நாடி நாடி நரசிங்கர் தரிசனம் – அஹோபில யாத்திரை – கைலாஷி

நாடி நாடி நரசிங்கர் தரிசனம்
(அஹோபில யாத்திரை)

கைலாஷி
muruganandam.subramanian@gmail.com

மின்னூல் வெளியீடு :
FreeTamilEbooks.com

அட்டைப்படம், மின்னூலாக்கம் :
பிரசன்னா

உரிமை :
Creative Commons Attribution – ShareAlike 4.0 International License.

கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

முன்னுரை :

மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருப்பதிகள் நூற்றெட்டாகும். இவற்றுள் இரண்டு திருப்பதிகள் தற்போதைய ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று நரசிம்ம க்ஷேத்திரமான அஹோபிலம் ஆகும். சீரிய சிங்கப்பிரான் உறைகின்ற திருக்கோவில் இச்சிங்கவேள் குன்றம் என்ரழைக்கப்படுகின்றது. திருமங்கையாழ்வார் பாடிப் பரவி மகிழ்ந்த திருத்தலம் இத்திவ்யதேசம். இத்திருப்பதி எம்பெருமான் நரசிங்கமூர்த்தியாய் தம் பக்தன் பிரகலாதன் பொருட்டுத் தோன்றி அவனை நைந்து வந்த தந்தை இரணியணை தனது வஜ்ர நகங்களால் பிளந்து மாய்த்த இடம் என்று திருமங்கையாழ்வார் கொண்டாடுகின்றார். இங்கே பெருமாள் நவநரசிம்மராய் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.

ஸ்ரீராமனும், வேங்கடேசரும் வழிபட்ட பெரிய பெரிய பெருமாள் அஹோபிலம் நரசிம்மர், பெரிய திருவடியாம் கருடன் தவம் செய்து நரசிம்மர் தரிசனம் பெற்ற திருப்பதி, கபாலிகர்கள் ஆதி சங்கரை கொல்ல முயன்ற போது அவரை காத்து ஸ்ரீநரசிம்ம கராவலம்பம் பாட வைத்த கருணாமூர்த்தி இவர் வேதங்கள் தவம் செய்த தலம். வைணவம் வளர பாடுபட்டு வரும் அஹோபில மடம் அமைந்துள்ள க்ஷேத்திரம். உக்ர க்ஷேத்திரம், வீர ஷேத்திரம், அஹோபிலம், அஹோபலம், சிங்கவேள்குன்றம் என்று பல நாமங்களினால் அறியப்படும் அஹோபிலம் என்று இத்திருப்பதியின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

சிங்கத்தை நாம் எங்கே சந்திக்க முடியும் அதன் குகையில்தானே? அதுபோலத்தான் சிங்கபெருமாள்களை மலைக்குகைகளில் சென்று சேவிக்க நாம் அஹோபிலம் செல்ல வேண்டும். இரண்டு தளங்களாக அடிவாரத்திலும் மலைகளிலும் நவநரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளன. காடு, மலை, ஆறு, அருவி என்று அலைந்தால்தான் நாம் அனைவரையும் சேவிக்க முடியும். மலையேற்றமும் அவசியம். அவனருளால் இவ்வாறு மூன்று நாட்கள் சுற்றி நவநரசிம்மர்கள் அனைவரையும் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்நூல். மேலும் நரசிம்ம வழிபாடு பற்றி அடியேன் படித்து மற்றும் கேட்டு அறிந்து கொண்ட பல தகவல்கள் அன்பர்களின் உதவிக்காக இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த யாத்திரை செல்லும் போது மேல் அஹோபிலத்தில் பவநாசினி ஆற்றின் அருவியில் குளித்து மகிழலாம், காட்டின் இடையே மூலிகை காற்றை சுவாசித்துக்கொண்டே மலையேறிச் சென்று பெருமாளை சேவித்து விட்டு வரலாம், மலையேறி உக்ரஸ்தம்பம் செல்லலாம். சம்சார தொல்லைகளை மறந்து விட்டு பகவத் சிந்தனையிலேயே நேரத்தை கழிக்கலாம் ஏனென்றால் கைப்பேசி கூட உங்களை இங்கு தொந்தரவு செய்யாது.

உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோனகலம்வெஞ்சமத்து
பிளந்து வளைந்த உகிரானின் – திவ்ய தரிசனம் பெற உடன் வாருங்கள் அன்பர்களே.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “நாடி நாடி நரசிங்கர் தரிசனம் epub” ahobila_yathrai_Epub.epub – Downloaded 2253 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “நாடி நாடி நரசிங்கர் தரிசனம் A4 PDF” ahobila_yathrai_A4_PDF.pdf – Downloaded 3280 times –

செல்பேசிகளில் படிக்க

Download “நாடி நாடி நரசிங்கர் தரிசனம் 6 inch PDF” ahobila_yathrai_6inch_PDF.pdf – Downloaded 1820 times –

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 331

டிசம்பர் 3  2017

மேலும் சில ஆன்மிக நூல்கள்

  • மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை – ஆன்மீகம் – கைலாஷி
  • கொங்கு மண்ணின் சாமிகள் – இரா.முத்துசாமி
  • நவ பிருந்தாவனம் மந்திராலயம் தரிசனம்
  • நாயன்மார்கள்

Posted

in

,

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “நாடி நாடி நரசிங்கர் தரிசனம் – அஹோபில யாத்திரை – கைலாஷி”

  1. vijayalakshmi Avatar
    vijayalakshmi

    arumai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.