நூல் : எண்ணித் துணிக கருமம்
ஆசிரியர் : அறிஞர் அண்ணா
பதிவிறக்க இணைப்புகள்
ஆன்ட்ராய்டு, ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க. Download செய்த epub கோப்பினை Google Play books, FBreader, iBooks போன்ற செயலிகளில் திறந்து படிக்கலாம்.
Download “எண்ணித் துணிக கருமம் epub”
enni-thuniga-karumam-anna.epub – Downloaded 5230 times –செல்பேசியில் PDF ஆகவும், பழைய கிண்டில், நூக் கருவிகளில் படிக்கவும்
Download “எண்ணித் துணிக கருமம் 6 inch PDF”
enni-thuniga-karumam-anna-6-inch.pdf – Downloaded 3058 times –மேசைக் கணிணி, மடிக்கணினிகளில் படிக்க
Download “எண்ணித் துணிக கருமம் A4 PDF”
enni-thuniga-karumam-anna-A4.pdf – Downloaded 3763 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “எண்ணித் துணிக கருமம் mobi”
enni-thuniga-karumam-anna.mobi – Downloaded 1449 times –
அண்ணாவின் கையெழுத்திலேயே அமைந்த மூல நூல் – https://drive.google.com/file/d/1IQ2_AOYkvdHy2ahUViI03wfvPFC9hkKc/
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/enni-thuniga-karumam-anna
இது ஒரு திராவிட வாசகர் வட்டம் வெளியீடு.
திராவிட வாசகர் வட்டம் முகநூல் முகவரி – https://www.facebook.com/groups/381671996011227/
அறிஞர் அண்ணாவின் கையெழுத்தில் அமைந்த மூல நூல் வெளியீடு: திமுக
மூல நூல்: முதற்பதிப்பு, 2003.
பதிப்புரிமை: அறிஞர் அண்ணாவின் அனைத்துப் படைப்புகளும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. நீங்கள் அவரின் ஆக்கங்களை யாருக்கும் பகிரலாம், அச்சடித்து விற்கலாம், ஒலி/ஒளி, நாடகம் என்று வேண்டியவாறு வடிவம் மாற்றலாம்.
எனவே, Creative Commons Zero 1.0 Universal (CC0 1.0)
Public Domain Dedication என்னும் உரிமையின் கீழ் இந்நூல் வெளியிடப்படுகிறது.
தட்டச்சு உதவி: அசோகன் முத்து
அச்சு நூல் ஒளிவருடி உதவி: வெங்கடேஷ் மோதிலால்
மெய்ப்பு உதவி: யூசுப் பாசித்
மின்னூல் ஆக்க உதவி: பழூரான் விக்னேஷ் ஆனந்த்
மின்னூல் பதிவேற்றம்: இரவிசங்கர் அய்யாக்கண்ணு
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
===
அறிஞர் அண்ணா தன் கைப்பட எழுதிய
“எண்ணித் துணிக கருமம்”
என்னும் அரிய வரலாற்று நூலினை
திராவிட வாசகர் வட்டம் மூலமாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கை விட நேரும் சூழ்நிலையில், தான் ஏன் அந்த முடிவை எடுக்க நேர்ந்தது என்பதைத் திமுக பொதுக்குழுவில் தொண்டர்களுக்குத் தெரிவிக்கிறார்.
அதற்காக அவர் தன் கைப்பட எழுதிய குறிப்புகளே இந்நூல்.
இது அன்றைய காலக்கட்டத்தில் திமுகவின் பலம் பலவீனம் குறித்த நேர்மையான விமர்சனம் என்று கலைஞரே முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நூலை மெய்ப்பு பார்க்க உதவிய நண்பர் யூசுப் பாசித், இது ஒரு அருமையான SWOT analysis என்கிறார்.
அண்ணாவின் கையெழுத்தில் இருந்த நூலைத் தட்டச்சு செய்து மின்னூல் வடிவுக்கு மாற்றியிருக்கிறோம். இது வரை இந்நூல் தட்டச்சு வடிவில் வெளியிடப்பட்டதில்லை என்று நினைக்கிறோம். இதன் மூலம் அக்கையெழுத்து புரியாதவர்களும் பார்வை மாற்றுத் திறானிகளும் இந்நூலைப் படிக்கலாம்.
கலைஞர் இந்நூலை 40 ஆண்டுகள் பொத்திப் பாதுகாத்து வைத்திருந்து, 2003ஆம் ஆண்டு முரசொலியில் வெளியிட்டார்.
இதே நூலை ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருந்திருக்கிறார் அண்ணா. அதை முரசொலி அலுவலகத்தில் வைத்துப் பாதுகாத்திருந்திருக்கிறார்கள். 1991 ராஜீவ் படுகொலையை அடுத்து வெறியாட்டம் ஆடிய வன்முறைக் கும்பல் முரசொலி அலுவலகத்தைத் தீ வைத்துக் கொளுத்திய போது, அந்த அரிய ஆங்கில நூல் எரிந்து போயிருக்கிறது. இத்தோடு இன்னும் எத்தனை வரலாற்று ஆவணங்கள் அழிந்தனவோ?
அறிஞர் அண்ணாவின் படைப்புகள் அனைத்துமே நாட்டுடைமை தாம் என்பதால், இந்நூல் Free Tamil Ebooks தளத்தில் இலவச மின்னூலாக PDF உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வெளிவருகிறது.
அதே வேளை அமேசான் போன்ற புத்தகச் சந்தைகளில் திராவிட நூல்கள் உரிய இடம் பெறுவது முக்கியம், அது இன்னும் பலரையும் இத்தகைய நூல்களை மின்னூல் வடிவில் வெளியிட ஊக்கம் அளிக்கும் என்பதால்,
ரூ.49 என்னும் ஆகக் குறைந்த விலையில் கிண்டில் புத்தகமாகவும் இம்மின்னூல் வெளிவருகிறது.
கலைஞர் இந்த நூலுக்கு எழுதிய முன்னுரையில்,
“இளைய தலைமுறையினர் இது போன்ற வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது குறைந்து வருகிறது” என்று வருத்தப்படுகிறார்.
அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில், குறைந்தது 10,000 பேராவது இந்நூல்களைப் பதிவிறக்கித் தாங்களும் படிப்பதுடன் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
வெறும் 40 பக்கங்கள் மட்டுமே. ஒரு மணி நேரத்தில் படிக்கலாம்.
நன்றி!
புத்தக எண் – 575
[…] எண்ணித் துணிக கருமம் – அறிஞர் அண்ணா […]
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.