பிரியா
இராஜேஸ்வரி
ஆஸ்திரேலியாவில் வாழும் கணிணி வல்லுனர். முன்னாள் கல்லூரி ஆசிரியர்.
பங்களிப்பு – மின்னூலாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
இரா. சுப்ரியா
புதுச்சேரி, சென்னை
பங்களிப்பு – ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
சிவமுருகன் பெருமாள்
அமெரிக்க வாழ் கணிணி நிபுணர்
பங்களிப்பு – மின்னூலாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
கிஷோர்
சிங்கப்பூர் வாழ் iOS நிபணர்
பங்களிப்பு – FreeTamilEbooks க்கு iOS மென்பொருள் உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
ஜெயேந்திரன் சுப்பிரமணியம்
சொந்த ஊர் ஈரோடு மாவட்டதில் உள்ள வெள்ளோட்டாம்பரப்பு. சோனா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு தற்பொழுது ஒரு தனியார் மென்பொருள் சேவை நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூனேயில் பணியாற்றிவருகிறார் . பொழுதுபோக்கு திரைப்படங்கள் பார்ப்பது , பாடல்கள் கேட்பது, தொழில்நுட்பம் பற்றி இணையத்தில் உலாவுதல், புத்தகங்கள்(ஆங்கிலம் மற்றும் தமிழ் புதினங்கள்) படிப்பது. தற்பொழுது freetamilebooks.com இல் பங்களிக்கிறார்.
பங்களிப்பு – மின்னூலாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
ப்ரியமுடன் வசந்த்
அரபு நாட்டில் வசிக்கும் வரை கலைஞர்
பங்களிப்பு – அட்டைப்படம் உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
ஜெகதீஸ்வரன்
ஜெகதீஸ்வரன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூரில் பிறந்தவர். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக சென்னையில் பணியாற்றி வருகிறார். இணைய இதழ்களிலும் வலைப்பூக்களிலும் கதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் புதினம் தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை, பேட்வுமன், பேட்கேர்ள் போன்ற பல கட்டுரைகளையும் எழுதியுள்ளர். சோழர், பொன்னியின் செல்வன், பேட்மேன் என சில வார்ப்புருக்களை வடிவமைத்துள்ள இவர், விகடன் குழும இதழ்களின் அட்டைப் படங்களையும், பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களின் ஓவியங்களையும் பதிவேற்றியுள்ளார்.
பங்களிப்பு – அட்டைப்படம் உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
லெனின் குருசாமி
காரைக்குடியில் வாழும் வரைகலைஞர். M.Sc முடித்து விட்டு தற்பொழுது Sun Creations – Powered by Open Source (Printing, Designing and Cyber Cafe centre) மையத்தை இயக்கி வருகிறார்.
பங்களிப்பு – அட்டைப்படம் உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
மு. சிவலிங்கம்
ஒரு தமிழகத்தைச் சேர்ந்த கணினி சார் தொழில்நுட்ப எழுத்தாளர். இந்திய அரசின் தொலைத்தகவல் தொடர்புத் துறையில் 33 ஆண்டு காலம் பொறியாளராகப் பணியாற்றி 2007 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்ற இவர் கணிதம், தமிழ் இலக்கியம், தொழிலாளர் சட்டம், மனிதவள மேம்பாடு மேலாண்மை, கணினிப் பயன்பாட்டு அறிவியல் போன்ற பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவர் கணினி தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு பல ஆய்வுக் கட்டுரைகளையும் படித்துள்ளார்.பல ஆண்டுகளாக கணிணி துறை நூல்களை தமிழில் எழுதி, பலரும் கணிணி துறையில் நுழைய ஆசிரியராக இருப்பவர்.
பங்களிப்பு – பல்வேறு எழுத்துருக்களில் வரும் மின்னூல்களை ஒருங்குறியாக்கம் செய்தல்
மின்னஞ்சல் – [email protected]
மனோஜ் குமார்
கோவையில் உள்ள வரை கலைஞர்
பங்களிப்பு – அட்டைப்படம் உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
கலீல் ஜாகீர்
விழுப்புரத்தைச் சேர்ந்த கட்டற்ற மென்பொருள் ஆர்வலர். ஆன்டிராய்டு மென்பொருள் உருவாக்குபவர்
பங்களிப்பு – ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
அன்வர்
சென்னையைச் சேர்ந்த கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்.
பங்களிப்பு – கொள்கைப் பரப்பு, எழுத்தாளர்களை அணுகி, ஆக்கங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் வெளியிடக் கோருதல், மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்
மின்னஞ்சல் – [email protected]
பிரசன்னா
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் வாழும் மாணவன். B. Sc. physics படிக்கிறார்
பொழுதுபோக்கு : ஒவியங்கள் வரைதல், அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்து அறிதல், கொஞ்சம் கவிதைகள் எழுதுதல் மற்றும் படித்தல், அவ்வப்போது அறிவியல் வலைப்பூ எழுதுவது.
பங்களிப்பு : மின்னூலாக்கம்
மின்னஞ்சல் – [email protected]
அ. இரவிசங்கர்
புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர்.
பங்களிப்பு – freetamilebooks.com வலைத்தள மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு, பரப்புரை.
த. சீனிவாசன்
சென்னையில் வாழும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்.
பங்களிப்பு – மின்னூலாக்கம், மின்னூல் வெளியீடு, பரப்புரை
மின்னஞ்சல் – [email protected]
Leave a Reply