
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!” DevathaikalinPoluthuPokuKavithaiElluthuvathu.epub – Downloaded 8691 times – 755.17 KBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!” DevathaikalinPoluthuPokuKavithaiElluthuvathu_A4.pdf – Downloaded 10181 times – 805.83 KBசெல்பேசிகளில் படிக்க
Download “தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!” DevathaikalinPoluthuPokuKavithaiElluthuvathu_6inch.pdf – Downloaded 4865 times – 887.49 KBகவிதைகள் பற்றியான தெரிவுகள் எதுவும் என் வசம் இல்லை. வார்த்தைகளை மடித்துப் போட்டு எழுதுவது தான் அவைகள் என்றே புரிந்திருக்கிறேன். மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் கவித் தொகுப்பை வாசிக்கையில் கவிதையின் எளிமை எனக்கு முதன் முதலாக பிடிபட்டது. போக அந்த தொகுப்பு பல பதிப்புகளையும் கண்டிருக்கிறது. எது அதன் காரணம்? என்று பார்க்கையில் முதலாகப் பட்டது காதல்! அடுத்து வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? தபுசங்கரின் தொகுதி. அழகான தலைப்பு. வெட்கத்தைக் கேட்டால் எட்டணா தருவேன் என்று நண்பர்களிடம் வேடிக்கை பேசிக்கொண்டிருந்தேன். இப்போது 50 பைசாவை பெட்டிக்கடையில் கூட வாங்குவதில்லை. காதலைச் சொல்லும் கவிதைகளுக்கு என்றுமே ஒரு வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இக்கவிதைகள் தற்போது எழுதியவைகள் அல்ல! எப்போதோ எழுதியவை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இருந்தும் நான் எழுதியவைகள் தான் கொஞ்சம் காதலில் இருந்த போது! காதலியின் பார்வையில் இவைகள் தரப்பட்டிருக்கின்றன. கருத்துக்களை சொல்பவர்கள் சொல்லலாம்.
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
உருவாக்கம் : வா.மு.கோமு
வெளியீடு: FreeTamilEbooks.com
எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே. ‘படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை’
மின்னூலாக்கம் & மின்னூல் வெளியீடு: சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
புத்தக எண் – 141
பிப்ரவரி 19 2015





Leave a Reply