அனிச்ச மலர்கள் (சிறுகதை தொகுப்பு)
தேமொழி
மின்னூல் மறுவெளியீடு : freetamilebooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மின்னூலாக்கம் – லெனின் குருசாமி –
மின்னூல் வெளியீடு: மார்ச் – 2017 மின்னூல் பதிப்பு: அறிவொளி பதிப்பு
EBook ISBN: 978-0-9963993-1-9
என்னுரை
ஊர்கூடி தேர் இழுப்பது போல, இந்தச் சிறுகதைகள் நூலாக வெளிவருவதில் பலரின் பங்கு அடங்கியிருக்கிறது. பொழுது போக்காக, விளையாட்டு போல எழுதத் துவங்கிய என்னை உற்சாகமூட்டி, தொடர்ந்து என் எழுத்துக்களைப் படித்து, ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி ஊக்கமூட்டிய அனைத்து நட்புகளுக்கும் இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். சிறு வயது முதலே எனது கலை ஆர்வத்தை ஊக்குவித்து வந்த எனது தந்தையின் பங்கு என்னை இவ்வாறு ஒரு பட்டாம்பூச்சியாக உருமாற்றம் பெறவைத்திருக்கிறது.
என்கதைகளைச்சேகரித்துப்படிக்கக்கொடுத்தபொழுது அவற்றை நூலாக வெளியிட தனது ஆலோசனையை வழங்கியதுடன், வாழ்த்துரையும் வழங்கிய தோழி சுபாஷிணிக்கும் பொறுமையாகப் படித்து என் எழுத்துக்களில் உள்ள பிழைகளை நீக்கி மாற்றங்களைப் பரிந்துரைத்த அன்புத் தோழி மேகலா இராமமூர்த்திக்கும் இந்நூல் வெளிவருவதில் பெரும் பங்கு இருக்கிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
பல ஆண்டுகள் வாசகியாக இருந்ததைத் தவிர, முன்னர்ச் சிறிதும் பழக்கமில்லாத காரணத்தினால் மிகவும் தயங்கி அணிந்துரை வேண்டி அணுகிய பொழுது, மிக்க அன்புடன் கதைகளைப் படித்து அணிந்துரை வழங்கிப் பெருமைப்படுத்திய திருமதி கீதா பென்னெட்டிற்கு மனம் கனிந்த நன்றிகள். எழுத்துலகில் என் போன்ற புதுமுகங்கள் வளர அனுபவம் வாய்ந்த திருமதி கீதா பென்னெட் போன்ற கதாசிரியரின் ஆசி கிட்டியது நான் பெற்ற பேறு.
அன்புடன்
தேமொழி [email protected]
1042 Waverly Circle
Hercules, CA 94547, US
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “அனிச்ச மலர்கள் – சிறுகதைகள் – epub” anicha-malargal.epub – Downloaded 1747 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “அனிச்ச மலர்கள் – சிறுகதைகள் – A4 PDF” anicha-malargal-a4.pdf – Downloaded 1799 times –செல்பேசிகளில் படிக்க
Download “அனிச்ச மலர்கள் – சிறுகதைகள் – 6 inch PDF” anicha-malargal-6inch.pdf – Downloaded 925 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 298
ஜூன் 13 2017
Leave a Reply