பள்ளிக்கு வெளியே வானம்

pallikuveliyaevannam

ராகுல் ஆல்வாரிஸ் தமிழில்: அன்பரசு சண்முகம்

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

சென்னை

 

உருவாக்கம் : ராகுல் ஆல்வாரி

மின்னஞ்சல்: [email protected]

மொழிபெயர்ப்பு : அன்பரசு சண்முகம்

மின்னஞ்சல்: [email protected]

வீட்டு முகவரி: 57, கிளுவன்காடு,

வடக்குப்புதுப்பாளையம்(அ),

ஊஞ்சலூர்(வழி), ஈரோடு – 638152

மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்

மின்னஞ்சல்: [email protected]

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : [email protected]

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

இந்த மொழிபெயர்ப்பு நூல் ராகுல் ஆல்வாரிஸின் ஒரு ஆண்டு சுதந்திரமான
வாழ்க்கையை உண்மையாக பேசுகிறது. ராகுல் ஆல்வாரிஸ் அவர்களின் தந்தை கிளாட் ஆல்வாரிஸ்
அவர்களின், தி அதர் இந்தியா பிரஸ் பதிப்பகத்திடம் முறையாக அனுமதி பெற்று தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டது.

எழுத்தாளனிடமிருந்து வணக்கம்!

ஒரு ஆண்டிற்கு முன் யாராவது என்னிடம் உன்னால் ஒரு புத்தகம் எழுத முடியுமா என்று கேட்டிருந்தால் திகைத்தபடி, நான் புத்தகம் எழுதுவதா? உங்களுக்கென்ன பைத்தியமா? எதைப்பற்றி எழுதுவது? எனக்கு என்ன தெரியும்? என்று நிச்சயம் கேட்டிருப்பேன்.

புத்தகம் எழுதியதற்கு பலவிதமான விமர்சனங்கள், பதில்கள், பாராட்டுதல்கள் கிடைக்கின்றன. ஒரு ஆண்டு காலம் நான் ஈடுபட்ட செயல்கள், கிடைத்த அனுபவங்கள், கருத்துக்களை ஓரளவு பதிவு செய்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். அதன் வீச்சை வாசகர்கள்தான் கூற வேண்டும். பதினேழு வயதில் நான் ஒரு புத்தகம் எழுதினேன் என்றால் அதற்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள், ஆதரவு என இவையில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது.

நிச்சயம் ஒரு பெரிய கேள்விக்குறி உங்கள் மனதில் இருக்கக்கூடும். சரி கடந்த ஆண்டு முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தாய் என்பதுதானே அந்தக்கேள்வி?

பள்ளி செல்லாத இடைவேளைக்காலம் முழுவதும் மாற்றுக்கல்வி முறையிலான வாழ்வனுபவங்களின் வழியே பயணித்தேன். பாம்புகள், மண்புழுக்கள், தவளைகள், சிலந்திகள் மற்றும் பல்வேறான உயிரினங்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

என் சிறுவயது வரலாற்று சம்பவத்திற்குச் செல்வோம். இயற்கை குறித்த அதிகமான ஆர்வம் மிக இளம் வயதிலே இருந்தது. எறும்புகள் நகர்ந்து செல்வதை பல மணிநேரங்கள் உட்கார்ந்து கவனிப்பது, கோழிகள் உணவுதேடி மண்ணைக் கிளறிச் செல்லும் பயணத்தைப் பின்தொடர்வதை சிறு வயதிலிருந்தே நீ செய்கிறாய் என்று பெற்றோர்கள் கூறியது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கோழிகள், எறும்புகள் குறித்த சம்பவங்களை என்னால் இன்றும் தகவல்களை செறிவு குன்றாமல் கூற முடியும்.

சேவல்களை சண்டைக்கு பழக்கிக் கொண்டிருப்பது என்று சிறு வயதிலே பல்வேறு உயிரிகளை நான் செல்லப்பிராணிகளாக வளர்த்தேன். சிறிய வாத்து, வெள்ளை நிற எலியை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் தோளில் ஏற்றிக்கொண்டு வெவ்வேறு இடங்களுக்கு செல்வது என்பதில் முயல்களையும் பின்னர் சேர்த்துக்  கொண்டேன். பெரியவனாகும்போது, எனது விலங்குகளின் மீதான ஆர்வம் காடுகளின் மீது திரும்பியது.

நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பெற்றோருடன் புனே சென்றோம். வாழ்வின் முக்கியமான இடமாக இன்றுவரை கருதும் பாம்புப் பூங்காவினை அன்றுதான் முதன்முதலாக பார்த்தேன்.

