அன்புள்ள மணிமொழிக்கு
மின்னூல் மறுவெளியீடு : freetamilebooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
தொகுப்பாசிரியர்: தேமொழி [email protected]
மின்னூல் வெளியீடு: மார்ச் – 2017
மின்னூல் பதிப்பு: அறிவொளி பதிப்பு
EBook ISBN: 978-0-9963993-0-2
மேலட்டை உருவாக்கம்: தேமொழி
மேலட்டை பட உதவி: பிஸ்வரூப் கங்குலி
அணிந்துரை
நம் எண்ணத்தின் ஓசைகளே கடிதங்களின் வடிவங்கள். அந்த வகையில் கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில், வெவ்வேறு வடிவங்கள் பெறுகிறது என்பதே நிதர்சனம். இந்த ஆயிரம் வாசல் இதயத்தில், ஆயிரம் எண்ணங்கள் உதயமானபோதும் நெய் தீபமிட்டு தீண்டப்படுகிற ஒரு சில எண்ணங்கள் சுடரொளியாகவும் பிரகாசிக்கக்கூடும் என்பதற்குச் சான்றுதான் இந்தக் கடித இலக்கியப் போட்டியில் பங்கு பெற்ற ஒவ்வொரு படைப்பும். “அன்புள்ள மணிமொழிக்கு …” என்று தலைப்பிட்ட இப்போட்டியின் அடிப்படையான திருமதி. தேமொழி அவர்களின் வலுவான, உணர்வுப்பூர்வமான காரணம் அனைத்துப் படைப்புகளிலும் அழகாகப் பிரதிபலித்துள்ளதைக் காண முடிகிறது. இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரிதான கடித இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் வல்லமையில் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நம் அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. ஒவ்வொரு கடிதமும் அவரவர் உள்ளக்கிடக்கையை உறுதியாக வெளிப்படுத்தியுள்ள ஒன்றாகவே அமைந்துள்ளது சிறப்பு. ஒவ்வொன்றும் வித்தியாசமான படைப்புகளாகவே இருந்ததால் நடுவராக பொறுப்பேற்றிருந்த திரு இசைக்கவி ரமணன் அவர்களுக்கு இது ஒரு சவாலாகவே இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம், ஏற்கனவே அறிவித்திருந்த பரிசுகளுடன், மேலும் ஆறு பேர்களுக்கு தலா ரூ. 200 வீதம் ஆறுதல் பரிசாக தானே வழங்குவதாக அறிவித்திருந்ததுதான். அந்த வகையில் பெரும்பாலான படைப்புகள் பரிசுக்குரிய தகுதி பெற்றிருந்ததையே அது உறுதிப்படுத்துகிறது. ஒருவர் எத்தனை கடிதங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற விதி பலருக்கும் வசதியாக அமைந்துவிட்டது. மணிமொழியை சகோதரியாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக, தோழியாக, காதலியாக அவரவர் கற்பனைக்கேற்ப வரித்துக் கொண்டு அற்புதமாக காவியம் படைத்துவிட்டனர். வேண்டுகோள் விடுத்தல், அறிவுரை சொல்லுதல், தனது அன்பை சொல்லுதல், நட்பை வெளிப்படுத்துதல் என மனம் திறந்த மடல்களாகக் குவிந்துவிட்டது. திரு இசைக்கவி ரமணன் அவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு செய்து தன் பங்கிற்கும் ஆறு பரிசுகளை மனமுவந்து வழங்கியுள்ளார்கள். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி. போட்டியில் உற்சாகமாக பங்கு
பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.
அன்புடன், பவள சங்கரி –
நிர்வாக ஆசிரியர் –
வல்லமை மின்னிதழ்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “அன்புள்ள மணிமொழிக்கு - epub”
anbulla-manimozhiku.epub – Downloaded 1365 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “அன்புள்ள மணிமொழிக்கு - mobi”
anbulla-manimozhiku.mobi – Downloaded 857 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “அன்புள்ள மணிமொழிக்கு - A4 PDF”
anbulla-manimozhiku-a4.pdf – Downloaded 1309 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “அன்புள்ள மணிமொழிக்கு - 6 inch PDF”
anbulla-manimozhiku-6inch.pdf – Downloaded 871 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/anbulla-manimozhiku
புத்தக எண் – 299
ஜூன் 15 2017