அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்

எழுத்தாளராக இருப்பதில் ஒரு சௌகரியம். ஆண்களோ, பெண்களோ, தாமே வலிய வந்து தம் கதையைச் சொல்லி, “நான் என்ன ATAசெய்ய வேண்டும் என்பதை ஒரு கதையாக எழுதுங்கள், என்று என்னிடம் கேட்டுக்கொள்வதில், வித விதமான கருக்கள் அமைகின்றன.

 

சிதம்பர ரகசியம், பெரிய மனசு — இந்த இரண்டு கதைகள் நீங்கலாக மற்ற எல்லாவற்றிலுமே பெண்கள்தாம் முன்னணியில் நிற்கிறார்கள். எல்லாவற்றையும் தொகுத்தபின்தான் இதைக் கவனிக்கிறேன்.

 

`பெண்களைப்பற்றியே எழுதுகிறார்! என்று என்னைப்பற்றிய குற்றச்சாட்டு மலேசியாவில் உண்டு. பெண்களது மனநிலை எனக்குப் புரிவதாலோ, இல்லை, அனாதரவாக இருக்கும் பலருக்கு ஏதோ என்னால் முடிந்த உதவியென்று அவர்களின் நிலையைப்பற்றி விளக்குவதாலோ இப்படி எழுதி வருகிறேன் என்றே தோன்றுகிறது.

 

இதில் வரும் எல்லா கதாநாயகிகளையும் நான் சந்தித்திருக்கிறேன். தாம் எவ்வளவுதான் துன்பத்தை அனுபவித்தாலும், `பெண்ணாகப் பிறந்துவிட்டோமே! என்ற ஒரு நம்பிக்கையின்மையுடன், அவர்கள் எதையும் ஏற்கத் தயாராக இருப்பது எனக்கு எப்போதுமே எரிச்சலைத் தருகிறது. ஆனால், அவர்கள் நிலையில் நான் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பேனோ என்று எண்ணுகையில், அனுதாபம் பிறக்கிறது. என்னையே அமைதிப்படுத்திக்கொள்ளும் முயற்சியில், என் உணர்ச்சிகளை எழுத்தில் வடிக்கிறேன்.

நன்றி.

நிர்மலா  ராகவன்

அன்னையைத் தேடும் ஆன்மாக்கள் (சிறுகதைத் தொகுப்பு)

வகை – சிறுகதை

உருவாக்கம்: நிர்மலா ராகவன், மலேசியா

வெளியீடு: http://FreeTamilEbooks.com

மின்னஞ்சல்: [email protected]

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்” AnnaiyeiThedumAnmakal.epub – Downloaded 7689 times – 501.24 KB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்” AnnaiyeiThedumAnmakal_A4.pdf – Downloaded 6988 times – 932.29 KB

செல்பேசிகளில் படிக்க

Download “அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்” AnnaiyeiThedumAnmakal_6inch.pdf – Downloaded 4247 times – 1.05 MB

புத்தக எண் – 150

மார்ச் 23 2015

மேலும் சில சிறுகதைகள்

  • போதி நிலா (சிறுகதைகள்)
  • புது மெருகு – சிறுகதைகள் – கி. வா. ஜகந்நாதன்
  • தெய்வயானை – சிறுகதைகள் – கல்கி
  • தண்டோரா கதைகள் – சிறுகதைகள்

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.