பாம்புகளின் மீதும், அதனை மனிதர்கள் லாவகமாக கையாளும் திறனின் மீதும் பெரும் ஆர்வம் எப்போதுமே எனக்கு உண்டு. பாம்புப் பூங்காவின் தலைவர் திரு. நீலம் கைரேவை என் தந்தை சந்தித்து எனது எஸ்எஸ்சி தேர்வுகள் முடிந்தபின் பாம்புகள் பற்றி கற்றுத்தர முடியுமா என்று கேட்டார். அவரும் மிக மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். எஸ்எஸ்சி தேர்வை நல்ல முறையில் எழுதினால், ஒரு ஆண்டு காலத்தில் உனக்கு பிடித்த அனைத்தையும் செய்யலாம் என்று எனது அப்பா கூறியபோது என்னால் நம்பவே முடியவில்லை. தந்தையின் எண்ணம்தான் என்னை இன்று நூல் எழுதும்வரை கூட்டி வந்திருக்கிறது.

தந்தையின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு உற்சாகமாக எனது எஸ்எஸ்சி தேர்விற்குத் தயாராகத் தொடங்கினேன். தேர்வு முடிவுகள் வெளிவந்தன. எண்பத்தேழு விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதோடு, தோராயமாக இருபதாயிரம் மாணவர்கள் எழுதிய தேர்வில் நூற்று அறுபத்து எட்டாவதாக நல்ல மதிப்பெண்களோடு பட்டியலில் இடம்பெற்றிருந்தேன். என் அனைத்து நண்பர்களும் தளர்ந்த நடையில் கல்லூரி செல்லத் தொடங்கியிருந்தனர். என் கண்முன்னே இருந்த ஓராண்டு காலத்தில் சுதந்திரம், மகிழ்ச்சி, வனவாசி ஒத்த வாழ்வு எனப் பலவும் நிறைந்திருந்தன.

என் பெற்றோர் என்னிடம் விதித்த முக்கியமான நிபந்தனை சிறியதோ, பெரியதோ எந்த விஷயங்கள் என்றாலும் அதனை நாட்குறிப்பில் எழுதி வைக்கவேண்டும். இதனோடு கூடுதலாக ஒவ்வொரு மாதமும் ஒரு அறிக்கை ஒன்றோடு சிறப்பு அறிக்கையாக எனக்கு பிடித்த மகிழ்ச்சியாக செயல்பட்ட ஒரு நிகழ்வு குறித்து எழுதவேண்டும். இதனை முதலில் எழுதும்போது பள்ளியின் வழக்கமான தேர்வுகள் நினைவிற்கு வந்தன. முதலில் எழுதப்பட்ட என்னுடைய அறிக்கைகள் சலிப்பூட்டுவதாகவும், ஒன்றுபோலவும் இருப்பதாக உணர்ந்தேன்.

ஒரு நாள் இரவு அம்மா நாட்குறிப்பின் முக்கியத்துவத்தை கூறினார். அதோடு நாட்குறிப்பினை எப்படி எழுதவேண்டும் என்றும், நாட்குறிப்பு என்பது ஒரு புகைப்படத்தை பார்த்தவுடனே நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருவது போல, எழுத்துக்களும் மிகச்சிறந்த விவரணைகளாக ஒரு நிகழ்வைக் கூறும் என்று அம்மா கூறிய பின்பு உணர்ந்தேன். இந்த புத்தகமும் எழுத முக்கியக் காரணமே முன்னர் நான் எழுதிய நாட்குறிப்புகள்தான். எழுத்துக்கள் என் நினைவைத் தூண்டுவதால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் மிகத்தெளிவாக என்னால் இப்போதும் கூறமுடியும்.

தயாரா, பயணிப்போமா?

ராகுல் ஆல்வாரிஸ்

 

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “பள்ளிக்கு வெளியே வானம் epub” pallikku-veliye-vaanam.epub – Downloaded 5615 times – 474.35 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “பள்ளிக்கு வெளியே வானம் mobi” pallikku-veliye-vaanam.mobi – Downloaded 1882 times – 1.20 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “பள்ளிக்கு வெளியே வானம் A4 PDF” pallikku-veliye-vaanam-A4.pdf – Downloaded 12372 times – 957.50 KB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “பள்ளிக்கு வெளியே வானம் 6 Inch PDF” pallikku-veliye-vaanam-6-inch.pdf – Downloaded 7484 times – 1.09 MB

 

 

புத்தக எண் – 98

ஜூலை  20  2014

 

 

 

மேலும் சில நூல்கள்

  • உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்
  • இங்கிலாந்தில் சில மாதங்கள் – கட்டுரைகள் – பேரா. டாக்டர். ரா.சீனிவாசன்
  • சீர்மிகு சிவகங்கைச் சீமை – கட்டுரைகள் – எஸ். எம். கமால்
  • ஏலக்காய் – கட்டுரைகள் – பூவை.எஸ்.ஆறுமுகம்

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “பள்ளிக்கு வெளியே வானம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.