
நீங்கள் படித்து மகிழ இந்த ‘சொதப்பல்களை’ மின்னூல் வடிவத்தில் தந்துள்ளேன். இதைப் படிக்கும் போது கண்டிப்பாக உங்கள் வாழ்வில் நீங்கள் சொதப்பிய அனுபவங்கள் உங்கள் நினைவில் வந்து மோதுவதை உணர்வீர்கள். ஏறத்தாழ உங்களின் சொந்த சொதப்பல் அனுபவங்கள் போலவே இருக்கும். நீங்கள் சொதப்பியிருக்கிறீர்கள் என்று சொல்ல வரவைல்லை . உதாரணத்திற்கு சொல்கிறேனே….., தயிர் சில நாட்களில் நம் வீட்டில் உறையாமல் இருந்திருக்கும். தயிர் உறையாததால் நீங்கள் சந்தித்த சில சங்கடங்கள் இப்பொழுது நினைத்தால் உங்களுக்கு சிரிக்கத் தோன்றுகிறது அல்லவா? அந்த மாதிரி சம்பவங்களின் தொகுப்பே ”சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் “. படித்துப் பாருங்கள்.
ஒவ்வொரு அனுபவத்தையும் படித்து முடித்தபின் உங்க முகத்தில் தவழும் சிரிப்பையோ, புன்னகையையோ என்னால் பார்க்கத் தான் முடியாதே தவிர உணர முடியும். உங்களின் ஒவ்வொரு புன்னகையும் எனக்கு மிகப்பெரிய விருது. என் எழுத்துக்குக் கிடைக்கும் மிகப் பெரிய கவுரவம்.
இந்த நூல் வெளியாக உதவிய திரு. சீனிவாசன் அவர்களுக்கும் ,Free Tamil Ebooks teamஇல் இருக்கும் அத்துணை பேருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
மின்னூலைத் தரவிறக்கம் செய்து படிக்கும் உங்களைப் போன்ற வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..
படித்து, சிரித்த அனுபவங்களை பின்னூட்டங்கள் வாயிலாக என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
நானும் மகிழ்வேன்.
நன்றி,
ஆசிரியர் – ராஜலட்சுமி பரமசிவம்
Leave a Reply