வாசக நண்பர்களே! எனது முதல் புத்தகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும், வாசகர்களின் பின்னூட்டங்களையும் மனதிற்கொண்டு, பல்வேறு நுணுக்கங்களுடன் வெளிவரும் இத்தூரிகைச் சிதறல் எனது இரண்டாவது கவிதை நூல்.
தூரிகையில் இருந்து சிதறி விழும் ஒவ்வொரு மைத்துளிக்கும் மனதிற்கினிய கவிதைகளாக வடிவம் கொடுத்துள்ளேன். இப்புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளின் பிரதிபலிப்பாய் இனிமையும் எளிமையும் இணைந்ததாய், அமைக்கப்பெற்றுள்ளது. சமுதாயப் பார்வை, இன்பம், துன்பம், ஏக்கம், காதல், நட்பு மற்றும் உறவு என்னும் பல்வேறு உட்பொருள்களில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதாய் அமைந்துள்ளது.
வாழ்வின் எதார்த்தங்களை வலிமையோடும் எளிமையோடும் வரிசைப்படுத்தியிருக்கும் எனது கவிதைகள், நிச்சயம் கவிதைப் பிரியர்களான உங்களின் மனதில் கவிதை மீதான காதலை ஆழப்படுத்தும் என நம்புகிறேன்.
தாய்த் தமிழுக்கும் தமிழர்க்கும் நிகரிலாத் தொண்டாற்றிவரும் Freetamilebooks.com நண்பர்கள் ஒவ்வொருவருக்கும், இம்மின்னூலுக்கு உதவிய அன்புச் சகோதரர் லெனின் குருசாமி அவர்களுக்கும், ஏனைய வாசக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளோடு இந்த இம்மின்னூலினை உரித்தாக்குகிறேன்.
வாசகர்கள் தங்களின் விமர்சனங்களை gandhiyameenal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், 90036 44672 என்ற எனது கைப்பேசியின் WhatsApp எண்ணிற்கும் தெரிவிக்குமாறு அன்புக் கட்டளையிடுகிறேன்.
உருவாக்கம்: கா. பாலபாரதி
மின்னஞ்சல்: gandhiyameenal@gmail.com
வெளியீடு: http://FreeTamilEbooks.com
மேலட்டை & மின்னூலாக்கம் உருவாக்கம் : Lenin Gurusamy
மின்னஞ்சல் :
மின்னூல் வெளியீடு: சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தூரிகைச் சிதறல்” ThoorighaiSidharal.epub – Downloaded 8301 times – 1.62 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தூரிகைச் சிதறல்” ThoorighaiSidharal_A4.pdf – Downloaded 7089 times – 512.41 KBசெல்பேசிகளில் படிக்க
Download “தூரிகைச் சிதறல்” ThoorighaiSidharal_6inch.pdf – Downloaded 5362 times – 608.08 KBஇணையத்தில் படிக்க – http://thoorigaisitharal.pressbooks.com/
புத்தக எண் – 136
ஜனவரி 12 2015
Leave a Reply