முதல்புத்தகம்
(தேர்ந்தெடுத்தநுண்பதிவுகள், குறும்பதிவுகள், புனைவுகள்) 
அட்டை வடிவமைப்பு: தமிழ்
மின்னூல் வடிவமைப்பு: ஓஜஸ் – aoojass@gmail.com
மின் பதிப்பு: செப்டம்பர் 2015
இம்மின்னூல் Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
படிக்கலாம்– பகிரலாம் – அச்செடுக்க, வணிக ரீதியில் பயன்படுத்த அனுமதியில்லை
உள் புகுமுன்…
இது என் முறை. இது என் கணக்கில் முதல் வரவு. பலத்த யோசனைக்குப் பிறகே இந்த முதல் மின்னூல் வெளி வந்திருக்கிறது. வெவ்வேறு தலைப்புகளின் கீழ் யோசித்து விட்டு கடைசியாக இந்தப் பிரிவில் முதல் நூலைக் கொண்டு வந்திருக்கிறேன்.
சமீப கால மின்னூல்களில் இவ்வகை நூல்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆகவே இது என் கணக்கில் முதல் முறை.
இன்றைய சூழலில், சமூக வலைதளங்களில் எழுதுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தொடர்ந்த வாசிப்போ, மற்றவர்கள் போடும் RT யோ, Like/Share –ஓ , ஏதோ ஒன்று ஒரு சாராரை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் யாரெனில், மிகக் குறுகிய காலம் வலையில் கோலோச்சிய வலைப்பதிவர்கள்தான். ஒரு வலைப்பதிவு எழுதி அதை பிழை திருத்தி, பதிவேற்றுவதற்கு ஆகும் நேரத்தை விட ட்விட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ எழுதி வெளியிடுவது எளிது. உடனடி எதிர்வினையும் உண்டு.
இங்கு நான் தொகுத்திருப்பதும் கூட நான் பல காலம் (ஏறக்குறைய 3-4 ஆண்டுகள்) பல்வேறு சமூக வலைதளங்களில் என் கணக்கில் எழுதியவை.
இதன் சுதந்திரத் தன்மைதான் எழுதத் தூண்டுகிறது. மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத இடம் கொடுக்கிற சுதந்திரம். அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ளவை அந்த சுதந்திரத் தன்மைக்கு எவ்விதத்திலும் பங்கம் செய்யாதவை. முகம் தெரியாத, முன் பின் அறியாதவர்களிடம் கூட சகஜமாக உரையாடக் கூடிய வாய்ப்பைத் தருகிறது, அறியாத, அரிதான புத்தகங்கள், சினிமா, என எல்லாமும் அறிய ஏதுவான சூழல் இப்போது நிலவுகிறது.
ஒருவகையில் இது நல்லது. இன்னொரு வகையில் கெட்டதாகவும் படலாம்.
இதைத் தொகுக்கையில் நிறைய மலரும் நினைவுகள் தோன்றின. நினைவுகள் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
என் பெயர் கொண்டு ஒரு மின்னூலேனும் வர வேண்டும் என தொடர்ந்து என்னை செலுத்திய என் தோழர்கள் சிலருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்நூல் உருவாக்கத்திலும் அவர்களின் பங்களிப்பு உண்டு. இனி அடுத்தடுத்து நான் எழுதினாலும் அதிலும் அவர்களின் பங்களிப்பு இருக்குமென நம்புகிறேன்.
என்னைத் தொடர்ந்து இன்னும் நிறைய பேர் இதைப்போலவே மின்னூல்கள் வெளியிட்டால் மகிழ்ச்சியடைவேன். நானே மற்றவர்களைத் தொடர்ந்துதானே இப்படி ஒரு நூல் வெளியிட்டிருக்கிறேன். நான் வேறு யாருக்கேனும் ஒரு தூண்டுதலாக அமைவேன் என நம்புகிறேன்.
முதல் நூல் அளவில் சிறியதாக இருந்தால், அதன் மூலம் வாசிப்பவர்களின் வாசிப்பு நேரம் இந்த நூலுக்குக் குறைவாக பயன்பட வேண்டும். என்கிற ஒரே காரணமே இந்நூலின் அளவிற்கு காரணம்.
தொடர்ந்து எழுதும் நம்பிக்கையுடன்,
தமிழ்
செப்டம்பர் 06 2015
கருத்துக்களை அனுப்ப: iamthamizh@gmail.com
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “முதல் புத்தகம் epub” first-book.epub – Downloaded 5760 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “முதல் புத்தகம் A4 PDF” first-book-A4.pdf – Downloaded 5003 times –செல்பேசிகளில் படிக்க
Download “முதல் புத்தகம் 6 inch PDF” first-book-6-inch.pdf – Downloaded 3539 times –புத்தக எண் – 224
அக்டோபர் 9 2015





Leave a Reply