தமிழ்
அட்டை வடிவமைப்பு: Mairiyam, அருண்குமார்
மின்னூல் வடிவமைப்பு: SV அரவிந்தம்
மின் பதிப்பு : பிப்ரவரி 2018
இம்மின்னூல் Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
படிக்கலாம் – பகிரலாம் – அச்செடுக்க, வணிக ரீதியில் பயன்படுத்த அனுமதியில்லை
முதலில் சொல்வது…
தீராக் கனா கதையை எழுத எனக்கு அடிப்படையான ஒரே விஷயம் பெங்களூரு. பெங்களூருவில் இருந்தபடி பெங்களூருவை மையமாக வைத்து ஒரு கதை எழுத விருப்பம் இருந்தது. அந்த காலகட்டத்தில் எனக்கு கிடைத்த நேரங்களிலெல்லாம் சில சிறுகதைகளையும் வாசிக்கத் துவங்கியிருந்தேன். ஏராளமான சாதாரண சிறுகதைகளையும் சும்மாவேனும் வாசித்து வைத்திருந்தேன்.
முதலில் என் பார்வையிலிருந்து பெங்களூரை எழுதலாம் என்ற எண்ணம். அதில் நானொரு கதாபாத்திரமாய் இருப்பது என முடிவெடுத்தேன். Narration பாணியில் எழுதுவதுதான் அப்போதெல்லாம் எனக்கு விருப்பம். அதில் நானே பாத்திரமாகிக் கொள்வது எளிது!
நிறைய கதைகள் யோசித்து, பின் இதை எழுதலாம் என்று எட்டு பக்க அளவில் ஒரு கதை மாதிரி ஒன்றை எழுதி தோழர் ஒருவருக்கு அனுப்பினேன். அவர் படித்துவிட்டு இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் கூட இப்படி எழுதிவிடுகிறார்கள். நீ இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதிப்பார் என்றார். எனக்கும் அதுவே சரியெனப் பட்டது. ஏனென்றால் நான் அதற்கு முன் அம்மாதிரி நிறைய உண்மை நிகழ்வுகளையே பக்கம் பக்கமாக நிரப்பி எழுதி வைத்திருந்தேன்.
எவ்வளவு உண்மை எழுதினாலும், கதாபாத்திரப் பெயர்கள் தாண்டி இடங்களின் பெயர்களை முடிந்தமட்டும் மறைத்தே வைத்தேன். அது ஒரு மகிழ்ச்சி. இக்கதையிலும் இடங்களின் பெயர்கள் எதையும் நான் குறிப்பிடவே இல்லை.
இக்கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் போலவே எனக்கும் உறக்கமும், தேநீரும் பிடிக்கும் என்பதைத் தாண்டி இக்கதையில் நானறிய உண்மை ஏதுமில்லை.
இதே கதையை வேறொரு களத்திலும் எழுதலாம். எனக்கு இதை பெங்களூருவை மையமாக வைத்து எழுதுவதில் ஒரு நிம்மதி. சென்னையிலோ, டெல்லியிலோ, மும்பையிலோ, கொல்கத்தாவிலோ இதே கதையோ, இது போன்றதொரு கதையோ நடப்பது போலவும் யாரேனும் எழுதிப்பார்க்கலாம். அப்படி எழுதி அது நன்றாக அமைந்தால் எனக்கொரு பிரதி அனுப்புங்கள்.
இக்கதையை எழுதி முடித்த சமயத்தில் இதன் முடிவு இல்லாத பகுதியை முழுமையாகப் படித்து எனக்கு தேவையான திருத்தங்கள் தந்த, தலைப்பு தீரா கனா-வா? தீராக் கனா-வா? என்றதும் அதற்காக இலக்கணக்குறிப்பெல்லாம் புரட்டி ’க்’ வரும் என உறுதியாய் சொன்ன, இப்போது இவ்வுலக வாழ்விலிருந்து உதிர்ந்துபோய் என் போல சிலரின் நினைவில் வாழும் தோழன் அர்ஜூனை இப்போதும் மனம் கனக்க நினைத்துக் கொள்கிறேன்.
முதலில் நான் யோசித்த கதை வேறொரு கதை. அதை எழுதினால் கண்டிப்பாக இப்படி மின்னூலாக்கும் எண்ணமே வந்திருக்காது. இப்போது யோசித்தால் அப்போது யோசித்ததெல்லாம் கதையே இல்லை என்று தோன்றுகிறது. இன்னும் சில காலம் தள்ளி யோசித்தால் இக்கதையைக் கூட ஒரு நல்ல கதையென்றே எண்ண மாட்டேன் என நம்புகிறேன். அப்படியொரு பக்குவமும், வளர்ச்சியும், அறிவும் எனக்கு வளரும் என்று எப்போதும் நெஞ்சில் நிறுத்திக் கொள்கிறேன்.
நன்றியுடன்
தமிழ்
https://thamizhg.wordpress.com
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “தீராக் கனா – நெடுங்கதை epub” theerak-kana-novel.epub – Downloaded 1599 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “தீராக் கனா – நெடுங்கதை mobi” theerak-kana-novel.mobi – Downloaded 746 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “தீராக் கனா – நெடுங்கதை A4 PDF” theerak%20kanaa%20-%20A4.pdf – Downloaded 1600 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “தீராக் கனா – நெடுங்கதை 6 inch PDF” theerak%20kanaa%20-%206%20Inch.pdf – Downloaded 959 times –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/TheerakKanaa
புத்தக எண் – 363
மார்ச் 12 2018
Leave a Reply