அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டை ஆன்டிராய்டு செயலியில் புது வசதிகளோடு வரவேற்கிறோம்.
செயலியை https://play.google.com/store/apps/details?id=com.jskaleel.fte இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.
புது வசதிகள் –
1. புதிய மின்னூல்களின் வருகை அறிவிப்பு (Push Notification)
2. அறிவிப்புகள் வேண்டாமெனில் நிறுத்தி விடலாம்.
3. புதிய மின்னூல் படிப்பான். இது வரை FBReader என்ற செயலியையே பயன்படுத்தி வந்தோம். ஒரு சோதனை முயற்சியாக செயலியின் உள்ளேயே ஒரு மின்னூல் படிக்கும் வசதியை தந்துள்ளோம். FolioReader என்ற மென்பொருளை இணைத்துள்ளோம்.
4. உள்ளார்ந்த மின்னூல் மென்பொருளில் ஏதேனும் சிக்கல் எனில் கவலை வேண்டாம். பழையபடி FBReader ஐயே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
5. மின்னூல்கள் வகை வாரியாக வரிசைப் படுத்தப் படுகின்றன
6. பல மி்ன்னூல்களை ஒரே நேரத்தில் பதிவிறக்கலாம்.
7. நூல்பெயர்/ஆசிரியர் பெயர் தந்து தேடும் வசதி
இந்த செயலியை கட்டற்ற மென்பொருளாக, இலவசமாக, மூலநிரலுடன், விளம்பரம் ஏதுமின்றியே வெளியிடுகிறோம்.
செயலியின் மூலநிரலை இங்கே பெறலாம்.
https://github.com/jskcse4/FreeTamilEBooks
நீங்களும் செயலியின் வளர்ச்சியில் பங்கு பெறலாம்.
செயலியின் ஏதேனும் பிழைகள் எனில், இங்கு புகார் தருக
https://github.com/jskcse4/FreeTamilEBooks/issues
செயலியை இதுவரை பதிவிறக்கம் செய்த 13,685 பயனர்களுக்கும் நன்றி.
செயலியை உருவாக்கிய நண்பர் கலீல் ஜாகீர் (jskcse4@gmail.com) அவர்களுக்கும், தொடர்ந்து ஆதரவளிக்கும் எழுத்தாளர்கள், பங்களிப்பாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

கலீல் ஜாகீர்
சில திரைப்பிடிப்புகள் –