத்துள்ளேன். கிண்டில் அன் லிமிட் திட்டத்தில் நீங்கள் இருந்தால் இந்தப் புத்தகத்தை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம். வாழ்த்துகள்.
    ஜோதிஜி
    5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள் Book 15) (Tamil Edition) by Jothi G ஜ… https://www.amazon.in/dp/B07ZXJQH4T/ref=cm_sw_r_tw_dp_U_x_zdE6Db0Y3WDC1 via @amazonIN

  2. Jothi Ganesan
    Jothi Ganesan December 6, 2019 at 9:26 am . Reply

    த. சீனிவாசன்

    சிறுவயது முதலே எனக்கு என் வயது தோழர்களை விட சில வயது மூத்தவர்களே அதிகம் நட்பானவர்கள். அவர்கள் சொல்லும் அனுபவக் கதைகளே என்னை அதிகம் செதுக்கியவை. கல்விக் காலங்களில், டியூஷன், பள்ளி, கல்லூரி நேரம் போக அதிகமாய் அங்கு இருந்தது அவர்களுடன் பொது விஷயங்களைப் பேசுவதற்கே. வேலைக்குப் போன பின்னும் எனக்கு அமைந்த மேனேஜர்கள், டேமேஜர்களாக இல்லாமல் அண்ணன்களாகவே அமைந்தனர்.

    பணியிடங்களை விட, மைதானங்களிலும், மலையேற்றங்களிலும், சுற்றுலாக்களிலும் அவர்களிடம் கற்றவையே மிக அதிகம். பெரும்பாலும் அவர்கள் சொல்பவை சுயபுராணங்களே. நீண்ட, தனிமையான தருணங்களில் மட்டுமே, மனதின் அடிவாரத்திலிருந்து வைரங்களை வெட்டி எடுத்துத் தருவர். தோல்விகள், உறவுகள், வெற்றிகள், இனிய தருணங்கள் என மனித வாழ்வின் பல முகங்களைக் காட்டி, என்னைப் பண்படுத்தியுள்ளனர்.

    இதே பணியைச் சிலர் எழுத்து வழியாகவும் செய்கின்றனர். தனது அனுபவங்களையும், கருத்துகளையும்,சறுக்கல்களையும், கற்றல்களையும் ஒளிவு மறைவுமின்றி, தனியான தருணங்களில் மனமொத்தவர்களிடம் பகிர்வது சுலபம்.

    ஆனால் அவற்றை இணையவெளியில் எழுதி பொதுவில் வைப்பது ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு எளிதில் சாத்தியமாகிறது.
    கணநேர வாசிப்பு இன்பம் தரும் சமூகவலைத்தள அலையடிக்கும் இக்காலத்திலும், சற்றே நீண்ட வலைப்பதிவுகள் தொடர்ந்து எழுதும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். தமிழக வரலாறு, அரசியல் கட்டுரைகள் தாண்டி சுய வரலாற்றையும் தொடர்ந்து எழுதுகிறார். ஒரு ரிமோட் அண்ணனாகத்தான் எனக்கு எப்போதும் தோன்றுகிறார்.

    பல பேர்களோடு பழகினாலும் எனக்கு அனுபவங்களைப் பகிரவோ, அசைபோடவோ, பிறரது அனுபவங்களையும், பல கதைகளையும் பேசவோ நேரம் வாய்ப்பதில்லை. அக்குறையை இவரது எழுத்துகள் போக்குகின்றன.
    அண்ணன் சமீபத்தில் வெளியிட்டுள்ள 5 முதலாளிகளின் கதை மின்னூல், அவரது அனுபவக் குறிப்புகளே. திருப்பூரின் வளர்ச்சியை, அதன் உள்ளே இருந்து ஒரு காரணியாக, வாழ்ந்து வருபவர். அவர் கண்ட ஐந்து முதலாளிகளை நமக்கு அறிமுகம் செய்கிறார். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவற்றிற்கு அடிமையானால் என்னவாகும் என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லிச் செல்கிறார்

    இது போன்ற அனுபவக் கதைகளுக்குக் கதைமாந்தர்களின் பெயர் முக்கியமில்லை. அவர்களின் பழக்கங்கள், செயல்களே முக்கியம். அவ்வாறே பெரிதும் பெயர்கள் இன்றி, நம் அருகில் அமர்ந்து, குளக்கரையிலோ, கோயில் மண்டபத்திலோ, மலையேற்றத்திலோ, உடன் அமர்ந்து கதை சொல்வது போலவே சொல்லிச் செல்கிறார்.
    வாழ்க்கை எனும் பெரிய பரமபதம் விளையாட்டில், நற்குணங்கள் எனும் சிறிய ஏணிகளையும், மண்ணாசை-பெண்ணாசை-பொன்னாசை எனும் பெரிய பாம்புகளையும், வளர்த்துக் கொண்டு போகும் முதலாளிகள், வெல்வது எப்படி? பெரிய பலூனை உடைக்க ஒரு சிறு ஊசியும், ஒரு கப்பலை மூழ்கடிக்க ஒரு சிறு துளையும் போதும் என்பதை, தான் பணிபுரிந்த முதலாளிகளின் கதைகள் வழியே சொல்கிறார்.

    ஆர்எஸ் பிரபு RS Prabuஅவர்கள் எழுதியது போல, அண்ணன் மேலாண்மை நூல்களாக எழுதினால், பாடப்புத்தகங்கள் ஆகவே வைக்கலாம். தொழில்முனைவோர் அனைவரும் ஜோதிஜி நூல்களை ஒரு முறை படித்து விடுவது பல்வேறு அபாயங்களிலிருந்து அவர்களைக் காத்திடும். தொடர்ந்து எழுதி சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முன்னேராக விளங்கி வர வேண்டுதல்களும், வாழ்த்துக்களும்.

    மின்னூல் இங்கே வாங்கலாம் –

    https://www.amazon.in/gp/product/B07ZXJQH4T

  3. Ranjit
    Ranjit December 12, 2019 at 3:05 pm . Reply

    Review is done in Amazon site. Thanks

  4. […] 5 முதலாளிகளின் கதை – விமர்சனங்கள் – வி… […]

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.