நண்பர்களுக்கு,
வணக்கம். உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி.
எனது முதல் மின்னூல் வெளியாக உங்கள் குழு செய்த
உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்.
என் எழுத்தை – பைசா செலவின்றி,
எந்த பதிப்பகத்தினரையும் ஒரு தடவை கூட நேரில் சென்று
பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் –
புத்தக வடிவில் பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியே தனி.
எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் நீங்கள் செய்யும்
இந்தப் பணி – ஒரு அற்புதமான தொண்டு.
கிட்டத்தட்ட 2000 பேர் இந்த மின்னூலை பகிர்ந்து
கொண்டுள்ளார்கள் என்கிற செய்தியும் எனக்கு
மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
உங்கள் பணி, மேலும் பல புதிய எழுத்தாளர்களை
வலைக்கு கொண்டு வரும்.
உங்கள் பணி தொடர்ந்து சிறக்க –
என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன்,
-காவிரிமைந்தன்