FreeTamilEbooks.com ன் பொறுப்புத் துறப்பு

FreeTamilEbooks.com மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதில்லை. எந்த ஒரு மதத்தையும் கடவுளையும் போதிப்பதில்லை.

FreeTamilEbooks.com ல் மருத்துவம் தொடர்பான பல மின்னூல்கள் இருப்பினும், அவை மிகவும் திருத்தமான தகவல்கள்தான் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மருத்துவ சம்பந்தமான எந்தவொரு கட்டுரையிலும் கூறப்பட்டிருக்கும் அல்லது மேற்கோளாக காட்டப்பட்டிருக்கும் எந்தவொரு கூற்றும் உண்மையானது, சரியானது, திருத்தமானது, அல்லது தற்கால நடைமுறையிலுள்ளது என்பதற்கு எந்தவொரு உறுதி மொழியும் வழங்க முடியாது. இப்படியான அனேகமான பகுதியாகவோ அன்றேல் முழுமையாகவோ உத்தியோகபூர்வமற்றவர்களால் எழுதப்படுகிறது. மருத்துவ சம்பந்தமான ஒரு கூற்று மிகச் சரியானதாக இருந்தாலும் கூட, அந்தக் கூற்றானது, தங்களது நோய்க்கோ அல்லது அறிகுறிகளுக்கோ உபயோகிக்க முடியாததாக இருக்கலாம்.

FreeTamilEbooks.com ன் மின்னூல்களில் காணப்படும் மருத்துவ ரீதியான குறிப்புக்கள் பொதுவான தகவல்களாக இருக்க முடியுமேயன்றி, ஒரு உத்தியோக பூர்வமான மருத்துவருடைய ஆலோசனையை எந்த விதத்திலும் பிரதியீடு செய்ய முடியாதது ஆகும்.  FreeTamilEbooks.com மின்னூல்கள் மருத்துவர் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.


மருத்துவ ஆலோசனை வழங்குவதோ அல்லது மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கான முயற்சியோ, FreeTamilEbooks.com திட்டத்தின் நோக்கம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.

போலவே, FreeTamilEbooks.com திட்டம் எந்த மதம் சார்ந்ததும் அல்ல. ஆன்மிக களுக்கு சான்றுகள் இருப்பதில்லை. இங்கு வெளியாகும் சார்ந்த மின்னூல்களை, முழுமையாக நம்ப வேண்டாம். அவற்றின் உண்மைத் தன்மையை சோதித்து வெளியிடுதல் என்பது இயலாது. நூலாசிரியர்களின் உழைப்புக்கும், அவர்களது இறை நம்பிக்கைக்கும் மரியாதை செலுத்தும் விதமாகவே அவற்றை வெளியிடுகிறோம். ஆன்மிக நூல்களில் உள்ள கருத்துகளை நம்பும் முன் அவற்றை நன்கு கேள்வி கேட்டுத் தெளிய வேண்டுகிறோம்.

FreeTamilEbooks.com வெளியிடும் மின்னூல்களில் காணப்படும் மருத்துவம்/ஆன்மிகம் தொடர்பான எந்தவொரு தகவலையும் பாவிப்பதனாலோ அல்லது பின்பற்றுவதனாலோ ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அல்லது முடிவுகளுக்கு, FreeTamilEbooks.com திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் எந்தவொரு தனி நபரோ, அமைப்பு இயக்குனர்களோ, பரப்புரை செய்பவர்களோ, நன்கொடை வழங்குபவர்களோ அல்லது FreeTamilEbooks.com திட்டத்துடன் தொடர்புடைய எவருமோ எந்தவொரு பொறுப்பும் ஏற்க மாட்டார்கள்.

 


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “FreeTamilEbooks.com ன் பொறுப்புத் துறப்பு”

  1. Bala Avatar
    Bala

    Nice

    1. Ragu Avatar
      Ragu

      Good.