நமது FreeTamilEbooks.com திட்டம் மின்னூல்கள் படிப்பதையே பெரிதும் ஆதரிக்கிறது. ஆனால் சிலர் அச்சு வடிவில் படிக்க நூல்களை அச்சிடுவதை அறிகிறோம்.
மேலும் சில எழுத்தாளர்கள் தாம் வெளியிட்ட மின்னூல்களின் அச்சுப் பிரதி தம்மிடம் இருந்தால் மிகவும் மகிழ்வர்.
இது போன்ற தேவைகளுக்காக, ஒரு பிரதி அல்லது ஒரு சில பிரதிகள் மட்டும் அச்சிட்டுக் கொள்ளும் வகையான Print On Demand சேவையை, மிகக் குறைந்த விலையில் தர, காரைக்குடியைச் சேர்ந்த நண்பர் லெனின் குருசாமி முன்வந்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான விலை விவரம்
பக்கத்திற்கு 45 பைசா (1 பக்கதிற்கு 2 பக்கங்கள், 2 பக்கங்களுக்கு 4 பக்கங்கள்)
நூல் கட்டுமானத்திற்கு ரூ.15
அட்டைபடம் வண்ணத்தில் அச்சு எடுக்க விரும்பினால் ரூ.7
உதாரணத்திற்கு 6 inch PDF ல் 255 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்திற்கு,
255/4 = 63.5 X 0.45 X 2 = 57 + 15 = ரூ.72
பக்கத்தின் தடிமன் 70GSM
தபால் செலவு தனி.
இந்த விலை FreeTamilEbooks.com திட்டத்தில் உள்ள மின்னூல்களுக்கு மட்டுமே.
மேலும், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் ‘NonCommercial’ என்ற வார்த்தை இருந்தால் அந்த நூலை, அச்சிட்டு விற்பனை செய்ய இயலாது. எனவே “NonCommercial” இல்லாத நூல்களை மட்டும் அச்சு நூலாக வாங்கலாம். இல்லையெனில், நூல் ஆசிரியருக்கு தனியே மின்னஞ்சல் எழுதி, அவரிடம் அனுமதி வாங்கி, பின் அச்சிட்டு வாங்கலாம்.
தொடர்பு விவரங்கள்
திரு. லெனின் குருசாமி
[email protected]
+91 95780 78500
57/1, கல்லூரி சந்திப்புச் சாலை,
அழகப்பாபுரம்,
காரைக்குடி – 630 003
Comments
5 responses to “FreeTamilEbooks மின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்”
நீதியைத்தேடி…நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்!!!
“மநுவரையுங்கலை”
ஆசிரியர்;
திரு.வாரண்ட் பாலா
அச்சி வடிவில் நூலாக கிடைக்குமா
என் முகவரி ;
பி.தார்சியுஸ்
6/22,பண்டகசாலை தெரு,
வேளாங்கண்ணி &அஞ்சல்,
நாகப்பட்டினம் – மாவட்டம்,
பின்:- 611111.
செல்:- 9865965206
Book. நண்பர்கள் வெற்றி கொள்வதும் மற்றவர்களை கவர்ந்திளுப்பதும் எப்படி
Authour படேல் கார்னகி
Book. நண்பர்கள் வெற்றி கொள்வதும் மற்றவர்களை கவர்ந்திளுப்பதும் எப்படி
Authour படேல் கார்னகி
[email protected]
அற்புதமான முயற்சி. இதன்மூலம் எழுத்தாளர்களும் பயனடைவார்கள். வாழ்த்துகள்