
உயிரானது தனக்கான பெற்றோர்களைத் தேர்ந்தெடுத்துக் குழந்தையாகப் பிறப்பதைப் போல ஒவ்வொரு படைப்புகளும் தன்னை வெளிப்படுத்த படைப்பாளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அது கவிதையாகவோ, கதையாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ வெளிபட்ட பின்னர், தன்னை ரசித்துத் தேர்ந்தெடுப்பவனை நோக்கி தவமியற்றிக் காத்திருக்கிறது. அதன் தவப் பலனால் அப்படைப்பினை கொண்டாடும் ரசிகன் கிடைக்கிறான்.
இந்நூலில் இருக்கும் கவிதைகள் தங்களை வெளிப்படுத்த என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவே எனக்குப் படுகிறது. அதனால் என் பணி எளிதாக முடிவடைந்துவிட்டது. இனி அக்கவிதைகள் தங்களுக்கான ரசிகர்களைத் தவமிருந்து பெற்றுக் கொள்ளட்டும்.
கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தந்த காதல் மனைவி பிரியாவிற்கும், மின்னூலாக்கம் செய்ய உதவிய திரு.சீனிவாசன் அவர்களுக்கும், மின்னுலாக்கிய சிவமுருகன் பெருமாள் அவர்களுக்கும், வெளியிட்ட பிரீதமிழ்ஈபுக்ஸ் குழுவிற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன் நடராஜன்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “காதல் தந்த தேவதைக்கு” KadhalThanthaDevathai.epub – Downloaded 12551 times – 387.20 KBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “காதல் தந்த தேவதைக்கு” KadhalThanthaDevathai_A4.pdf – Downloaded 8180 times – 482.78 KBசெல்பேசியில் படிக்க
Download “காதல் தந்த தேவதைக்கு” KadhalThanthaDevathai_6inch.pdf – Downloaded 4812 times – 491.23 KBநூல் : காதல் தோல்விக் கவிதைகள்
ஆசிரியர் : ஜெகதீஸ்வரன் நடராஜன்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : CC-BY-NC-ND. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம்.
புத்தக எண் – 140




Leave a Reply